இன்று நடைபெற்ற WWE ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, அதற்கு கெவின் ஓவன்ஸ் எதிர்வரும் பாஸ்ட்லெனில் கோஃபி கிங்ஸ்டனுக்கு பதில் களமிறங்குவார் என்று வந்த அறிவிப்பு தான்.
சமீபகாலமாக கோஃபி கிங்ஸ்டன் WWE ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். அவர் களம் காணும் போட்டிகளில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்படுவது இயல்பாக மாறி வருகிறது.
பாஸ்ட்லெனின் முக்கிய போட்டியில் தற்போது டேனியல் பிரையனுக்கு எதிராக கெவின் ஓவன்ஸ் போட்டியிடுவார்.
இன்று WWE ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது, கெவின் ஓவன்ஸ் டேனியல் பிரையனை “ஸ்டன்னர்” என்ற பினிஷரின் மூலம் பின் செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியே ஏற்படுத்தியது. இந்த ஸ்டன்னர் பினிஷரானது WWE ஜாம்பவானான ஸ்டோன் கோல்டு-ன் (ஸ்டிவ் ஆஸ்டின்) பிரத்தியேக பினிஷராக இருந்து வந்தது. எனவே அப்படிப்பட்ட பினிஷரை இன்று கெவின் ஓவன்ஸ் உபயோகப்படுத்தியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை உண்டாக்கியது.
இதே போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை இல்லை, ஏற்கனவே பல காலகட்டத்தில் பெயர் போன பினிஷர்களை சில வீரர்கள் பயன்படுத்துவது வழக்கம் தான். எனவே மற்ற வீரர்களால் போடப்பட்ட சிறந்த மூன்று பினஷர்களை பற்றி இத் தொகுப்பில் காணலாம்.
#3. பிரட் ஹார்ட்-ன் ஷார்ப்ஷுட்டர் (Sharpshooter)
இந்த புகழ்பெற்ற பினிஷரானது ஹிட்மேனும் அவ்வப்போது பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. பிரெட் ஹார்டின் சிறந்த சப்மிஷன் மூவாக ஷார்ப்ஷுட்டர் அவரது சித்தரிக்கப்பட்ட WWE கதையில் அமைந்தது.
நாளிடையில், பல வீரர்கள் ஷார்ப்ஷுட்டர் பினிஷரை தங்களுடைய பினிஷராக பயன்படுத்திக்கொண்டனர். அதில் சிலரை குறிப்பிட வேண்டுமென்றால் தி ராக் மற்றும் ஸ்டிங்.
ஸ்டிங் இந்த பினிஷரை தனது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி வந்தார். ராக் தனது புகழ்பெற்ற பினிஷர்களாக இருக்கும் “பிபல்ஸ் எல்பொ” மற்றும் “தி ராக் பாட்டம்” ஆகியவற்றை ஓய்வு கொடுக்கும் பொருட்டு ஷார்ப்ஷூட்டரை பயன்படுத்தி வந்தார்.
ஆனால், பிரட் ஹார்ட்டே ஷார்ப்ஷுட்டரை பயன்படுத்துவதில் வல்லவராக திகழ்ந்தார். ரஸில்மேனியாவில் பிரட் ஹார்ட், ஸ்டிவ் ஆஸ்டினை ஷார்ப்ஷுட்டர் மூலம் கதிகலங்க வைப்பது ரசிகர்களுக்கு அக்காலகட்டத்தில் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இன்றளவும் இந்நிகழ்வு டாப் டென் நிகழ்வுகளில் ஒன்றாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
#2 கென் ஷாம்ராக்-ன் ஆன்கில் லாக் (Ankle Lock)
ஆட்டிடியூட் எரா என்பது 90-களின் பிற்பகுதியில் போட்டிகளை கண்டுகளித்த ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை ஆகும். அவர்கள் ஆன்கில் லாக்கை யார் முதன் முதலில் பயன்படுத்தினார்கள் என்று நன்றாக அறிந்திருப்பர். ஆன்கில் லாக்கை முதன் முதலில் பயன்படுத்தியது முன்னாள் யுஎப்சி வீரரான கென் ஷாம்ராக்.
குர்ட் ஆங்கள் முதன்முதலில் போட்டிகளில் கால் பதித்தபோது ஆங்கள் ஸ்லாமை பயன்படுத்தி வந்தார். ஆங்கள் ஸ்லாம் என்பது ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சிறிது காலத்திற்குப் பின்பு குர்ட் ஆங்கள் அப்பட்டமாக ஷாம்ராக்கின் லாக்கை தனது வெற்றிகரமான லாக்காக பயன்படுத்தி கொண்டார்
காலம் கடந்து போகவே, ரசிகர்கள் ஆன்கில் லாக்கை குர்ட் ஆங்களின் லாக்காகவே அடையாளப்படுத்த தொடங்கினர். இந்த லாக்கை வைத்து குர்ட் ஆங்கள், சிறந்த WWE வீரர்களான ஷான் மைக்கேல்ஸ் மற்றும் அண்டர்டேக்கரை எதிர்கொண்டு வரலாற்று வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
#1. டிடிபி-யின் டைமண்ட் கட்டர் (Diamond Cutter)
ஆட்டிட்யூட் எரா காலகட்டத்தில் WCW-வின் உச்சத்தில் இருந்தவர் டைமண்ட் தல்லாஸ் பேஜ். அவரின் புகழுக்கு முக்கிய பங்கு வகித்தது அவரின் புகழ்பெற்ற அசைவான “தி டைமண்ட் கட்டர்” . இந்த சிறப்பு மிக்க அசைவானது டிடிபி-யை பல WCW போட்டிகளில் வெற்றி பெற செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
WCW முடிவுக்கு வந்த ஒரு வருடத்திற்கு பிறகு, ரேண்டி ஆர்டன் WWE-வில் கால் தடம் பதித்து யாரும் எதிர்பாராத வகையில் ஹார்கோர் ஹோலியிடம் வெற்றியை பறித்தார். நாளிடையில் தனது பினிஷர் மூவாக “தி ஆர்கேவோ”-வை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் ரேண்டி ஆர்டன்.
இந்த அசைவை எங்கேயோ பார்த்தது போல் உள்ளது என்று ரசிகர்கள் அக்கால கட்டத்திலேயே வசைபாடினர். பின்னர் இந்த அசைவானது தி டைமண்ட் கட்டரின் மறுவடிவம் என்று ரசிகர்கள் உணர்ந்தனர். பின்பு ட்ரிபிள் ஹெச்சின் எவாலியுஷன் பேக்டரில் சேர்ந்த ரேண்டி ஆர்டன் ஆர்கேவோ-வை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினார்.
17 வருடங்கள் ஆனபோதிலும், ஆர்கேவோ-வானதுWWE வரலாற்றில் சிறந்த மூவாக விளங்கி வருகிறது. இணையத்தில் “RKO outta nowhere” கேலிச்சித்திரங்கள் அதிகளவில் பகிரப்படுவது குறிப்பிடத்தக்கது.