டீன் அம்ப்ரோஸ்-யை வைத்து மூன்று புதிய திட்டங்கள் வகுக்கும் WWE !

Nagaraj
டீன் அம்ப்ரோஸ் டீன் அம்ப்ரோஸ் & ரெனீ யங்
டீன் அம்ப்ரோஸ் டீன் அம்ப்ரோஸ் & ரெனீ யங்

டீன் அம்ப்ரோஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நிறுவனமான WWE மல்யுத்த போட்டியில் 2012 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இவர் Shield-ல் உறுப்பினராக ரோமன் ரெய்ங்க்ஸ் மற்றும் செத் ரோலின்ஸ் உடன் 2012 ஆம் ஆண்டு மல்யுத்தத்தில் இணைந்தார். டீன் அம்ப்ரோஸ் Shield-ல் உறுப்பினராக இருந்த போது முதன் முதலாக யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப்-பை வென்றார். இவர் யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப்-பை 351 நாட்கள் வரை வைத்திருந்தார். சாம்பியன்ஷிப்-யை அதிக நாட்கள் வரை வைத்திருந்த மல்யுத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் தற்போது WWE மல்யுத்த போட்டியில் இருந்து விலக இருக்கிறார் என்று வதந்திகள் பரவுவதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. டீன் அம்ப்ரோஸ்-யை மறுபடியும் WWE-ல் விளையாடுவதற்கு மீண்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரிபிள் ஹெச் மூன்று புதிய திட்டங்களை வைத்துள்ளார்.

# 1. ரெனீ யங்

ரெனீ யங் WWE-ல் 2012 ஆம் ஆண்டு நுழைந்தார். WWE-ல் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். ரெனீ யங் டீன் அம்ப்ரோஸ்-ன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. டீன் அம்ப்ரோஸ் WWE மல்யுத்த போட்டியில் மறுபடியும் கையெழுத்திட அவரது மனைவி மூலமாக கையெழுத்திட டிரிபிள் ஹெச் திட்டமிட்டு இருக்கிறார்.

# 2. டீன் அம்ப்ரோஸ் VS டிரிபிள் ஹெச்

. டீன் அம்ப்ரோஸ் VS டிரிபிள் ஹெச் டீன் அம்ப்ரோஸ் மற்றும் தி அண்டர் டேக்கர்
. டீன் அம்ப்ரோஸ் VS டிரிபிள் ஹெச் டீன் அம்ப்ரோஸ் மற்றும் தி அண்டர் டேக்கர்

டீன் அம்ப்ரோஸ் WWE-ல் தனக்கான ஒரு கதை அம்சத்தை கொடுக்கவில்லை என்றும், WWE-ல் இருந்து விலக போவதாக என்றும் வதந்திகள் பரவுகின்றன. ஆனால், டீன் அம்ப்ரோஸ்- யை தொடர்ந்து WWE போட்டிகளில் விளையாட வைப்பதற்காக டிரிபிள் ஹெச் தன்னுடன் மிகப் பெரிய போட்டியான ரெஸ்டில் மேனியா -வில் விளையாடுவதற்கு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் வதந்திகள் பரவுவதாக கூறுகின்றனர். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரெஸ்டில் மேனியா மல்யுத்த போட்டியில் ரோமன் ரெய்ங்க்ஸ் உடனும், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ரெஸ்டில் மேனியா மல்யுத்த போட்டியில் செத் ரோலின்ஸ் உடனும் போட்டியிட்டு தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோமன் ரெய்ங்க்ஸ் மற்றும் செத் ரோலின்ஸ் ஆகிய இருவருமே டிரிபிள் ஹெச் உடன் நடைபெற்ற ரெஸ்டில் மேனியா மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்று WWE-ல் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளனர். குறிப்பாக, ரோமன் ரெய்ங்க்ஸ் இந்த போட்டியின் மூலம் அதிக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். டிரிபிள் ஹெச் ரெஸ்டில் மேனியா 35 மூலமாக டீன் அம்ப்ரோஸ்-யை WWE போட்டிகளில் நிரந்தரமாக விளையாட வைப்பதற்காக திட்டமிட்டு இருக்கிறார் என்று வதந்திகள் பரவுகின்றன.

# 3. டீன் அம்ப்ரோஸ் மற்றும் தி அண்டர் டேக்கர்

WWE போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டியான ரெஸ்டில் மேனியாவில் இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ளடெட்மேன்என்று அழைக்கப்படும் அண்டர் டேக்கர் 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மற்ற இரண்டு போட்டிகளில் ஃபிராக் லெஸ்னர் மற்றும் ரோமன் ரெய்ங்க்ஸ் ஆகிய இருவருடன் தோல்வியை சந்தித்தார். டிரிபிள் ஹெச் ரெஸ்டில் மேனியா 35-ல் டீன் அம்ப்ரோஸ் மற்றும் தி அண்டர் டேக்கர் ஆகிய இருவரும் விளையாடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.