நடந்தது என்ன ?
WWE ஹால் ஆஃப் ஃபேமர் மற்றும் பலமுறை WWE சாம்பியனாக இருந்துள்ள எட்ஜ், ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்திரேடட் என்ற தளத்திற்கு தற்போதுள்ள டாப் சூப்பர்ஸ்டார்களை பற்றி பேட்டியளித்துள்ளார்.
இதைப் பற்றி உங்களுக்கு ஒருவேளை தெரியாமல் இருந்திருந்தால், தெரிந்துகொள்ளுங்கள் !
எட்ஜ், தனது நீண்ட கால நண்பர் மற்றும் தன்னுடைய டேக் இணையான டேனியல் கிறிஸ்டியனுடன் சேர்ந்து காமெடி நிகழ்ச்சியான “தி எட்ஜ் அண்ட் கிறிஸ்டியன் ஷோ” என்ற தொகுப்பின் சீசன் 2, சமீபத்தில் WWE நெட்ஒர்க்கில் தொடங்கினார். சீசன் 2 நவம்பர் 26-ஆம் தேதி மண்டே நைட் RAW நடந்த பிறகு ஆரம்பம் ஆனது. அடுத்த நாளில் துரதிர்ஷ்டவசமாக எட்ஜின் தாய் காலமானார். அவர்கள் எட்ஜுடன் சேர்ந்து WWE நெட்ஒர்க்கில் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்போர்ட்ஸ் கீடா சார்பாகவும் மற்றும் எமது வாசகர்கள் சார்பாகவும் , எட்ஜுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த அனுதாபங்கள்.
கதையின் மையக் கரு!
எட்ஜ், ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்திரேடட்-க்கான பேட்டியில் ரோமன் ரெய்ங்ஸ் பற்றியும், அவர் Leukemia என்ற நோயுடன் போராடுவது பற்றியும் நிறைய விஷயங்களை பேசினார்.அந்த பேட்டியை இங்குக் காணலாம்
நானே காயத்தினால் தான் WWE-வில் இருந்து ஓய்வு பெற்றேன்.ஒரே சமயம் வாழ்வா சாவா என்ற சூழ்நிலை WWE வீரர்களுக்கு ஏற்படுவதுண்டு. ரோமன் ரெய்ங்ஸை பொறுத்தவரை Leukemia என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதுவும் அவர் WWE-வில் உச்சத்தில் இருந்து சூப்பர் ஹீரோவாக விளங்கிக்கொண்டிருந்தபோது. இச்செய்தியை கேட்டவுடன் வருந்தினேன், ஆனால் ரோமனோ மக்கள் அவ்வாறு கவலைக்கு ஆளாகக்கூடாது என்று நினைக்கிறார்.
அவரை நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது.அவர் தன் குடும்பத்தோடு பின்னிப் பிணைவது இத்தருணத்தில் ஏற்றதாக இருக்கும், அவரும் அதேதான் செய்து வருகிறார். அவர் ஆரோக்கிய வாழ்க்கையே கடைபிடிக்க வேண்டும் .யாருக்கு தெரியும் ஒருநாள் wwe-விற்கு வந்தாலும் வருவார்.நான் அவரை பார்த்தவரை அவர் ஒரு மாஸ் மற்றும் கிளஸ்ஸான வீரர்.
ஸ்மாக்டௌன் 1000-ல் நடந்த நிகழ்வான “கட்டிங் எட்ஜ்” பற்றியும்,பெக்கி லிஞ்ச், சார்லோட் ஃபிளேர் பற்றியும் எட்ஜிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு அவர் கூறியதாவது,
“மீண்டும் திரையில் வருவது சுவாரசியமாக இருந்தது, ஆனால் நான் இதை மேலும் தொடர விரும்புகிறேன், நான் நிகழ்ச்சியில் காமெடி மட்டும் செய்ய இயலாது குறிப்பாக மற்றவர்களை வைத்து அவர்கள் புண்படும் வகையில் செய்யும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் ஒரு முன்னோட்டம் மூலம் ஒரு கதை சொல்லும் திறனை நான் மிகவும் நம்பிக்கையுடன் செய்வேன். ஒருவேளை மிக் ஃபோலே நிகழ்ச்சிக்கு திரும்பினால் நான் செய்வதை தான் செய்வார் அவர். நான் பெக்கி மற்றும் சார்லோடுடன் இருந்த போது அவர்களிடம் மல்யுத்தம் சம்மந்தப்பட்ட சிறந்த கதைகள் இருந்ததை உணர்ந்தேன், அவர்களின் கதைகளை மேம்படுத்த நான் உதவியாக இருப்பேன் என்று எண்ணினேன்.”
அடுத்தது என்ன ?
“தி எட்ஜ் அண்ட் கிறிஸ்டியன் ஷோ” மூலம் எட்ஜ் மற்றும் கிறிஸ்டியனை மண்டே நைட் RAW முடிந்த பிறகு 11pm (EST) என்ற நேரத்தில் WWE நெட்ஒர்க்கில் கண்டுகளிக்கலாம் .
எழுத்து : பிராண்டன் எவிங்
மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்