கடந்த ஒரு சில மாதங்களாகவே WWE பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு பயணித்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு WWE-வின் அடையாளமாக விளங்கிய ரோமன் ரெய்ங்ஸ் விடைபெற்றதும் சமீபத்தில் திரும்பியதும் நம் அனைவரும் அறிந்ததே. மேலும் “தி அணிமல்” உடனான பகைக்கு ட்ரிபிள் ஹெச் உயிர் கொடுத்துள்ளது போன்ற நிகழ்வுகளும் நடைபெறுவது பார்த்துக் கொண்டு வருகிறோம்.
நீண்டகாலமாக WWE-இன் நட்சத்திர அந்தஸ்தை பெறாமலேயே இருந்த கோஃபி கிங்ஸ்டன் மற்றும் பின் பெலெர் ஒருவழியாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல்வேறு வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது WWE.
WWE-யை பொறுத்தவரை பிப்ரவரி மாதம் நன்றாகவே முடிந்தது, எலிமினேஷன் சம்பேர் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது WWE. எதிர்வரும் மார்ச் 10ஆம் தேதி மற்றுமொரு பே பர் வியூ தொடரான பாஸ்ட்லெனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க காத்திருக்கிறது WWE.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில், இந்த மாதத்தில் WWE-வில் நடக்க உள்ள நிகழ்வுகளின் கணிப்புகளை பற்றி இத் தொகுப்பில் காணலாம் .
#4. டீன் அம்ப்ரோஸ் மறுபடியும் WWE-வில் இணைவார்
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் டீன் அம்ப்ரோஸின் WWE ஒப்பந்தம் முடிவடைகிறது என்றும், அவர் WWE-யை விட்டு வெளியேறுவார் என்ற தகவலும் வெளிவந்தது. WWE-யும் இத்தகவலை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அம்ப்ரோஸ் வெளியேறுவது போல் WWE கதைக் களம் அமைத்து ரசிகர்களிடையே அனுதாபத்தை பெற இவ்வாறு செய்து வருகிறது
நமக்கு கிடைத்த தகவலின்படி, எதிர்வரும் மே மாதத்தில் நடக்க உள்ள WWE-இன் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் டீன் அம்ப்ரோஸின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் WWE-வின் நாடகம் அம்பலமாகியுள்ளது.
எனவே இம்மாத இறுதியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
#3. WWE வளையத்திற்குள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு திரும்ப இருக்கும் ப்ரே வயட் மற்றும் சமி ஸயன்
நீண்ட நாட்களாக WWE அரங்கத்திற்குள் கால் பதிக்காத ப்ரே வயட், அப்போது திரும்புவார் இப்போது திரும்புவார் என பலதரப்பட்ட கருத்துகள் நிலவி வருகிறது. அதைப்போலவே இந்த வாரம் சமி ஸயனின் நெருங்கிய நண்பரான கெவின் ஓவன்ஸ் WWE-வுக்கு திரும்பியதனால், ஸயன் எப்போது திரும்புவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரஸ்ஸில்மேனியா 35 நெருங்க உள்ளதால் WWE, ஸயனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரவேற்கும் பாஸ்ட்லென் போட்டிகளில், இவ்விரு வீரர்களும் அரங்கத்திற்குள் திரும்பி ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் கதைக்களம் அமைக்கப்படலாம்.
பாஸ்ட்லெனில் இவர்கள் திரும்பினால், ரஸ்ஸில்மேனியா 35-ல் இவ்விரு வீரர்களுக்கான தகுந்த போட்டியை WWE அமைக்கக்கூடும்.
#2. கெவின்ஓவன்ஸ் மற்றும் டேனியல் பிரையன் இடையேயான WWE சாம்பியன்ஷிப் டைட்டிலுக்கான போட்டி சர்ச்சைக்குரிய வகையில் முடிவு பெறுவது
பாஸ்ட்லெனில் நடைபெறவிருக்கும் WWE சாம்பியன்ஷிப்புக்கான போட்டியில் முதன்முதலில் டேனியல் பிரையனுக்கு ஏதிராக கோஃபி கிங்ஸ்டன் களம் காணுவார் என்று அறிவிக்கப்பற்றிருந்தது. ஆனால் வின்ஸ் மக்மஹோன் என்ன நினைத்தார் என்பது தெரியவில்லை கிங்ஸ்டனை கழற்றிவிட்டு அவருக்கு பதிலாக கெவின் ஓவன்ஸ் களம் காணுவார் என்ற திடீர் அறிவிப்பு வெளிவந்தது.
எனவே இப்போட்டியில் பல இன்னல்களை இவ்விரு வீரர்களும் சந்திக்க உள்ளார்கள் என்றும் பலர் கணித்துள்ளனர். இப்போட்டியில் பிரையன் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வெற்றியை நோக்கி கெவின் செல்லும்போது, பிரையனின் நண்பரான எரிக் ரோவன் அரங்கத்திற்குள் நுழைந்து கெவினை தாக்க முற்படவே பிரையனின் டிஸ்குவாலிபிகேஷன் உறுதிசெய்யப்பட்டு கெவின் வெற்றியை சுவைக்கும் வகையில் போட்டி அமைக்கப்படலாம். இதுவே பிரம்மாண்ட ரஸ்ஸில்மேனியாவில் ட்ரிபிள் திரேட் போட்டிக்கு அச்சாரமாக விளங்கும்.
#1. ஜான் ஸினா ஒருவழியாக ரஸ்ஸில்மேனியாவிற்கு திரும்புதல்
இந்த வருடத்தின் தொடக்கத்தில், ட்ரீவ் மக்என்டயருக்கு எதிரான போட்டியில், கையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக WWE-விலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறார் ஜான் ஸினா. ஆனால் இது பொய்யாக சித்தரிக்கப்பட்ட நிகழ்வாகும். ஏனெனில் ஜான் ஸினா ஹாலிவுட்டில் பிஸியாக உள்ளதால், இவ்வாறு சித்தரிக்கப் பட்டு ஜான் ஸினாவுக்கு WWE ஓய்வு அளிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டது.
எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜான் ஸினா ரஸ்ஸில்மேனியாவில் பங்கேற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. WWE-யும் ஜான் ஸினாவுக்கான ஏற்ற போட்டியாளரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
முந்தைய திட்டத்தின்படி, ஜான் ஸினா லார்ஸ் சல்லிவனுக்கு எதிராக களம் காணும் வகையில் கதைத் களம் அமைக்கப்பட்டது. சல்லிவன் பதட்டத்தின் விளைவாக பல இன்னல்களை சந்திக்க தயாராக இல்லை என்பதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
ஒருவழியாக, மக்என்டயருடன் ரஸ்ஸில்மேனியாவில் ஸினா களம் காணுவார் என்ற உறுதி செய்யப்படாத அறிவிப்பு வெளியாகியுள்ளது.