‘ரோமன் ரெய்ங்ஸ்’சை பின்னுக்குத்தள்ளி மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த ‘சார்லட் பிளேர்’.

Charlotte Flair Replaces Becky Lynch at WrestleMania 35
Charlotte Flair Replaces Becky Lynch at WrestleMania 35

ரசிகர்களுக்கு பிடிக்காத சில நிகழ்வுகள் மோசமான சாதனையை உருவாக்குவது உண்டு. அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் கடந்த வார டபிள்யூ.டபிள்யூ.ஈ ‘ரா’ ஷோவில் நடந்தது. அதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை இங்கு காண்போம்.

கடந்த மாதம் நடந்த ‘ராயல் ரம்பில்’ போட்டியில் பெண்கள் பிரிவில் ‘பெக்கி லிஞ்ச்’ வெற்றி பெற்று வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ‘ரசல்மெனியா’ போட்டியில் ‘ரான்டா ரௌஸி’யிடம் மோதுவதற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் முந்தைய வாரம் நடந்த ராவ் மற்றும் ஸ்மாக்டவுன் ஷோக்களில் தங்களை தாக்கியதற்காக பெக்கி லிஞ்ச் மன்னிப்பு கேட்டாலொழிய பெக்கிக்கு அந்த ‘ரசல்மெனியா’ போட்டி வாய்ப்பைத் தர முடியாது என ‘டிரிபிள் ஹெச்’ மற்றும் அவரது மனைவி ‘ஸ்டாஃபேனி மக்மஹோன்’ உறுதிபடக் கூறினர்.

பெக்கி லிஞ்சும் ஒருவழியாக மன்னிப்பு கோர பெக்கிக்கு ‘ரசல்மெனியா’வில் ‘ரான்டா ரௌஸி’யிடம் மோதுவதற்கான வாய்ப்பை ‘டிரிபிள் ஹெச்’ வழங்கினார். ஆனால் உடனடியாக குறுக்கிட்ட டபிள்யூ.டபிள்யூ.ஈ சேர்மன் ‘வின்ஸ் மக்மஹோன்’ தன்னால் பெக்கியன் மன்னிப்பை ஏற்க முடியாது எனக்கூறி பெக்கி லிஞ்ச்சை 60 நாட்களுக்கு ‘சஸ்பென்ட்’ செய்தார்.

Becky Slapped Triple-H on SmackDown Live
Becky Slapped Triple-H on SmackDown Live

இதனால் ‘பெக்கி லிஞ்ச்’ தனது கனவு போட்டியான ‘ரசல்மெனியா’வில் ‘ரான்டா ரௌஸி’யிடம் மோதுவதற்கான வாய்ப்பை இழந்தார். மேலும் உடனே ‘வின்ஸ் மக்மஹோன்’ ‘ரசல்மெனியா’வில் ரா சாம்பியன்ஷிப்க்காக ‘ரான்டா ரௌஸி’யிடம் மோதப்போகும் புதிய போட்டியாளராக ‘சார்லட் ப்ளேரை’ அறிமுகப்படுத்தினார். இது அங்கிருந்த ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியது.

'வின்ஸ் மக்மஹோன்’ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரர்களுக்கு இதுபோன்ற தொல்லைகள் கொடுப்பது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்த வீரர்களான ‘ப்ரெட் ஹார்ட்’, ‘ஸ்டோன் கோல்ட் மற்றும் ஸ்டீவ் ஆஸ்டின்’, ‘டேனியல் பிரையன்’, ‘சி.எம் பங்க்’ மற்றும் ‘ரோமன் ரெய்ங்ஸ்’ ஆகியோருக்கு எதிராக இவரது பல நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அந்த போட்டியாளர்கள் இவருக்கு எதிராக திரும்பும் போது அது போட்டியை இன்னும் சுவாரசியமாக மாற்றி அதிக ரசிகர்களை கவரும் என்பதே இவர் எண்ணமாகும்.

Vince McMahon - Chairman of WWE
Vince McMahon - Chairman of WWE

‘பெக்கி லிஞ்ச்’க்கு தற்போது ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால் இவர் மீது ‘வின்ஸ் மக்மஹோன்’ இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தற்போது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது.

‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’ தனது யூ-ட்யூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்ட மூன்று நாட்களில் இந்த வீடியோ சுமார் 68000 ‘டிஸ் லைக்’குகளை (Dis-like) பெற்று அதிக ‘டிஸ் லைக்’ பெற்ற ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’ வீடியோ என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பாக ரோமன் ரெய்ங்சின் ‘திஸ் இஸ் மை யார்டு’ என்ற வீடியோ 38000 ‘டிஸ் லைக்’குகளை பெற்று முதலிடத்தில் இருந்து வந்தது. இது ரோமன் ரெய்ங்ஸ் ‘ரசல்மெனியா’ போட்டியில் அண்டர்டேக்கரை வெற்றி கொண்டதற்கு பிறகு பேசிய நிகழ்வாகும்.

தற்போது இந்த மோசமான சாதனையை சார்லட் பிளேயரின் வீடியோ முறியடித்துள்ளது. இது ‘வின்ஸ் மக்மஹோன்’ மீது ரசிகர்கள் கொண்ட கோபத்தின் வெளிப்பாடு என்பது தெளிவாக தெரிவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ‘பெக்கி லிஞ்ச்’ மீதான தடை நீங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.