எலிமினேசன் சேம்பர் 2019-ல் வெற்றி பெறுபவர்கள் யார் தெரியுமா…?

Nagaraj
எலிமினேசன் சேம்பர் 2019
எலிமினேசன் சேம்பர் 2019

டபுள்யூ டபுள்யூ ஈ நிகழ்ச்சிகளில் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியானது முதல் முறையாக சர்வைவர் சீரிஸில் 2002 ஆம் ஆண்டு ஒரு சிறிய போட்டியாக அரங்கேறியது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியானது நடைபெற்று 16 வருடங்கள் நிறைவடைந்தது. இந்த வருடம் நடைபெறும் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியானது இன்று ஆரம்பமாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெறவிருக்கிறது.

பட்டி மர்பி(c) vs அகிரா டோஸாவா

பட்டி மர்பி vs அகிரா டோஸாவா
பட்டி மர்பி vs அகிரா டோஸாவா

முதல் போட்டியானது பட்டி மர்பி மற்றும் அகிரா டோஸாவா ஆகிய இருவருக்கும் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் அகிரா டோஸாவாவுக்கு எதிராக குரூஸர் வெயிட் சாம்பியன்ஷிப்பை பட்டி மர்பி தக்கவைத்துக்கொள்வதைப் பார்க்க இருக்கிறோம். இந்த போட்டியானது வலிமை மற்றும் உயர் பறக்கும் நகர்வுகள் ஆகியவற்றைக் காண்பிக்கும், அதனால் இந்த நிகழ்ச்சியில் சில பொழுது போக்குகளை எதிர்பார்க்கலாம். இந்த போட்டியில் பட்டி மர்பி வெற்றி பெறுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ் மற்றும் ஷேன் மக்மஹோன் (c) vs யூசோஸ் (ஜெய் எஸோ மற்றும் ஜிம்மி யூசோ)

மிஸ் மற்றும் ஷேன் மக்மஹோன் (c) vs யூசோஸ்
மிஸ் மற்றும் ஷேன் மக்மஹோன் (c) vs யூசோஸ்

எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் இரண்டாவதாக நடைபெற இருக்கிற இந்த போட்டியில் மிஸ் மற்றும் ஷேன் மக்மஹோன், யூசோஸ் ஆகிய இரண்டு குழுவும் மோதவுள்ளனர். இந்த போட்டியில் யூசோஸ் குழுவுக்கு எதிராக டேக் டீம் சாம்பியன்ஷிப்பை மிஸ் மற்றும் ஷேன் மக்மஹோன் தக்கவைத்துக்கொள்வதை பார்க்க இருக்கிறோம். மிஸ் மற்றும் ஷேன் மக்மஹோன் ஆகிய இருவரும் டேக் டீம் சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரவுன் ஸ்ட்ரோமேன் vs பரோன் கார்பின்

பிரவுன் ஸ்ட்ரோமேன் vs பரோன் கார்பின்
பிரவுன் ஸ்ட்ரோமேன் vs பரோன் கார்பின்

இந்த எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் பிரவுன் ஸ்ட்ரோமன், பரோன் கார்பின் ஆகிய இருவரும் மோதவுள்ளனர். இந்த போட்டியில் பிரவுன் ஸ்ட்ரோமன் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று நடைபெற இருக்கிற எலிமினேசன் சேம்பர் போட்டிக்கு முன்பு நடைபெற்ற ராயல் ரம்பில்ஸ்-ல் பிரவுன் ஸ்ட்ரோமன் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக பிராக் லெஸ்னருடன் மோத இருந்தார், ஆனால் பரோன் கார்பின் செயலால் இந்த போட்டியானது நடைபெறவில்லை. அந்த ராயல் ரம்பில்ஸ் போட்டியானது பிராக் லெஸ்னர் மற்றும் ஃபின் பெலார்க்கு ஆகிய இருவருக்கும் நடைபெற்றது. இதில், பிராக் லெஸ்னர் வெற்றி பெற்றார்.

