ஜான் ஸினாவின் பலவீனம் இதுதான் : முன்னாள் WWE வீரர்

ஜான் ஸினா
ஜான் ஸினா

இது எதைப்பற்றிய தொகுப்பு?

16 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜான் ஸினா நீண்டகாலமாக ஓய்வு எடுத்து வருகிறார். அவர் WWE போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தாலும் அவரின் பெயரை சொன்னாலே இன்னமும் அரங்கத்தில் ஆக்ரோஷத்திற்கு பஞ்சமே இருக்காது. டாப் 10 WWE வீரர்கள் என எடுத்துக்கொண்டால் அதில் ஜான் ஸினா முதல் மூன்று இடங்களில் கண்டிப்பாக இடம் பெறுவார்.

தனது WWE வாழ்நாளில் வெவ்வேறு காலகட்டத்தில் பல தரப்பட்ட சூப்பர் ஸ்டார்களை எதிர்கொண்டுள்ளார் ஜான் ஸினா. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரேண்டி ஆர்டன், பரம எதிரியாக இன்றளவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் WWE ஜாம்பவானான லான்ஸ் ஸ்டார்ம் சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில் ஜான் ஸினாவின் பலவீனத்தைக் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…

WWE-வில் இன்றியமையாத வீரரான ஜான் ஸினா தனது கேரியரில் பல டைட்டில்களை வென்று குவித்துள்ளார். இன்றளவும் WWE-வில் நம்பத்தக்க சூப்பர்ஸ்டாராக விளங்குகிறார் ஜான் ஸினா.

ஸினா சுமார் 17 வருடங்களுக்கு முன்பு, அதாவது 2002 ஆம் ஆண்டு WWE-வில் காலடி எடுத்து வைத்தார். 16 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், அமெரிக்க டைட்டில்களையும், டேக் டீம் சாம்பியன்ஷிப் டைட்டிலும் ஜான் ஸினா வென்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜான் ஸினா WWE-வின் ரா மற்றும் ஸ்மாக்டௌன் நிகழ்ச்சியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்தார். அடுத்த சில நாட்களிலேயே காயத்தின் விளைவாக மறுபடியும் சிறிது காலம் WWE நிகழ்ச்சிகளில் பங்கேற்பதே தவிர்த்து ஓய்வில் இருந்து கொண்டு வருகிறார். அவருக்கான அடுத்தகட்ட பாதை இன்னும் தெளிவாகவில்லை. சொல்லப்போனால் ரஸ்ஸில்மேனியாவில் அவர் பங்கேற்பது சந்தேகமே, ஏனெனில் ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி உள்ள ஜான் ஸினா அதற்கான படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் ஜான் ஸினா காயத்தினால் மறுபடியும் ஓய்வில் இருப்பது ஜோடிக்கப்பட்டது என்று பலர் கூறுகின்றனர். படப்பிடிப்பின் காரணமாகவே இவ்வாறு WWE கதை களம் அமைத்தது என விமர்சனம் எழுகிறது.

மையக்கருத்து

சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் நடந்த ரசிகர்களுடனான உரையாடலில், லான்ஸ ஸ்டார்மிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. ஜான் ஸினாவை பற்றி கேட்கப்பட்ட கேள்வி யான “நீங்கள் ஜான் சீனாவுக்கு எதிராக களம் கண்டதுண்டா” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜான் ஸினா வுக்கு எதிராக இதுவரை 2 முறை மோதி உள்ளேன், மோதிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றியை கண்டுள்ளேன்” என்று பெருமிதத்துடன் பதிவிட்டிருந்தார்.

ஜான் ஸினா வின் பலவீனத்தை பற்றி இன்னொரு கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்திருந்தார் லான்ஸ் ஸ்டார்ம். ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் “நீங்கள் ஜான் சீனாவின் பலவீனமாக எதைக் கருதுகிறீர்கள்?” என்ற கேள்வியை டீவீடாக பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த லான்ஸ் ஸ்டார்ம் “ஜான் ஸினா இறுக்கமான கார் சட்டையும் (டயிட்ஸ்) மற்றும் அவரது மல்யுத்த காலணிகளான “பூட்ஸ்” அணிந்து கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு பலவீனமாக இருக்கும்” என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்

அடுத்தது என்ன ?

தற்பொழுது ஹாலிவுட் திரையுலகில் பிஸியாக இருப்பதால் WWE-வில் கவனம் செலுத்த தவறுகிறார் ஜான் ஸினா. ரஸ்ஸில்மேனியா 35 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவரை தயார் படுத்த பல யுத்திகளை கையாண்டு வருகிறது WWE நிர்வாகம். மேலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி இவருக்கான பிரமாண்ட போட்டி அமைக்கப்படும் என்று WWE வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ரஸ்ஸில்மேனியாவில் அண்டர்டேக்கரிடம் ஜான் ஸினா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.