#2. பைஜ் மீண்டும் RAW விற்கு மாற்றப்படலாம்
ஷேன் மக்மஹோன், பைஜ் WWE ல் தொடர்ந்து நீடிப்பார் என்று மட்டுமே கூறினாரே தவிர எந்த ஷோவில் இருப்பார் என்று கூறவில்லை. இதை வைத்து பார்க்கும்போது அவர் மீண்டும் RAW விற்கே திரும்புவார். அப்படி அவர் RAW விற்கு திரும்பும் பட்சத்தில் அவர் Absolution டீமை தலைமை தாங்க அவசியமில்லை. அதற்கு மாறாக wwe அவரை வைத்து வேறொரு மிகப்பெரிய திட்டத்தை அரங்கேற்றலாம்.
#1. பைஜ் மீண்டும் சண்டைகளில் கலந்துகொள்ள தயாராகலாம்
இது நடப்பது சற்று கடினம் என்றாலும் மற்ற அனைத்து காரணங்களுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால் டேனியல் பிரையன் அவருடைய மருத்துவ சிகிச்சைகளை முடித்துக் கொண்டு மீண்டும் பழையபடி சண்டைகளில் பங்கெடுத்து வருவதால், இதுவும் ஒருவேளை சாத்தியமே. பைஜ்ஜிற்கு ஏற்பட்ட காயம் சற்று அபாயகரமானது. ஆம் அவருக்கு காயம் ஏற்பட்ட இடம் அவருடைய கழுத்து பகுதி. உடலில் உள்ள பாகங்களில் முக்கியமானது என்பதால் குறைந்த பட்சம் ஒரு வருடமாவது அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி ஒருவேளை அவர் சண்டையிட நினைத்து, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு திரும்பினால், டேனியல் பிரையன் போன்று ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் காயத்தின் தன்மை குறித்து மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம். அவர் அவ்வாறு திரும்பினால் அது WWE-ல் மற்றுமொரு அதிசயம்.
எழுத்து : ரோஹித் நாத்
மொழியாக்கம் : அகன் பாலா