ரெஸ்டில்மேனியா ஆரம்பிக்க 50 க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இன்னும் இறுதி போட்டியாளார் முடிவாக வில்லை, இது வரை கிடைத்த தகவலின் படி ப்ராக் லான்சருக்கும் சேத் ரோலின்ஸ்க்கும் இடையேயான சாம்பியன்சிப் போட்டியும் ராண்டா ரௌசி மற்றும் சார்லட் ப்ளைர்க்கும் இடையேயான பெண்களுக்கான சாம்பியன்சிப் போட்டி மட்டும் உறுதியாகி உள்ளது.
ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டிக்கு இன்னும் பல இடங்கள் காலியாக உள்ளன. ரசிகர்களை பொறுத்த மட்டிலும் இது வெறும் போட்டி மட்டும் இல்லை, இதில் பல சுவராசியமான சம்பவங்கள் நடை பெறும் அதற்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
#1 205 லைவ் ப்ராண்ட்
205 லைப் ப்ராண்ட் மிக குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல உலக தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த போட்டியில் தகுந்த அங்கீகாரம் அளிக்கபடவேண்டும்.
க்ரூசர்வெய்ட் என்றழைக்கப்படும் போட்டி வழக்கமாக போட்டிக்கு முன்னதாக நடத்தபடும், இந்த முறை அதையும் ரெஸ்டில் மேனியாவின் முக்கியபோட்டிகளில் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. பட்டி மார்பி ஒரு சிறந்த வீரர் அவருக்கும் முறையான அங்கீகாரம் வழங்கபடும், எப்படியோ இந்த ரெஸ்டில் மேனியாவில் க்ரூசர்வெய்ட் போட்டியும் இணைக்கபட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்
#2 ராண்டா ரௌசி மற்றும் சார்லட் ப்ளைரை பெக்கி லின்ச் வீழ்த்த வாய்ப்பு.
பெக்கி லின்ச் தனது அறிமுகத்துக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் வந்துள்ளார்,இவர் மட்டுமே இன்னும் என் எக்ஸ் டி போட்டியிலும் வெல்லாதவர்.
அவர் சாம்பியானான ஒரே போட்டி ஹெல் இன் செல் என்றழைக்கப்படும் படும் போட்டி.
இந்த முறை ரெஸ்டில் மேனியாவில் பங்கேற்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் இவர் தற்காலிகமாக தடை செய்யபட்டுள்ளார்.ஆனாலும் அவருக்கு ரெஸ்டில்மேனியாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் நம்பியுள்ளனர்.
இதில் அவர் பெற்றி மட்டும் போதாது ராண்டா ரௌசி மற்று. சார்லட் ப்ளைரை வீழ்த்த வேண்டும்.
#3 கோஃபி கிங்ஸ்டனின் சாம்பியன்சிப் கனவு
கோஃபி கிங்ஸ்டன் 2009 ல் இருந்து இது வரை ஒரு முறை கூட எலிமினேசன் சாம்பரில் இடம் பெறவில்லை, இப்போது முதன் முறையாக அதற்கு தகுதி பெறுகிறார். இதன் மூலம் அவர் சாம்பியன் சிப் கனவை நனவாக்க முடியும்.
இந்த சாம்பியன்சிப் ஒரு முறை கூட ஒரு கருப்பர் இனத்தவரால் வாங்க முடிய வில்லை, ஆனால் கோஃபி கிங்ஸ்டனுக்கு வாய்ப்பு கிடைத்தது, அவரின் கடந்த கால ஆட்டங்களில் மிகவும் சிறப்பாக ஆடியுள்ளார். எனவே இம்முறை கண்டிப்பாக சாம்பியன்சிப் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
#4 கடைசியாக ஒன்றினயும் ஷீல்ட்
ரோமன் ரெய்ன்ஸ், செத் ரோலின்ஸ், டீன் ஆம்ப்ரோஸ் இவர்கள் மூவரும் ஒன்றினைந்த குழுதான் ஷீல்ட் என்றழைக்கபடுகிறது. இவர்கள் மூவரும் ஒன்றினைந்து பங்குபெறும் கடைசி ரெஸ்டில்மேனியா இதுவாக இருக்கும்.
ரோமன்ரெய்ன்ஸ் உடல்நிலை காரணமாக தற்காலிகமாக ஓய்வுபெற போவதாக அறிவித்தார். டீன் ஆம்ப்ரோஸின் ஒப்பந்த காலம் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது எனவே நாம் மீண்டும் ஷீல்ட் அணியினை ஒன்றாக காணமுடியாது.
இவர்களது கடைசி ஒன்றினைவு மிகவும் உணர்ச்சிவசமானதாக இருக்கும்.