நடந்தது என்ன ?
குர்ட் ஆங்கள் மண்டே நைட் ராவில் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. மீண்டும் டபிள்யு டபிள்யு போட்டிகளில் திரும்பிய அவர், அரங்கிற்குள் களம் கண்ட போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் வகையில் ரசிகர்களை வியக்கவில்லை. இந்த வாரம் நடந்த போட்டியில் பாரேன் கார்பினிடம் தோல்வியைத் தழுவியிருந்தார் குர்ட் ஆங்கள். இதன் காரணமாகவே தனது டபிள்யூ டபிள்யூ ஈ வாழ்க்கையில் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளார் குர்ட் ஆங்கள்.
ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
குர்ட் ஆங்கள் டபிள்யு டபிள்யு போட்டிகளுக்கு திரும்பியபின் சுமார் 10 போட்டிகளில் களம் கண்டுள்ளார். அதில் குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே தனியாக சண்டையிட்டுள்ளார்.
குர்ட் ஆங்களின் திரும்பியப்பின் களம் கண்ட முதல் போட்டியில் வெற்றியை சுவைத்திருந்தார். அந்தப் போட்டியில் ரோமன் ரேயினிஸ-க்கு பதிலாக ஷியில்டு அணியில் இடம்பெற்றிருந்தார். மூன்று பேர் ஐந்து நபரை எதிர்கொள்ளும் HANDICAP TLC போட்டியில் களம் கண்டு இருந்தார் குர்ட் ஆங்கள். அதன்பின்பு 2017 ஆம் ஆண்டு நடந்த சர்வைவர் சீரிஸில் வெற்றி கண்ட அணியில் இடம்பெற்றிருந்தார் குர்ட் ஆங்கள். ரஸில்மேனியா 34-ல் முதன்முதலாக களமிறங்கிய ரோண்டா ரோஸியுடன் கைகோர்த்து ட்ரிபிள் எச் மற்றும் அவரது மனைவி ஸ்டஃப்பனி மக்மஹோனை எதிர்கொண்டார் குர்ட் ஆங்கள். அந்தப் போட்டியிலும் வெற்றியை தன்வசப்படுத்தி இருந்தார் குர்ட் ஆங்கள்.
அதன் பின்பு பேட்டில் ராயல் மேட்சஸ் என்ற போட்டிகளில் களம் கண்டார் குர்ட் ஆங்கள். ராயல் ரம்பிள் போட்டிகளில் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருந்தார், அதன் பின் நடந்த BATTLE ராயல் போட்டியில் வெற்றி கண்டு WWE கிரவுண் ஜுவல்-இல் நடைபெறும் BEST IN THE WORLD TOURNAMNET இல் தனது இடத்தினை உறுதிப்படுத்தினார். பின்பு கிரவுண் ஜுவல்-இல் டால்ப் ஜிக்லரால் கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார் குர்ட் ஆங்கள். அதன்பின் நடந்த ஒரு RAW போட்டியில் தனது சுய சப்மிஷன் லாக்கில் டிரிவ் மக்ஏன்டயரிடம் பிடிபட்டு தோல்வியைத் தழுவியிருந்தார் குர்ட் ஆங்கள்.
டிசம்பர் 17-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பலரது உதவியினால் பாரேன் கார்பினை வீழ்த்தி இருந்தார் குர்ட் ஆங்கள். பாரேன் கார்பின் கருணையற்ற முறையில் அப்பல்லோ கிரியுஸ், சாட் காபல், மற்றும் குர்ட் ஆங்கள் ஆகியோரால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வாரம் நடக்கும் ஹால் ஆஃப் பேமரில் குர்ட் ஆங்கிளை பாரேன் கார்பின் பழிவாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மையக்கரு
பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், முன்னாள் WWE சாம்பியனான குர்ட் ஆங்கிள் மண்டே நைட் ராவில் ஒரு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் என்று பதிவிட்டு உள்ளது WWE-வின் அதிகாரப்பூர்வ கணக்கு.
அடுத்தது என்ன?
அனேகமாக குர்ட் ஆங்கிள் தனது ரஸில்மேனியா எதிரியை உற்று நோக்கி தனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வார் என்று தெரிகிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குர்ட் ஆங்கிள், பெரன் கார்பின் இல்லையெனில் டிரிவ் மக்ஏன்டயறுடன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. பல முன்னணி சூப்பர்ஸ்டார்கள் WWE-யை விட்டு விலகிய நிலையில், குர்ட் ஆங்கிளை வைத்து கதைக்களம் அமைக்கும் நோக்கத்தில் இறங்கியுள்ளது WWE.
பல தரப்பினர், குர்ட் ஆங்கிள் தனது ஓய்வினை அறிவிக்கக் கூடும் என்றும் கூறி வருகின்றனர். என்னவாக இருந்தாலும் எதிர்வரும் மண்டே நைட் ராவில் உண்மையான நிலவரம் தெரியவரும்.
எழுத்து : கிரேக் புஷ்
மொழியாக்கம் : பஹாமித் அஹமத்