பாஸ்ட்லேன் 2019-ல் வெற்றி பெறுபவர்கள் யார் தெரியுமா…?

Nagaraj
பாஸ்ட்லேன் 2019
பாஸ்ட்லேன் 2019

தற்போது தான் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சி முடிந்த பிறகு, 25-ம் தேதி திங்களன்று நடைபெற்ற ராவ் எபிசோடில் ரோமன் ரெய்ங்க்ஸ் மற்றும் பட்டிஸ்டா ஆகிய இருவரும் டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு திரும்பினர். ரோமன் ரெய்ங்க்ஸ் லுக்கேமியா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 26-ம் தேதி செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் கெவின் ஓவன்ஸ் டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு திரும்பியுள்ளார். ரோமன் ரெய்ங்க்ஸ், பட்டிஸ்டா, கெவின் ஓவன்ஸ் இவர்களின் வருகையால் வருகிற மார்ச் 10-ம் தேதி நடைபெறவுள்ள பாஸ்ட்லேன் நிகழ்ச்சியானது சிறந்த பொழுதுபோக்காக அமையும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பற்றி இங்கு காண்போம்.

டேனியல் பிரையன் (c) vs கெவின் ஓவென்ஸ்

டேனியல் பிரையன் vs கெவின் ஓவென்ஸ்
டேனியல் பிரையன் vs கெவின் ஓவென்ஸ்

டேனியல் பிரையன் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் தனது வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த எலிமினேசன் சேம்பர் போட்டியில் கோஃபி கிங்ஸ்டன் டேனியல் பிரையன்-க்கு எதிராக சிம்பசொப்னமாக திகழ்ந்தார். இவர்கள் இருவருக்கும் மறுபடியும் பாஸ்ட்லேனில் போட்டியை நடத்த டபுள்யூ டபுள்யூ ஈ முடிவு செய்தது. பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற்ற ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் டேனியல் பிரையன்-க்கு எதிராக வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கோஃபி கிங்ஸ்டன் வளையத்திற்குள் வந்தார். ஆனால், திடீரென ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் தோன்றிய டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனத்தின் தலைவரான வின்ஸ் மக்மஹோன், வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன் டேனியல் பிரையன்-க்கு எதிராக பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் கெவின் ஓவென்ஸ் போட்டியிடுவார் என அறிவித்தார். டேனியல் பிரையன் மற்றும் கெவின் ஓவென்ஸ் இவர்கள் இருவருக்கும் மார்ச் 10-ம் தேதி நடைபெறும் பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில், டேனியல் பிரையன் மீண்டும் தனது வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக்கொள்வார்.

சாஷா பாங்க்ஸ், பேய்லி (c) vs நியா ஜாக்ஸ், டமினா

சாஷா பாங்க்ஸ், பேய்லி vs நியா ஜாக்ஸ், டமினா
சாஷா பாங்க்ஸ், பேய்லி vs நியா ஜாக்ஸ், டமினா

சாஷா பாங்க்ஸ், பேய்லி இவர்கள் இருவரும் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய பெண்கள் டேக் டீம் சாம்பியன்ஷிப் போட்டியில் டேக் டீம் சாம்பியன்ஷிப்பை வென்றனர். டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது பெண்கள் டேக் டீம் சாம்பியனான சாஷா பாங்க்ஸ், பேய்லி இவர்களுக்கு எதிராக போட்டியிட பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் நியா ஜாக்ஸ் மற்றும் டமினா-வை முடிவு செய்துள்ளது. இந்த பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் சாஷா பாங்க்ஸ், பேய்லி இவர்கள் தங்களது டேக் டீம் சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக்கொள்வார்கள்.

யூசோஸ் (c) vs மிஸ், ஷேன் மக்மஹோன்

யூசோஸ் vs மிஸ், ஷேன் மக்மஹோன்
யூசோஸ் vs மிஸ், ஷேன் மக்மஹோன்

யூசோஸ் மற்றும் மிஸ், ஷேன் மக்மஹோன் இந்த இரண்டு அணிகளுக்கும் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் டேக் டீம் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் யூசோஸ் அணி டேக் டீம் சாம்பியன்ஷிப்பை வென்றது. இந்த இரண்டு அணிகளுக்கும் மறுபடியும் டேக் டீம் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக பாஸ்ட்லேனில் ஒரு போட்டியை டபுள்யூ டபுள்யூ ஈ முடிவு செய்துள்ளது. இந்த பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் யூசோஸ் அணி தங்களது டேக் டீம் சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக்கொள்வார்கள்.

ஃபின் பெலார் (c) vs பாபி லஷ்லி

ஃபின் பெலார் vs பாபி லஷ்லி
ஃபின் பெலார் vs பாபி லஷ்லி

ஃபின் பெலார் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் 2 ஆன் 1 ஹான்டிகேப் போட்டியில் லியோ ரஷ், பாபி லஷ்லி இவர்களுக்கு எதிராக போட்டியிட்டு இன்டிகாண்டினென்டல் சாம்பியன்ஷிப்பை வென்றார். இந்த முறை பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் பாபி லஷ்லி இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக தனியாக போட்டியிட உள்ளார். இந்த பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் பாபி லஷ்லி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷீல்ட் vs டீம் கார்பின்

டீம் கார்பின் vs ஷீல்ட்
டீம் கார்பின் vs ஷீல்ட்

ரோமன் ரெய்ங்க்ஸ் 25-ம் தேதி நடைபெற்ற ராவ் எபிசோடில் ரீஎன்ட்ரி கொடுத்தார். ரோமன் ரெய்ங்க்ஸ், செத் ரோலின்ஸ் மற்றும் டீன் அம்ப்ரோஸ் ஆகிய மூவரும் மறுபடியும் ஷீல்ட்-ல் இணைந்தனர். டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது ஷீல்ட் மற்றும் டீம் கார்பின் ( பரோன் கார்பின், ட்ரூ மக்கண்டையர், பாபி லஷ்லி, எலியாஸ்) ஆகிய இரண்டு அணிகளுக்கும் பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் போட்டியை முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ரோமன் ரெய்ங்க்ஸ் எதிராக பரோன் கார்பின்-க்கும், செத் ரோலின்ஸ்-க்கு எதிராக ட்ரூ மக்கண்டையர்-க்கும், டீன் அம்ப்ரோஸ்-க்கு எதிராக எலியாஸ்-க்கும் பாஸ்ட்லேனில் மற்றொரு போட்டியையும் முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் அனைத்து போட்டிகளிலும் ஷீல்ட் அணியினரே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications