Create
Notifications

WWE போட்டிகளில் நம்மால் உண்மை என நம்பப்பட்ட பொய்கள்!!!

WWE போட்டிகளில் நம்மால் உண்மை என நம்பப்பட்ட பொய்கள்!
WWE போட்டிகளில் நம்மால் உண்மை என நம்பப்பட்ட பொய்கள்!
Karthick DK
visit

WWE போட்டிகளானது பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் WWF என்ற பெயரிலேயே இந்த மல்லியுத்த போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பின் இதற்க்கு கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி இதனை வியாபாரமாக்க முடிவு செய்தனர். இதனால் இதனை ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாற்றி விட்டனர். எனவே இந்த நிகழ்ச்சியின் பெயரையும் WWE என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் முழு தலைவராக மெக்மோஹன் செயல்பட்டு வருகிறார். இது இருக்கட்டும் இந்த போட்டிகளை நாம் அனைவரும் விரும்பியதற்கு காரணம் அதில் பங்கேற்ற கதாபாத்திரங்களும், அதில் திணிக்கப்பட்ட சில பொய்களுமே. உதாரணத்திற்கு இந்த போட்டிகளில் பங்கேற்று வரும் கேன் மற்றும் அண்டர்டேக்கர் இருவரும் சகோதரர்கள் என்ற வதந்தி பரவியது. இதனை நிரூபிக்கும் விதமாகவும் பல தருணங்களும் அமைந்தன. ஆனால் இவர்கள் இருவரும் சகோதரர்கள் இல்லை என்பது நம்மில் பலருக்கு இன்றளவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்று 90களில் வாழ்ந்த நம்மிடம் நம்பவைக்கப்பட்ட சில வதந்திகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்,

#1) அண்டெர்டெகருக்கு 7 உயிர்!!!

அண்டர்டேக்கர்
அண்டர்டேக்கர்

இது பொய் என்று கூட இன்றளவும் பலருக்கு தெரிந்திருக்காது. அப்போதைய காலங்களில் WWE நிகழ்ச்சியை அனைவரையும் பார்க்கவைக்க பல யுக்திகளை கையாண்டனர். அதனை அனைத்தையும் அதில் பங்கேற்கும் கதாபாத்திரங்களின் மீது திணிக்கப்பட்டது. இதன் விளைவே அண்டர்டேக்கருக்கு 7 உயிர் என்ற வதந்தி. ஆனால் இதனை பலமுறை நிரூபிக்கும் விதமாக பல முறை இவரை மற்ற வீரர்கள் கொன்று விடுவது போல போட்டிகளை நமக்கு காட்டுவார்கள். அதன் பின் சில நாட்களுக்கு அன்டேர்டேக்கர் எந்த வித போட்டிகளிலும் தலை காட்ட மாட்டார். அதனை பார்த்த நாம் உண்மையிலேயே அவர் இறந்து விட்டார் போல அதனால் தான் அடுத்து எந்த போட்டிகளிலும் அவர் கலந்துகொள்ளவில்லை என நம்ப வைத்தனர். பல நாட்கள் கழித்து அவர் மீண்டும் வருவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டன. இது ஒருமுறையையோ அல்லது இருமுறையோ அல்ல பல முறை இப்படி நிகழ்ந்துள்ளன. இதனை கண்ட ரசிகர்கள் அண்டர்டேக்கருக்கு உண்மையிலேயே 7 உயிர் என நம்பிவிட இதுவே முக்கிய காரணமாக அமைந்தது.

#2) அண்டர்டேக்கரும் கெயினும் சகோதரர்கள்!!!

அண்டர்டேக்கர் - கெயின்
அண்டர்டேக்கர் - கெயின்

WWE போட்டிகளில் எந்த அளவுக்கு அண்டர்டேக்கர் முக்கிய இடம் வகித்தாரோ அதே அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களால் விரும்பப்பட்டவர் கெயின். இவரும் அண்டர்டேக்கரும் உடன் பிறந்த அண்ணன் தம்பி போன்ற பாவனைகளும் அந்த நிகழ்ச்சிகளில் அரங்கேறியுள்ளன. அப்ப்போதய போட்டிகளில் இவர்கள் இருவரும் அந்த அளவுக்கு மோதிக்கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இருவரும் இணைந்து பல போட்டிகளில் பங்கேற்றுள்ள. இவை அனைத்துமே பார்க்கும் நமக்கு இவர்கள் சகோதரர்கள் என்ற வதந்தியை நம்ப வைத்தது.உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.

#3) கெயின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது!!!

கெயின்
கெயின்

கெயின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஒரு தீ விபத்தில் சிக்கி அதனால் அவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனை WWE நிகழ்ச்சி நிர்வாகம் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. அவர் ஆரம்பம் முதலே இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் போது முகத்தில் முகமூடியுடனே அறிமுகம் செய்யப்பட்டார். இதனால் இவரின் முகத்தில் யாரோ எதோ செய்துவிட்டனர் என்ற வதந்தி நம்மிடம் நம்ப வைக்கப்பட்டது. அதன் பின் சிலமுறை களத்தில் சண்டையிடும் போது இவர் தன் முகமூடியை கழட்டி தன் நிஜமுகத்தை சக போட்டியாளரிடம் காட்டும் போது அதனை கண்ட அந்த வீரர் பயத்தில் நடுங்கி விடுவார். இதன் மூலம் இவரும் முகம் அந்த அளவுக்கு கொடுமையாக சிதைக்கப்பட்டுள்ளது போலவும் நம்மை நம்பவைத்தனர். அதன் பிந்தைய காலகட்டங்களில் கெயின் இத்தகைய முகமூடிகளை பயன்படுத்தவில்லை. அவர் தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து அதனை நீக்கி விட்டார் எனவும் ரசிகர்களின் மனதில் பதியவைக்கப்பட்டது.


Edited by Fambeat Tamil
Article image

Go to article
Fetching more content...
App download animated image Get the free App now