WWE எலிமினேஷன் சேம்பர் 2019 : இந்த மூன்று காரணங்களுக்காவது கோஃபி கிங்ஸ்டன் WWE சாம்பியன்ஷிப்பை வென்றிருக்க வேண்டும்.

கோஃபி கிங்ஸ்டன்
கோஃபி கிங்ஸ்டன்

நெடுங்காலமாக பெரிதும் பேசப்படாத வீரராக விளங்கி வரும் கோஃபி கிங்ஸ்டன் இன்று நடைபெற்ற போட்டியின் மூலம் முன்னிலையான வீரர்களுடன் ஒப்பிடும் வகையில் போட்டியிட்டது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே முன்னணி வீரராக கோஃபி கிங்ஸ்டனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்களின் ஆதரவால் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் அனல் பறக்கும் அசைவுகளால் டேனியல் பிரையனுக்கு கடுமையான போட்டி கொடுத்தார் கிங்ஸ்டன். ஆனால் WWE-வின் ஆக்கப்பூர்வமான ஸ்கிரிப்டின் படி சாம்பியன்ஷிப்பை டேனியல் பிரையனே கைப்பற்றும் வகையில் போட்டி அமைந்திருந்தது. ஆனால் பெருவாரியாக WWE சாம்பியன்ஷிப் டைட்டிலை கோஃபி கிங்ஸ்டன் தான் வென்றெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எண்ணினர்.

கோஃபி கிங்ஸ்டன் இந்த WWE சாம்பியன்ஷிப்பை கீழ்வரும் மூன்று காரணங்களுக்காவது வென்றிருக்க வேண்டும்

#3. காலம் கடந்து செல்கிறது.

கோஃபி கிங்ஸ்டன் WWE வரலாற்றில் 11 வருடமாக போட்டியிட்டு வருகிறார். இதுவரை டபிள்யூ டபிள்யூ ஈ சாம்பியன்ஷிப்பை அவர் வென்றதில்லை. அமெரிக்க டைட்டில் மற்றும் இன்டர்கோன்டினென்டல் சாம்பியன்ஷிப் டைட்டில் ஆகியவற்றை இவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரு சிறந்த வீரராக இருந்த போதிலும் இவருக்கான வாய்ப்புகள் பல மேடைகளில் மறுக்கப்பட்டிருந்தன. WWE எலிமினேஷன் சாம்பேரில் போட்டியிடும் வாய்ப்பை பல போராட்டங்களுக்கு பிறகு பெற்ற கோஃபி கிங்ஸ்டன், ரசிகர்களை தனது தனித்துவமான அசைவுகளால் கட்டிப் போட்டுவிட்டார். இந்தப் போட்டியில் கிங்ஸ்டனுக்கான இடத்தில் முஸ்தபா அலி போட்டியிட இருந்தது. ஆனால் முகத்தில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக முஸ்தபா அலி போட்டியிலிருந்து விலகினார்.

தப்பித் தவறி வந்த வாய்ப்பை கோஃபி கிங்ஸ்டன் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை இல்லாத ரசிகர்களின் அரவணைப்பை அவர் வென்றுள்ளார்.

WWE நிர்வாகம், கோஃபி கிங்ஸ்டன் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பினை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே போட்டியின் முடிவு ஸ்கிரிப்ட் செய்த விளைவின் காரணமாக ஆட்டத்தின் போக்கை அதன் போக்கே விட்டு விட்டது WWE . நட்சத்திர வீரர்களான ரோமன் ரெய்ங்ஸ் மற்றும் பெக்கி லிஞ்ச் ஆகியோர் WWE நிர்வாக அதிகாரிகள் வின்ஸ் மக்மஹோன் மற்றும் தி அத்தாரிட்டியின் துணையோடு நட்சத்திர அந்தஸ்தை பெற்றனர். ஆனால் கோஃபி கிங்ஸ்டனுக்குப் எந்தவித துணையும் இல்லை, தானாகவே ரசிகர்களின் அன்பினை பெற்றுள்ளார்

#2. ஸ்மாக்டெளனின் புதுமுகமாக கோஃபி சித்தரிக்கப்பட்டு இருக்கலாம்.

கோஃபி கிங்ஸ்டன்
கோஃபி கிங்ஸ்டன்

கடந்த சில நாட்களாக சாம்பியன்ஷிப்பானது ஏஜே ஸ்டைல்ஸ் மற்றும் டேனியல் பிரையன் ஆகியோரிடையே இருந்து வருகிறது. ஆகவே மாற்றத்திற்கு இதுவே சரியான நேரமாக இருந்தது. ஏஜே ஸ்டைல்ஸ் மற்றும் டேனியல் பிரையன் வெற்றிகரமாக தங்களது டைட்டில்களை பாதுகாத்துள்ளனர் ஆனாலும் மாற்றத்திற்கு இதுவே சரியான நேரமாக இருந்தது.

கோஃபி டைட்டிலை வென்றிருந்தால் WWE-வில் புதிய கதைக்களம் உண்டாகியிருக்கும். கோஃபி, ஏஜே ஸ்டைல்ஸ், டேனியல் பிரையன் மற்றும் முஸ்தபா அலியை வைத்து கதையை அமைத்து இருக்கும் WWE.

அவ்வாறு நடந்திருந்தால் டேனியல் பிரையன் மறுப்போட்டி நடத்துமாறு மக்மோகன் இடம் கெஞ்சிருப்பார். ஏஜே ஸ்டைல்ஸ் மற்றும் முஸ்தபா அலியும் வெவ்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி மறு போட்டிக்கான வாய்ப்பை பெற்றிருப்பர். எனவே நான்கு முனை போட்டியாக ரெஸில்மேனியா 35-இல் ஒர் பிரம்மாண்ட போட்டி அமைந்து இருக்கக் கூடும்.

#1. நியூ டே அணி முடிவுக்கு வந்திருக்கும்.

நியூ டே அணி
நியூ டே அணி

உண்மையை கூற வேண்டும் என்றால், நியூ டே அணி ஆடைகள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் ஆகியவற்றை நம்பிதான் உள்ளது. இல்லையென்றால் முன்னதாகவே இவ்வணியானது முறிவு பெற்றிருக்கும். கோஃபி டைட்டிலை வென்றிருந்தால் ஒரு புது கதைக்களம் நியூ டே அணியை வைத்து உண்டாகி இருக்கும். கோஃபியின் வெற்றியை நியூ டே அணியின் வழக்கமான கொண்டாட்டமான பான் கேக்குகளை வைத்து கொண்டாடும் முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அணியின் மற்ற இருவரும் (சேவியர் வூட்ஸ் மற்றும் பிக் ஈ) கோஃபியை தாக்குவது போன்ற கதைக்களம் அமைக்கப் பெற்றிருக்கும். ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கும். சமீபகாலமாக WWE டிவி நிகழ்ச்சிகள் சரிவை சந்தித்து வருவதையொட்டி இக்கதைக்களம் டபிள்யூ டபிள்யூ ஈ நிகழ்ச்சிகளை முன்னிலைப்படுத்தி இருக்கும்.