மகளிர் டேக் டீம் சாம்பியன்ஷிப்

மகளிர் டேக் டீம் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக நியா ஜாக்ஸ் மற்றும் டமினா vs ரியோட் ஸ்குவாட் ( லீ மோர்கன் மற்றும் சாரா லோகன் ) vs மேன்டி ரோஸ் மற்றும் சோன்யா டேவில்லி vs ll கானிக்ஸ்( பில்லி கே மற்றும் பேடன் ராய்ஸ் ) vs நவோமி மற்றும் கார்மெல்லா vs பேய்லி மற்றும் சாஷா பாங்க்ஸ் ஆகியோர் மோதவுள்ளனர். மகளிர் டேக் டீம் போட்டியானது எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் முதல் முறையாக நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நியா ஜாக்ஸ் மற்றும் டமினா வெற்றி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது அல்லது பேய்லி மற்றும் சாஷா பாங்க்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
டேனியல் பிரையன்(c) vs ஏ.ஜே. ஸ்டைல் vs ஜெஃப் ஹார்டி vs ராண்டி ஆர்டன் vs சமோவா ஜோ vs கோபி கிங்ஸ்டன்

இந்த எலிமினேசன் சேம்பர் போட்டியில் டேனியல் பிரையன் தனது டபுள்யூ டபுள்யூ ஈ சாம்பியன்ஷிப்பை காப்பாற்றுவதற்காக ஏ.ஜே.ஸ்டைல் vs ஜெஃப் ஹார்டி vs ராண்டி ஆர்டன் vs சமோவா ஜோ vs கோபி கிங்ஸ்டன் ஆகியோருக்கு எதிராக போட்டியிடுகிறார். இந்த போட்டியில் டேனியல் பிரையன் தனது டபுள்யூ டபுள்யூ ஈ சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக் கொள்வார் அல்லது ராண்டி ஆர்டன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.