ஒற்றையர் பிரிவில் கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்த ஐந்து மல்யுத்த வீரர்கள்!

Nagaraj
கோல்ட் ஃபெர்க்
கோல்ட் ஃபெர்க்

டபுள்யூ டபுள்யூ ஈ இதுவரை அறிமுகப்படுத்திய மல்யுத்த வீரர்களில் கோல்ட் ஃபெர்க் மல்யுத்த போட்டிகளில் சிறந்த வீரராக திகழ்ந்தார். அவர் ப்ராக் லெஸ்னர், பிக் ஷோ, பாடிஸ்டா மற்றும் பல பெரிய மல்யுத்த வீரர்களையும் வென்றுள்ளார். 1997 ஆம் ஆண்டில் டபுள்யூ சி டபுள்யூ -ல் அறிமுகமான போது எந்த ஒரு மல்யுத்த வீரரும் அவரை தோற்கடிக்க கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. கோல்ட் ஃபெர்க் 173-0 என்ற மிக நீண்ட தோல்வியற்ற மல்யுத்த வீரர் என்ற ஒரு சாதனையை வைத்திருந்தார். பின்னர், கோல்ட் ஃபெர்க்கின் சாதனையை ஆசுகா ( 276-0 ) முறியடித்தார். கோல்ட் ஃபெர்க் அவரது ஆதிக்கத்திற்கும், தோல்வியற்ற சாதனைக்கும் எப்பொழுதும் நினைவு கூறப்படுவார். கோல்ட் ஃபெர்க் டபுள்யூ சி டபுள்யூ-இன் அறிமுகத்திற்கு பின்னர் ஒரு வருடம் கழித்து தனது முதல் தோல்வியை சந்தித்தார். கோல்ட் ஃபெர்க் தனது மல்யுத்த வாழ்க்கையில் 61 போட்டிகளை மட்டுமே இழந்தார். கோல்ட் ஃபெர்க் ஒற்றையர் பிரிவில் ஐந்து மல்யுத்த வீரர்களால் தோற்கடிக்கப்பட்டதை இங்கு காண்போம்.

கெவின் நாஷ் (1998)

கெவின் நாஷ்
கெவின் நாஷ்

1998 ஆம் ஆண்டு கோல்ட் ஃபெர்க் மற்றும் கெவின் நாஷ் ஆகிய இருவரும் டபுள்யூ சி டபுள்யூ சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட்டனர். இந்த போட்டியில் பெரும்பாலான நேரங்களில் கோல்ட் ஃபெர்க் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், கெவின் நாஷ் தன்னுடைய கூட்டாளியான ஸ்காட் ஹால் உதவியுடன் கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்தார். கெவின் நாஷ் இந்த வெற்றியின் மூலம் கோல்ட் ஃபெர்க்-ன் சாதனைக்கு (174-1 ) முற்றுப்புள்ளி வைத்தார்.

புக்கர் டி (2000)

புக்கர் டி
புக்கர் டி

4 ஜூலை 2000 ஆம் ஆண்டில் திங்களன்று நடைபெற்ற ராவ் எபிசோடில் புக்கர் டி டபுள்யூ சி டபுள்யூ சாம்பியன்ஷிப் போட்டிக்காக கோல்ட் ஃபெர்க்-யை பார்த்து சவாலுக்கு அழைத்தார். கோல்ட் ஃபெர்க் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் புக்கர் டி-யின் சகோதரரான ஸ்டீவி ரே-யை கண்ணாடி ஜன்னல் வழியாக தூக்கியெறிந்தார். போட்டி ஆரம்பித்த பிறகு முதலில் கோல்ட் ஃபெர்க் ஆதிக்கம் செலுத்தினார். அதன் பின்னர், புக்கர் டி இந்த போட்டியில் ஜெஃப் ஜாரெட் மற்றும் தி கேட் ஆகியோரின் உதவியுடன் கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்து தனது டபுள்யூ சி டபுள்யூ சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக் கொண்டார்.

பிரெட் ஹார்ட் (1999)

பிரெட் ஹார்ட் ஸ்காட் ஸ்டெய்னர்
பிரெட் ஹார்ட் ஸ்காட் ஸ்டெய்னர்

கோல்ட் ஃபெர்க் தனது டபுள்யூ சி டபுள்யூ வாழ்க்கையில் 1999 ஆம் ஆண்டு பிரெட் ஹார்ட் என்ற மல்யுத்த வீரரால் மூன்று முறை தோற்கடிக்கப்பட்டார். பிரெட் ஹார்ட் மற்றும் கோல்ட் ஃபெர்க் ஆகிய இருவரும் அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட்டனர். பிரெட் ஹார்ட் இந்த போட்டியில் கெவின் நாஷ், சிட் விசிஸ் மற்றும் ஸ்காட் ஹால் ஆகியோரின் உதவியால் கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்தார். இரண்டாவது வெற்றி ஸ்டார்ட்கேட்-ல் நடந்தது. பிரெட் ஹார்ட் இந்த போட்டியில் ரோடி பைபர்-ன் உதவியுடன் கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்தார். மூன்றாவது வெற்றி திங்களன்று நடைபெற்ற ராவ் நிகழ்ச்சியில் நடந்தது. பிரெட் ஹார்ட் இந்த போட்டியில் ஸ்காட் ஹால், ஜெஃப் ஜாரெட் மற்றும் கெவின் நாஷ் ஆகியோரின் குறுக்கீடு காரணமாக வெற்றி பெற்றார்.

ஸ்காட் ஸ்டெய்னர் (2000)

ஸ்காட் ஸ்டெய்னர்
ஸ்காட் ஸ்டெய்னர்

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற Fall Brawl நிகழ்ச்சியில் கோல்ட் ஃபெர்க் மற்றும் ஸ்காட் ஸ்டெய்னர் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். ஸ்காட் ஸ்டெய்னர் இந்த போட்டியில் டபுள்யூ சி டபுள்யூ -ன் தலைவர் வின்ஸ் ரஷோ உதவியுடன் கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்தார்.

பிராக் லெஸ்னர் ( ரெஸ்டில் மேனியா 33 )

பிராக் லெஸ்னர்
பிராக் லெஸ்னர்

கோல்ட் ஃபெர்க் மற்றும் பிராக் லெஸ்னர் ஆகிய இருவரும் முதல் முறையாக ரெஸ்டில் மேனியா XX -ல் போட்டியிட்டனர். இந்த போட்டியில் கோல்ட் ஃபெர்க் வெற்றி பெற்றார். இவர்கள் மீண்டும் ரெஸ்டில் மேனியா 33-ல் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட்டனர். இந்த போட்டியில் பிராக் லெஸ்னர் வெற்றி பெற்றார். பிராக் லெஸ்னர் ரெஸ்டில் மேனியா 33-ல் எந்தவொரு மல்யுத்த வீரரின் உதவியின்றி தனியாக கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now