WWE நியூஸ் : மற்றுமொரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் -யை ப்ரீ ஏஜென்ட்டாக உறுதிப்படுத்திய WWE

Free Agent
Free Agent

எந்த ஒரு நிறுவனத்திலும் “ப்ரீ ஏஜென்ட்” என்பவர் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் கீழ் நடப்பதாக கையெழுத்து இடாமல், சுதந்திரமாக செயல்படக்கூடிய உரிமை படைத்தவர் ஆவார்.

இந்தக் கட்டுரையின் கதை :

மிக முக்கியமான ஒரு சூப்பர் ஸ்டார் யை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த போவதாக கடந்த சில வாரங்களாகவே WWE மிகைப்படுத்திக் கூறிவருகிறது. ஆனால் அப்படி அறிமுகமாகும் அவர் WWE க்கு எந்த வகையான ப்ராண்ட்-ஆக இருப்பார் என்று தெரியவில்லை.

ஆம், கூடிய விரைவில் WWE ஒரு சிறந்த போட்டியாளரை அறிமுகப்படுத்த போவதாக, WWE வர்ணனையாளரான மைக்கேல் கோல் மற்றும் மற்றுமொரு மூத்த விமர்சகர் ஆகியோர் சூசகமாக WWE RAW ன் கடந்த சில எபிசோடுகளில் ரசிகர்களுக்கு கூறிவருகின்றனர்.

இதற்கு முன் நடந்தது :

Sullivan
Sullivan

சல்லிவன் என்றழைக்கப்படும் டைலன் மைலி. இவர்தான் WWE-ன் அடுத்த முக்கியமான சூப்பர் ஸ்டார் ஆகக்காத்திருப்பவர். அமெரிக்கன் ப்ரொபஸ்னல் ரெஸ்சலரான இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு, WWE-ன் முன்னனி வீரரான பாபி லாஸ்லியின் மூலம் WWE ஆல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இவரின் அசுரத்தானமான கைகளுக்காகவும், முன்னாள் வீரரான ஆன்ட்ரூ தி ஜெயன்ட் போன்று இருப்பதாலும் மேலும் இவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பின் மூலம் மிரட்டலாக சண்டையிடுவதனாலயும் NXT ல் முக்கியமான போட்டிகள் என்றாலே இவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். சல்லிவன் 2017 ஆம் ஆண்டு NXT க்குள் வரும் முன், நான்கு வருடங்கள் கடுமையாக உழைத்துள்ளார்.

சர்வைவர் சீரியஸின் ஒரு சிறிய பகுதியாக இவரின் வருகையை பற்றிய துணுக்கு ஒன்றை வெளியிட்டது WWE. இவரை எந்த வகையில் உபயோகிக்கலாம் என்பதைக் கண்டறிய, இவரின் சண்டையிடும் நுட்பங்களையும், திறமைகளையும் கடந்த சில வருடங்களாக WWE உன்னிப்பாக கவனித்தது

அதன் பிறகு அவரைப் போட்டிகளின் மூலமும், காரசாரமான கருத்துக்கள் மூலமாகவும் படிப்படியாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. தற்போது அவரின் உபயம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும் இவரின் ஒப்பந்தம் பற்றியும், RAW வின் வீரராக தேர்வு செய்யப்படுவது பற்றியும் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

இந்தக் கட்டுரையின் கரு:

முன்னமே குறிப்பிட்டது போல மைக்கேல் கோல், சல்லிவனின் வருகையைக் கடந்த RAW ல் உறுதிப்படுத்திய நிலையில், எதிர்கால சாம்பியனான அவரை தங்களது பக்கம் இணைத்துக் கொள்ள இரண்டு மேனேஜர்களும்(RAW மற்றும் SMACKDOWN) விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அடுத்த வாரத்திற்கான RAW மற்றும் SMACKDOWN ப்ரோமோ இரண்டிலுமே இவரைக் WWE காண்பித்துள்ளது. இதனாலேயே இவர் ப்ரீ ஏஜென்ட்டாக இருப்பார் என்ற தகவல் மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவரைத் தங்கள் பக்கம் கொண்டுவரும் பச்சத்தில் ஒரு திறமையான வீரரை அறிமுகப்படுத்திய பெருமையும், அதேசமயம் முக்கியமான WWE ரசிகர்களிடமும் நற்பெயர் கிடைக்கும் என்றும் இரண்டு மேனேஜர்களும் நம்புகின்றனர். மேலும் ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்வார்கள் என்றும், அவர்களின்பால் இவர் எந்த இடம் செல்ல வேண்டும் என்பதையும் விட்டுவிடலாம் என WWE எதிர்பார்க்கிறது .

அடுத்து நிகழப்போவது:

youtube-cover

6’3” உயர சல்லிவன் , ஜான் ஸீனா வுடன் சேர்த்து WWE ன் இரண்டாவது ப்ரீ ஏஜென்ட்டாக இருப்பார்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now