அந்த காலத்தின் பழமொழி போல் "நல்ல காரியங்கள் கடைசியில் முடிவுக்கு வரும்"
ரசிகர்களுக்கு அவர்களது பிடித்த சூப்பர்ஸ்டார்கள் ஓய்வுபெறமால் காலம் முழுவதும் அவர்களை உற்சாக படுத்தவேண்டும். ஸ்டோன் கோல்டு ஸ்டீவ் ஆஸ்டின், தி ராக், பிரெட் ஹார்ட் மற்றும் தி அண்டர்டேக்கர் போன்ற ஜாம்பவான்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தி கொண்டே இருக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.
எனினும் அவர்களும் ஓர் நாள் ஓய்வுபெற்று தான் ஆகவேண்டம். அதில் பெரும்பாலானோர் வேறு வேளை தேடிக்கொள்கின்றனர். பலர் ஓய்வுபெற்றும் WWE-இன் விளம்பரத்திற்காக மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.
தற்போது சமீபத்தில் தங்களது ஓய்வினை அறிவித்த WWE சூப்பர்ஸ்டார்களை பற்றி காண்போம்.
#5. ஜோய் மெர்க்யூரி
மற்றொரு முன்னாள் டாக் டீம் சாம்பியன் ஆன ஜோய் ஓய்வு பெற்றது WWE ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
2005-ல் தனது பயணத்தை துவங்கிய மெர்க்யூரி அப்போது ஜானி நிட்ரோ மற்றும் மெலினா உடன் MNM என்ற குழுவில் இருந்தார். இந்த குழு பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
குழு பிரிந்ததற்கு பின்பு ஜோய் சிஎம் பண்க்கின் ஸ்ட்ரெயிட் எட்ஜ் சொசைடியின் அங்கமாய் இருந்தார், ஜேமி நோபிளுடன் இனைந்து, இவர் அங்கம் வகித்த ஜேஜே செக்யூரிட்டி ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர்தான் "தி ஷில்டு" என அழைக்கப்பட்ட டீன் அம்ப்ரோஸ், ரோமன் ரெய்ன்ஸ் மற்றும் சேத் ரோல்லின்ஸ் இணைய காரணமாய் இருந்தார் என்பது தெரியவந்தது.
#4.செரீனா டீப்
இவரின் நிஜ வாழ்க்கை செயல்கள் சற்று சரியில்லாததால் WWE நிர்வாகம் இவரை விலக்கியிருந்தது. அனால் அதற்கு அப்புறம் தான் இவருக்கு மற்றொரு வாய்ப்பளித்து இவரது திறமைக்கு வாய்ப்பளித்திருக்கிறது WWE.
சிஎம் பங்கின் ஸ்ட்ரெயிட் எட்ஜ் சொசைட்டியில் இடம்பெற்றிருந்த செரீனா 2010-ல் இருந்து உலகம் முழுவதும் உள்ள அனைத்து மேடைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாக படுத்திவந்தார். அதற்கு பிறகு மே யங் கிளாசிக் என்னும் நிகழ்வில் 2017ஆம் ஆண்டு கலந்துகொண்டார் செரீனா.
அதில் முதல் சுற்றில் வெளியேறியும் அவரது திறமையை கண்ட நிர்வாகிகள் அவரை WWE பெண்கள் புரட்சியின் அங்கமாய் இருக்ககோரியது. அதையடுத்து அவரை பெண்களுக்கு பயிற்சியாளராய் நியமித்து உள்ளது WWE நிர்வாகம்.
#3. கெயில் கிம்
WWE நிர்வாகம் இவரை ஒப்பந்தம் செய்ததே பெரிய தவறு என கூறலாம். 2003-ல் அறிமுகமான கிம் ஒரேநாளில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அனால் அதற்க்கு பிறகு WWE நிர்வாகம் அவரை பெரிதாக பயன்படுத்த வில்லை.
அவர் 2008-ல் திரும்பிய போதும் அது அவருக்கு பெரிய திருப்பமாய் அமையவில்லை. அது நிதி திரட்டுவதற்காக TNA நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
TNA-வில் பெரிய ஸ்டாராக வளர்ந்து வந்தார் கிம். TNA-வின் முதல் சாம்பியனும் இவர் தான். நிர்வாகத்தில் அதிகம் அலங்கரிக்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையும் இவரை சேரும்.
தற்போது கிம் மேடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இவரால் நிர்வாகத்திற்கு அதிக புகழும் வருமானமும் குவிந்த வண்ணம் உள்ளது.
#4. பில்லி கன்
முன்னாள் டேக் டீம் சாம்பியனான பில்லி ஆட்டிட்டியூட் இரா, நியூ ஏஜஸ் மற்றும் கடைசியாக டீ எக்ஸ் போன்ற அணிகளில் இடம் பெற்றிருந்தார்.
2015-ல் மீண்டும் திரும்பிய பில்லி WWE நிர்வாகத்தின் விதிகளை மீறிய காரணத்தினால் WWE-விலுருந்து விலக்கப்பட்டார். இருந்தும் அவ்வப்போது சில போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் பில்லி. மற்றும் மேடை தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து நிர்வாகத்திற்கு உதவி செய்து கொண்டு வருகின்றார்.
#5. மார்க் ஹென்றி
முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியன் ஆன மார்க் ஹென்றி ஓய்வுபெற்றது WWE ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இவருக்கு உலகின் பெரிய பலசாலி என்ற பட்டத்தையும் அளித்திருந்தது WWE.
2017-ல் ஓய்வுபெற்ற மார்க் ஹென்றி மற்ற சூப்பர்ஸ்டார்களை போல் மேடைக்கு பின்னால் இருந்து தயாரிப்பு வேலைகளை பார்த்துக்கொண்டு வந்திருந்தார். இதன் மூலம் WWE சூப்பர்ஸ்டார்களை கவனித்துக்கொண்டு வருகிறார் ஹென்றி. அவ்வப்போது ரசிகர்களுக்கும் காட்சியளித்து உற்சாக படுத்தி கொண்டும் வருகிறார் மார்க் ஹென்றி.
நாம் எதிர்பார்த்து காத்திருப்பது இவருக்கும் மே யங்கிற்கும் பிறந்த வாரிசு ஹாண்ட் ஹென்றி அடுத்த தலைமுறை சூப்பர்ஸ்டாராக உருவெடுப்பாரா என்பதை தான்.
எழுத்து: தாமஸ்
மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்