இது எதைப் பற்றிய கதை?
டால்ப் ஜிக்லர் ஒரு காலகட்டத்தில் முன்னணி வீரராக திகழ்ந்து வந்தவர். ஒப்பற்ற அசைவுகளாலும் நேர்த்தியான அணுகுமுறையாலும் ரசிகர்களை கவர்ந்தவர் டால்ப் ஜிக்லர். சீராக சென்று கொண்டிருந்த தனது WWE வாழ்க்கைக்கு சிறிது காலம் ஓய்வை கொடுத்துள்ளார் ஜிக்லர்.
WWE விட்டு விலகி இருந்தாலும் மற்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் டால்ப் ஜிக்லர். சமீபத்தில் WWE இன் பிரத்தியேக ரேடியோ சேனலான 98.5 -”ரஸ்டலிங் இன்சைட் தி ரோப்”-க்கு அளித்த பேட்டியில் WWE இல் தற்போதைய நிலைப்பாடு என்ன என்ற கேள்வி டால்ப் ஜிக்லரிடம் முன்வைக்கப்பட்டது. இந்தப் பேட்டியை Wrestlinginc செய்தி நிறுவனம் எழுத்து வடிவில் பதிவிட்டுள்ளது.
ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்...
2018-ஆம் ஆண்டு சேத் ரோல்லின்சுடன் தனது பகையை வளர்த்து வந்தார் டால்ப் ஜிக்லர். அதன் பின்பு நடந்த ஒரு டேக் டீம் போட்டியில் ட்ரயூ மக்-இன்டயருடன் கைகோர்த்து சேத் ரோல்லின்ஸ் மற்றும் டீன் ஆம்ப்ரோஸ் இணைக்கு எதிராக சண்டையிட்டு அப்போட்டியை வென்றிருந்தார். இப்போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் நம்பிக்கை நாயகனாக சிறிது காலம் வளம் வந்தார் ஜிக்லர்.
நட்புடன் இருந்த மக்இன்டயருடன் மனகசப்பு ஏற்பட்டு அவருடனும் சிறிது காலம் சண்டையிட்டு வந்தார் டால்ப் ஜிக்லர். கடைசியாக டால்ப் ஜிக்லர் WWE-வில் களம் கண்டது ஜனவரி மாதம் நடந்த ராயல் ரம்பிள் போட்டியில் தான்.
ராயல் ரம்பிள் போட்டிகயில் 28-ஆவது வீரராக களம் கண்ட டால்ப் ஜிக்லர் தனது நண்பரான மக்இன்டயரை வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி நான்கு வீரர்களில் ஒருவராக நிலைத்து நின்று அசத்தியிருந்தார் ஜிக்லர். இப்போட்டியில் பிரௌன் ஸ்ட்ரோமனால் வெளியேற்றப்பட்டிருந்தார் ஜிக்லர்.
மையக் கருத்து
சிறிது காலம் ஓய்வில் இருந்து தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வரும் ஜிக்லர், ரஸ்ஸில்மேனியாவில் பங்கேற்க முடியாத நிலையே உள்ளது. ஜிக்லரின் ரசிகர்கள் அவர் எப்போது திரும்புவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் அவரைப்பற்றிய அவரே கூறிய தகவல்கள் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
அவர் கூறியதாவது,
“WWE விடம் ஒப்பந்தம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால் அரங்கிற்கு பின்னால் நடைபெறும் விஷயங்களில் மட்டுமே பங்கேற்கும்படி ஒப்பந்தம் அமைந்துள்ளது. WWE-விட்டு விலகியுள்ளதால் என்னால் பல பிடித்த விஷயங்களை செய்ய முடிகிறது, 14 வருடங்களாக உள்ள நட்பின் காரணமாக WWEவுடன் ஒப்பந்தம் இன்றளவும் ஒரு பகுதியாக நீடித்து வருகிறது, ஏதாவது முன்னேற்றம் கண்டால் வரும் மாதங்களில் அதை எதிர்நோக்கி பார்க்கலாம்”
WWE-லிருந்து விலகியிருக்கும் சமயத்தில், stand up comedy எனப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும், அரசியல் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார் ஜிக்லர்.
அடுத்தது என்ன?
எதிர் வரவிருக்கும் எந்த போட்டியிலும் இவர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. மேலும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்றதாக தெரியவில்லை. எதிர்வரும் காலத்தில் போட்டிக்கு பிறகு நடக்கும் சில நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WWE சூப்பர்ஸ்டார்கள் ரஸ்ஸில்மேனியாவுக்கு பிறகு கலையப்படுவது வழக்கம், எனவே அவ்வாறு இவருக்கான கதைக்களத்தை WWE அமைக்கப்பெறுமாயின் ஜிக்லரை வளையத்திற்குள் நாம் பார்க்க இயலும்.