கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சிறப்பு WWE RAW நிகழ்ச்சியில், WWE-வின் தலைமை நிர்வாக அதிகாரியான வீனஸ் மக்மஹோன் சாண்டா கிளாஸாக (SANTA CLAUS) வேடமணிந்து பங்குபெற்றார். நிகழ்ச்சியில் மூன்று மிக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று ஜான் சீனாவின் கம்பேக்கை பற்றி அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.
இதைப்பற்றி ஒருவேளை தெரியாமல் போயிருந்தால்…
ஜான் சீனா வின் சினிமா வாழ்க்கையானது 2018 ஆம் ஆண்டு பெரும் உச்சத்தை பெற்றது. இந்த ஆண்டு முழுவதும் WWE டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமில்லாமல் டிரான்ஸ்பார்மர்ஸ் குழுமத்தின் ஹாலிவுட் படமான ஸ்பின் ஆப் பும்ப்ளீ படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தார் ஜான் சீனா. அடுத்த ஆண்டும் WWE போட்டிகளுக்கு பிறகு சினிமாவில் அதிக அளவில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்தின் WWE RAW நிகழ்ச்சியானது முந்தைய வாரமே படம் பிடிக்கப் பட்டிருந்தது. இந்த வாரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையினால் வீரர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இவ்வாறு செய்யப்பட்டது. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்த வாரத்தின் RAW நிகழ்ச்சியானது சமீபத்தில் நடந்த சிறந்த நிகழ்ச்சியாக இந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட RAW அமைந்திருந்தது.
மையக்கரு
வின்ஸ் மக்மஹோன் அறிவித்திருந்த முக்கியமான அறிவிப்புகளில் ஜான் சீனாவின் திரும்புதலும் இடம்பெற்றிருந்தது. அவர் கூறியதாவது “ஜான் சீனா WWE RAW-வில் திரும்புவதால் SMACKDOWN-யிலும் திரும்புவார்” என்று சீனாவின் கம்பேக்கை பற்றி தெரிவித்திருந்தார் மக்மஹோன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜான் சீனாவின் கம்பேக் தேதியானது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூடிய விரைவில் இதைப்பற்றி WWE அறிவுப்பு ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜான் சீனா கம்பேக் மட்டுமல்லாது இருவேறு அறிவிப்புகளும் வெளியிட்டிருந்தார் மக்மஹோன். அதில் ஒன்று, பல கோரிக்கைகளுக்கு பின்பு WWE பெண்களுக்கான டேக் டீம் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு. மற்றுமொன்று இந்த வருட இறுதியில் அதாவது இந்த வாரத்தில் WWE ஸ்டீல் கேஜ் மேட்ச் நடத்தப்படும் என்ற அறிவிப்பு. இப்போட்டியில் டால்ப் ஜிக்லர் மற்றும் ட்ரூ மக்இன்டயர் ஒருவருக்கொருவர் மோத உள்ளனர். சமீபகாலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், WWE நிகழ்ச்சிகள் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன. எனவே இப்போட்டியின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் போட்டியை விருவிருப்பாக அமைக்க WWE நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தது என்ன ?
WWE-வின் ராயல் ரம்பல் நடைபெற சில தினங்களே உள்ள நிலையில் ஜான் சீனாவுக்கான திட்டம் என்னவென்று WWE தீர்மானிக்கும் என்று தெரிகிறது. மேலும் WRESTLEMANIA-வும் தொடங்க சில மாதங்களே உள்ளதால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பல விறுவிறுப்பான போட்டிகளை எதிர் பாரக்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் இருக்கும் ஜான் சீனா விறுவிறுப்பான போட்டிகளை தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், WWE நிர்வாகமும் அதையே விரும்பும். ரோமன் ரெய்ங்ஸும் தற்போது இல்லாத நிலையில் WWE கலை இழந்து காணப்படுகிறது. எனவே WWE நிர்வாகம் ஜான் சீனாவை வைத்து பல முக்கிய ஆட்டங்களை முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.