நமது சமூகம் சட்டத்திட்டங்களுக்கு அடிபணிந்தே வாழ நமக்கு கற்றுதந்துள்ளது. ஆதிமனிதன் காலத்தில் இருந்தே சட்டங்கள் இருந்துவந்தது. அதை பின்பற்றி இன்றளவும் மனித இனம் இன்றும் வாழ்ந்துவருகிறது.
ஆனால் சட்டங்களுக்கு அனைவரும் கட்டுப்படுவதில்லை. அவர்களை அதிகாரிகள் கவனித்துக்கொள்வார்கள். WWE-விலும் சிலர் சட்டங்களை மீறி அதற்கான பலனையும் அனுபவித்துள்ளனர். சமீபத்தில் பெக்கி லின்ச்சை இடைநீக்கம் செய்த காரணத்தினால் ரோண்டா ரௌசியை தாக்கினார். அதற்காக அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது WWEன் சட்டங்களை மீறிய 5 சூப்பர்ஸ்டார்களை பற்றி காண்போம்.
#5. எட்டி குரேரோ
எட்டி குரேரோ கடுமையான போராட்டத்திற்கு பிறகு 2004-ம் ஆண்டு WWE சாம்பியன் பட்டத்தை வென்றார். பிப்ரவரி மாதம் 26 தேதியில் smackdown-ல் நடந்த நிகழ்ச்சியில் குரேரோ கைகளில் விளங்கு மாற்றப்பட்டது.
குர்ட் ஆங்கெல் மேடையில் இவரை கடுமையான முறையில் சாடினார். இதில் கோவம் அடைந்த எட்டி, குர்ட் ஆங்கெலை பதுங்கி இருந்து தாக்கினார்.
இது அப்போதைய மேனஜராக இருந்த பவுல் ஹீமனுக்கு இது சரியாக படவில்லை இதனால் WWE நிர்வாகம் இவரை கைது செய்ய உத்தரவிட்டது. ஆனால் இது அவர் ரஸில்மேனியா 20-ல் பங்கேற்பதில் இருந்து தடுக்கவில்லை. அதில் குர்ட் அங்கெலுக்கு எதிராக சண்டையிட்டு தனது சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டார் எட்டி.
#4. ஸ்டெப்னீ மக்மஹோன்
என்னதான் இவர் WWE தலைவரின் மகளாக இருந்தாலும் இவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும்.
டேனியல் பிரையனுக்கும் WWE அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டு கொண்டே இருந்தது. இந்த நிலையில் ஸ்டெப்னீ இந்த பகையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றார். அன்று டேனியல் பிரையனின் மனைவியான ப்ரீ பெல்லா பார்வையாளராக கலந்துகொண்டார். அப்போது அவரை அறைந்த காரணத்தினால் ஸ்டெப்னீ கைதுசெய்யப்பட்டார். இவரது தந்தை மற்றும் WWE-ன் தலைவருமான மக்மஹோன் தனது மகள் செய்தது தவறு தான் என கூறினார்.
பிறகு அப்போதைய RAW மற்றும் SMACKDOWN இரண்டிலும் மேனஜர் பதவியில் இருந்த ஸ்டெப்னீ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவர் தந்தையின் பணம் இவருக்கு பெயில் பெற்றுதந்தது குறிப்பிடத்தக்கது.
#3. தி மிஸ் மற்றும் ஆர்-ட்ரூத்
2011-ல் இவர்கள் இருவரும் ஜோடியாக இருந்தனர். இவர்களுக்கு WWE நிர்வாகம் அதிக அளவில் வாய்ப்புகள் அளிக்கவில்லை என்ற எண்ணம் அவர்களுக்குள் தோன்றியது.
WWE நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டு கொண்டிருந்த இவர்களை உயரதிகாரியான ட்ரிபிள் ஹெச் நீக்க உத்தரவிட்டார். இதை மறுத்த இவர்கள் ஹெல் இன் எ செல் போட்டியின் போது இவர்கள் தங்கள் கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் தாக்கினர். இதில் ஜான் ஸீனா, சீ எம் பங்க் உள்ளிட்டோரும் அடங்குவார்கள். அந்நிகழ்வின் போது நடுவர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டோரும் பாதுகாப்பாய் இல்லை என்பது தான் உண்மை. பிறகு இவர்கள் காவல் துறையினர் வந்ததும் தானாகவே சரணடைந்தனர். இருப்பினும் இவர்கள் இருவரையும் மறுபடியும் WWE நிர்வாகம் தங்களிடம் சேர்த்துக்கொண்டது.
#2. ஸ்டோன் கோல்டு (ஸ்டீவ் ஆஸ்டின்)
இவருக்கும் WWE தலைவரான வின்ஸ் மக்மஹோனுக்கும் எப்போதும் ஒத்துப்போனதில்லை. இவர் WWE நிர்வாகதிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். ஆனால் மக்மஹோனோ ஸ்டோன் கோல்டின் வாழ்க்கையை நரகமாக மாற்றுவேன் என்று கூறிவந்தார்.
இவர் சாம்போனி என்னும் இயந்திரத்தை மக்மஹோன் மீது செலுத்திய குற்றத்தினால் கைது செய்யப்பட்டார். ஓர் இரவை சிறையில் கழித்த இவர் பின்பு ஒரு வாரம் கழித்து WWE-விற்கு திரும்பினார். ஆனால் இவரது கோபம் அதிகரித்து தான் இருந்தது. இவரை கட்டுப்படுத்த இன்னும் கொடுமையான சட்டங்கள் தேவை என்பதை WWE நிர்வாகம் அறிந்துகொண்டது.
#1. தி ஷில்டு
ஷில்டு குழுவினர் ஒருபோதும் சட்டங்களை மதித்ததில்லை. 2018-ம் ஆண்டின் முடிவில் இவர்கள் மிகவும் அத்துமீறியதால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் டால்ப் ஜிக்லர், ட்ரூ மேக்எண்டயர் மற்றும் ப்ரான் ஸ்ட்ராமேன் போன்ற வீரர்களை தாக்கியது ஜெனரல் மேனஜர் ‘கான்ஸ்டபிள்’ பெரோன் கார்பினுக்கு சற்றும் சரியாக படவில்லை. ஆகையால் இவர்கள் மூவரும் அன்று கைது செய்யபட்டனர். இவர்களின் செயல் சில பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை.
அதன் பின்னர் அன்றிரவே விடுவிக்கபட்டனர். பின்பும் இவர்கள் பெரோன் கார்பினுக்கு எதிராக சண்டை போட்டுக்கொண்டே தான் இருந்தனர். இவர்களின் செயல்கள் ரோமன் ரெயின்ஸ் லுகிமியா நோயால் WWE விட்டு வெளியேறிய வரை தொடர்ந்து வந்தது.
எழுத்து : தாமஸ்
மொழியாக்கம் : காமாட்சி சுந்தரம்