ரோண்டா ரவுசி (c) vs ரூபி ரியோட்

ரோண்டா ரவுசி vs ரூபி ரியோட்
ரோண்டா ரவுசி vs ரூபி ரியோட்

இந்த எலிமினேசன் சேம்பர் போட்டியில் ரூபி ரியோட்க்கு எதிராக மகளிர் சாம்பியன்ஷிப்பை ரோண்டா ரவுசி தக்கவைத்துக் கொள்ள மோதவுள்ளார். டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனத்திற்காக இதுவரை விளையாடியுள்ள ரோண்டா ரவுசி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரூபி ரியோட்-க்கு பெரிதும் வாய்ப்பு வழங்கவில்லை. இதை வைத்து பார்க்கும் போது இந்த போட்டியில் ரோண்டா ரவுசி மகளிர் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக்கொள்வார். இந்த எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியானது முடிந்த பிறகு, ரெஸ்டில் மேனியா 35 நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெஸ்டில் மேனியா 35-ல் ரோண்டா ரவுசி, சார்லோட் பிளேர் ஆகிய இருவருக்கிடையே போட்டி நடைபெறும் அல்லது ரோண்டா ரவுசி, சார்லோட் பிளேர், பெக்கி லிஞ்ச் ஆகியோருக்கு இடையே போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது.

பாபி லஷ்லி(c), லியோ ரஷ் vs ஃபின் பெலார்

பாபி லஷ்லி(c), லியோ ரஷ் vs ஃபின் பெலார்
பாபி லஷ்லி(c), லியோ ரஷ் vs ஃபின் பெலார்

இந்த போட்டியானது 2 ஆன் 1 ஹாண்டிகேப் போட்டியாக நடைபெறும். ஃபின் பெலார்-க்கு எதிராக இன்டகான்டினென்டல் சாம்பியன்ஷிப்பை பாபி லஷ்லி தக்கவைத்துக் கொள்வதை பார்க்க இருக்கிறோம். டெமோன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஃபின் பெலார் தனது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எந்த ஒரு நாளிலும் ஒரு பெரிய சண்டை போட முடியும் என்று நிரூபித்து காட்டினார். ஃபின் பெலார் ராயல் ரம்பில்ஸ்-ல் ப்ரோக் லெஸ்னருடன் நடைபெற்ற போட்டியின் மூலம், தன்னால் அனைத்து விதமான போட்டிகளிலும், சண்டையிட முடியும் என்பதை உறுதிப்படுத்தினார். ஆகையால், இந்த எலிமினேசன் சேம்பர் போட்டியானது நல்ல பொழுதுபோக்காக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போட்டியில் ஃபின் பெலார் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.

மகளிர் டேக் டீம் சாம்பியன்ஷிப்

மகளிர் டேக் டீம் சாம்பியன்ஷிப்
மகளிர் டேக் டீம் சாம்பியன்ஷிப்

மகளிர் டேக் டீம் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக நியா ஜாக்ஸ் மற்றும் டமினா vs ரியோட் ஸ்குவாட் ( லீ மோர்கன் மற்றும் சாரா லோகன் ) vs மேன்டி ரோஸ் மற்றும் சோன்யா டேவில்லி vs ll கானிக்ஸ்( பில்லி கே மற்றும் பேடன் ராய்ஸ் ) vs நவோமி மற்றும் கார்மெல்லா vs பேய்லி மற்றும் சாஷா பாங்க்ஸ் ஆகியோர் மோதவுள்ளனர். மகளிர் டேக் டீம் போட்டியானது எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் முதல் முறையாக நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நியா ஜாக்ஸ் மற்றும் டமினா வெற்றி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது அல்லது பேய்லி மற்றும் சாஷா பாங்க்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

டேனியல் பிரையன்(c) vs ஏ.ஜே. ஸ்டைல் vs ஜெஃப் ஹார்டி vs ராண்டி ஆர்டன் vs சமோவா ஜோ vs கோபி கிங்ஸ்டன்

சிக்ஸ் மேன் எலிமினேசன் சேம்பர்
சிக்ஸ் மேன் எலிமினேசன் சேம்பர்

இந்த எலிமினேசன் சேம்பர் போட்டியில் டேனியல் பிரையன் தனது டபுள்யூ டபுள்யூ ஈ சாம்பியன்ஷிப்பை காப்பாற்றுவதற்காக ஏ.ஜே.ஸ்டைல் vs ஜெஃப் ஹார்டி vs ராண்டி ஆர்டன் vs சமோவா ஜோ vs கோபி கிங்ஸ்டன் ஆகியோருக்கு எதிராக போட்டியிடுகிறார். இந்த போட்டியில் டேனியல் பிரையன் தனது டபுள்யூ டபுள்யூ ஈ சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக் கொள்வார் அல்லது ராண்டி ஆர்டன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications