இந்த வாரத்தின் ரா எபிசொடானது கடந்த ரா எபிசோடை விட சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது. ரஸ்ஸில்மேனியாக்கான, முடிவு செய்யப்படாத சில விஷயங்களை இந்நிகழ்ச்சியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது WWE.
நேற்றைய இரவில் பல முக்கிய அறிவிப்புகளை ஆதாவது குர்ட் ஆங்கிள்ளின் எதிராளி யார் என்ற அறிவிப்பும், எளியாஸ்ஸின் ரஸ்ஸில்மேனியா வாய்ப்பு, மற்றும் ட்ரிபிள் ஹெச் பாடிஸ்டா ஆகியோர் இடையேயான அடுத்த கட்ட நிகழ்வுகள் என்ற பல விஷயங்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர்.
சில கேள்விகளுக்கு உள்ளாக்கும் வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சில போட்டிகளை WWE அமைத்திருந்தாலும். ரஸ்ஸில்மேனியாவுக்கு தேவையான பாதையை இந்நிகழ்ச்சியில் வித்திட்டது WWE.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நேர்ந்த மூன்று நல்ல விஷயங்களைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
#3. ஸ்ட்ரோவ்மன் லியோ ரஷ்ஷை பின் செய்தல்
நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆச்சரியமூட்டும் விதமாக ஃபின் பெலோர் தன்னுடன் இணைந்து போட்டியிடுவதற்காக ப்ரவுன் ஸ்ட்ரோவ்மனை அழைத்து வந்தார். இதைக்கண்ட ரசிகர்கள் என்ன நடக்கிறது என்று திகைத்துப் போயினர்.
பெலோருக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், அவர் ஸ்ட்ரோவ்மனை தேர்வு செய்தது பலரிடையே வியப்பில் ஆழ்த்தியது.
இந்த போட்டியில் தங்களால் முடிந்த வரை போராடினர் பாபி லாஷ்லி மற்றும் ரஷ் இணை. இப்போட்டியில் பெரும்பாலும் பெலோரே வளையத்திற்குள் அதிகம் காணப்பட்டார்.
போட்டியின் இறுதிகட்டம் நெருங்கவே ஸ்ட்ரோவ்மனிடம் மாட்டிக்கொண்டார் ரஷ். இதை கண்ட லாஷ்லி அரங்கத்தை விட்டு வெளியே சென்றார். தனது மேனேஜரான லியோ ரஷ் தனியாக ஸ்ட்ரோவ்மனிடம் மாட்டிக்கொண்டது பெரிதாக அவர் பொருட்படுத்தவில்லை.
ஸ்ட்ரோவ்மனின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ரஷ், பின் செய்யப்பட்டார்.
#2. டிராவிஸ் ப்ரோனின் அறிமுகம்
டிராவிஸ் ப்ரோன் MMA-வில் சண்டை இடுபவர், UFC போட்டிகளிலும் பலமுறை சண்டையிட்டுள்ளார். தற்பொழுது WWE-வில் ப்ரோமோஷனுக்காக இவர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், தற்போதைய மகளிர் WWE-வில் சிம்ம சொப்பனமாக விளங்கும் ரோண்டா ரௌசியின் கணவர்தான் இந்த டிராவிஸ் ப்ரோன். பலமுறை ரோண்டா போட்டிகளில் பங்கேற்கும்போது கூட்டத்தில் ஒருவனாக பங்கேற்றுள்ளார் டிராவிஸ்.
சில மாதங்களுக்கு முன்பு பெக்கி லிஞ்சால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொண்டிருக்கும் போதெல்லாம் தலையிடாமல் வேடிக்கை பார்த்த இவர் தற்போது பாதுகாவலரை அடித்துள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிகழ்வானது, WWE-வின் எதிர்வரும் திட்டமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
இனிமேல், ரோண்டா ரௌசி போட்டிகளில் பங்கேற்கும் பொழுது, ரசிகர்களின் கவனம் டிராவிஸ் ப்ரோன் மீதும் இருக்கும். போட்டியில் இவரின் தலையீடு ஏதாவது இருக்குமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் அரங்கேறும் நிகழ்வுகளை எதிர்நோக்குவர்.
#1. ஷியில்டு அணியின் இரண்டாவது முக்கியமான நபரை, ட்ரீவ் மக்-என்டயர் வீழ்த்துதல்.
கடந்த வாரம் பரோன் கார்பினுக்கு எதிராக சண்டையிட ரோமன் ரெய்ங்ஸ் ஆயத்தமாகும் வேலையில், திடீரென அவரை தாக்க முற்பட்டார் மக்-என்டயர்.
அதே இரவில் ரோமனின் தாக்கப்பட்டதற்கு பதில்தாக்குதல் நடத்த சென்ற டீன் ஆம்ப்ரோஸுக்கு எதிராக சண்டையிட்டார் மக்-என்டயர். அவரை எளிதாக வென்றார் மக்-என்டயர். இந்த வாரம் செத் ரோல்லின்ஸுக்கு எதிராக மக்-என்டயர் களம் கண்டார். WWE, ஷியில்டு அணியை பலவீனப்படுத்த இவ்வாறு செய்கிறது என்று கருத்து நிலவி வருகிறது. இந்தப் போட்டியில் ப்ராக் லெஸ்னரின் கூறுக்கிடுதலால் ரோல்லின்ஸின் கவனம் சிதறவே வெற்றியை தன் வசமாக்கினார் மக்-என்டயர்.
இந்த பகையை வைத்து, எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் ரோமன் ட்ரயூ மக்-என்டயரை வன்மத்துடன் எதிர் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.