SMACKDOWN ஜெனரல் மேனேஜர் பதவியிலிருந்து பைஜ் நீக்கப்பட்டதற்கான ஐந்து காரணங்கள்

Paige was relieved of her duties
Paige was relieved of her duties

TLC க்கு பிறகு நடைபெற்ற Smackdown ஷோவின் ஆரம்பத்தில் பெக்கி லின்ட்ச்-ஐ தவிர மற்ற அனைத்து Smackdown வீரர்களையும் அழைத்து ஒரு விஷயம் சொல்லப்பட்டது, அதன்படி பைஜ் இன்று முதல் ஜெனரல் மேனேஜர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் என்று ஷேன் மக்மஹோன் அறிவித்தார். ஆனால் பைஜ் WWE ல் தொடர்ந்து நீடிப்பதாகவும் கூறினார். இது ரசிகர்கள் பலருக்கு ஆச்சரியத்தையும் அதேசமயம் அதிர்ச்சியையும் தந்தது. ஏனென்றால் பேரோன் கார்பினை வெறுத்த அளவிற்கு ரசிகர்கள் பைஜ்– ஐ ஜெனரல் மேனேஜராக வெறுக்கவில்லை. அவரும் அவருடைய பங்கிற்கு Smackdown – ஐ சலிப்பு தட்டாதவாரே கொண்டுசென்றார். இந்தக் கட்டுரையில் பைஜ் நீக்கப்பட்டதற்கான ஐந்து காரணங்களைப் பற்றி காண்போம்.

#5. தி மக்மஹோன் பேமிலியே இனிமேல் இரண்டு ஷோக்களையும் நடத்துவார்கள்

It's a 4-person Authority team
It's a 4-person Authority team

இந்த வார RAW வில் தி மக்மஹோன் பேமிலி அறிவித்ததுபடி, அவர்கள் நான்கு பேரும் இணைந்து இனிமேல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் WWE-வை கொண்டு செல்வதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் வந்து நல்ல போட்டிகளை அறிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆம் அதிலும் ஷேன் மக்மஹோன் மற்றும் ஸ்டெப்பினி மக்மஹோன் ஆகியோரே அதிகம் WWE-க்கு வருகை தருவார்கள். வின்ஸ் மக்மஹோன், அவரது வயது முதிர்ச்சியின் காரணமாகவும், உடல்நிலை அடிக்கடி டிவி நிகழ்ச்சியில் வருவதை ஏற்றுக்கொள்ளாது என்பதாலும் சற்று ஒதுங்கியே இருப்பார் என்று தெரிகிறது.

இதனால், பைஜ் – ன் கையில் அதிகாரம் இருப்பது பலருக்கு சரியாகப் படவில்லை. எனவே அவருடைய பதவி பறிக்கப்பட காரணங்களில் இதுவும் ஒன்று.

#4. பைஜ்ஜிற்கு வேறொரு பதவி வழங்கப்படலாம்

Shane McMahon did mention that Paige will be sticking around despite not being General 
Shane McMahon did mention that Paige will be sticking around despite not being General

பைஜ் ஜெனரல் மேனேஜர் பதவியிலிருந்து விலக்கப்பட்டாலும் அவர் WWE – வில் நீடிப்பார் என்றும் ஷேன் மக்மஹோன் கூறியதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெரிய வருகிறது. ஒன்று, அவருக்கு வேறொரு அதிகார பதவி வழங்கப்படலாம். இரண்டு அவருக்கு மற்றொரு Smackdown team ற்கு தலைமை தாங்கும் அதிகாரம் வழங்கப்படலாம்.

ஸோன்யா டிவிலி மற்றும் மேன்டி ரோஸ் ஆகியோருடன் இணைந்து மீண்டும் பழைய டீமான Absolution – யை உருவாக்குவதே பைஜ்ஜிற்கு சரியாக அமையும். ஏனெனில் அவர்தான் இதற்கு முன் Absolution டீமை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். அவருடைய wwe கான்ட்ராக்ட் 2019 ஆம் ஆண்டுடன் முடிவடைவதால் அவரை அதுவரையாவது திரையில் காண வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

#3. ஷேன் மக்மஹோன் நல்லவர் கதாபாத்திரத்தில் இருந்து மாற்றப்படலாம்.

ஷேன் மக்மஹோன்
ஷேன் மக்மஹோன்

WWE world cup-ற்கு பிறகு ஷேன் மக்மஹோன் கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றுவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது wwe. அது ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறதோ இல்லையோ, ஜெனரல் மேனேஜர் பதவியிலிருந்து பேஜ் நீக்கப்பட்டது உறுதியான பின்பு, ஷேன் மக்மஹோன் அதிக அளவில் திரையில் தோன்ற வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் அவருடைய அதிகாரத்தையும் செலுத்த வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் இன்னொரு வில்லத்தனமான அதிகாரி Smackdown – ஐ நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இம்மாதிரியான கொடுங்கோல் அதிகாரியாக நடந்துகொள்வார் என்றுதான் பாரேன் கார்பினுக்கு RAW வில் ஜெனரல் மேனேஜர் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதை அவர் சரிவர செய்யவில்லை. ஷேன் மக்மஹோன் அவ்வாறின்றி எல்லா விதமான சண்டைகளிலும் தன் பங்கை சிறப்பாக செய்வார், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிப்பார்.

#2. பைஜ் மீண்டும் RAW விற்கு மாற்றப்படலாம்

பேஜ்
பேஜ்

ஷேன் மக்மஹோன், பைஜ் WWE ல் தொடர்ந்து நீடிப்பார் என்று மட்டுமே கூறினாரே தவிர எந்த ஷோவில் இருப்பார் என்று கூறவில்லை. இதை வைத்து பார்க்கும்போது அவர் மீண்டும் RAW விற்கே திரும்புவார். அப்படி அவர் RAW விற்கு திரும்பும் பட்சத்தில் அவர் Absolution டீமை தலைமை தாங்க அவசியமில்லை. அதற்கு மாறாக wwe அவரை வைத்து வேறொரு மிகப்பெரிய திட்டத்தை அரங்கேற்றலாம்.

#1. பைஜ் மீண்டும் சண்டைகளில் கலந்துகொள்ள தயாராகலாம்

பேஜ்
பேஜ்

இது நடப்பது சற்று கடினம் என்றாலும் மற்ற அனைத்து காரணங்களுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால் டேனியல் பிரையன் அவருடைய மருத்துவ சிகிச்சைகளை முடித்துக் கொண்டு மீண்டும் பழையபடி சண்டைகளில் பங்கெடுத்து வருவதால், இதுவும் ஒருவேளை சாத்தியமே. பைஜ்ஜிற்கு ஏற்பட்ட காயம் சற்று அபாயகரமானது. ஆம் அவருக்கு காயம் ஏற்பட்ட இடம் அவருடைய கழுத்து பகுதி. உடலில் உள்ள பாகங்களில் முக்கியமானது என்பதால் குறைந்த பட்சம் ஒரு வருடமாவது அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி ஒருவேளை அவர் சண்டையிட நினைத்து, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு திரும்பினால், டேனியல் பிரையன் போன்று ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் காயத்தின் தன்மை குறித்து மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம். அவர் அவ்வாறு திரும்பினால் அது WWE-ல் மற்றுமொரு அதிசயம்.

எழுத்து : ரோஹித் நாத்

மொழியாக்கம் : அகன் பாலா