மணி இன் தி பேங்கில் லேடர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் வெற்றி பெறுபவர் யார் என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டம் - பாகம் 1

Nagaraj
மணி இன் தி பேங்க் லேடர் மேட்ச்
மணி இன் தி பேங்க் லேடர் மேட்ச்

டபுள்யூ டபுள்யூ ஈ நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான போட்டியான மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியானது மே 19 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது. இந்த மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியானது 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற wrestle mania நிகழ்ச்சியில் ஒரு போட்டியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன்பிறகு, மணி இன் தி பேங்க் போட்டியை 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தினர். மே 19-ம் தேதி நடைபெறவிருக்கிற மணி இன் தி பேங்க் லேடர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் 8 ( ரிக்கி செட், பரோன் கார்பின், பிரவுன் ஸ்ட்ரோமன், ட்ரு மெக்கண்டயர், ரேண்டி ஆர்டன், அலி, பின் பெலாரஸ், அண்ட்ரடே ) ஆகிய மல்யுத்த வீரர்கள் லேடர் போட்டியில் மோதவுள்ளனர். இந்த லேடர் போட்டியில் ட்ரூ மெக்கண்டயர் அல்லது அண்ட்ரடே இவர்கள் இருவரில் மணி இன் தி பேங்கில் லேடர் போட்டியில் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவார்கள். டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது எதற்காக இவர்களில் ஒருவரை வெற்றி பெற வைக்க நினைக்கிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.

ட்ரூ மெக்கண்டயர்

ட்ரூ மெக்கண்டயர்
ட்ரூ மெக்கண்டயர்

ட்ரூ மெக்கண்டயர் தற்போது ரா எபிசோடில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டபுள்யூ டபுள்யூ ஈ நிகழ்ச்சியில் நடைபெறும் ரா எபிசோடில் சிவப்பு பிராண்டின் ஒரு பகுதியாக செயல்படுகிறார். ட்ரூ மெக்கண்டயர் இந்த வாரம் நடைபெற்ற ரா எபிசோடில் ரோமன் ரெய்ங்ஸ் எதிராக மோதினார். ஆனால் இந்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஷேன் மெக்கான் மற்றும் எலியாஸ் இவர்கள் இருவரும் ரோமன் ரெய்ங்ஸ்-யை தாக்கினர். ட்ரூ மெக்கண்டயர் மே 19ஆம் தேதி நடைபெறும் மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் லேடர் போட்டியில் வெற்றி பெற வைக்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்த மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியில் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்காக செத் ரோலின்ஸ் மற்றும் ஏ.ஜே. ஸ்டைல் ஆகிய இருவருக்கும் நடைபெறும் போது மணி இன் தி பேங்க்-யை வைத்து ட்ரூ மெக்கண்டயர்-யை வெற்றி பெற வைக்கலாம்.

அண்ட்ரடே

அண்ட்ரடே
அண்ட்ரடே

அண்ட்ரடே தற்போது டபுள்யூ டபுள்யூ ஈ-ல் உள்ள ஸ்மேக் டவுன் எபிசோடில் விளையாடி வருகிறார். டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் லேடர் போட்டியில் அண்ட்ரடே-யை வெற்றி பெற வைத்தால் , அந்த மணி இன் தி பேங்க்-யை வைத்து தற்போது ஸ்மேக் டவுன் எபிசோடில் டபுள்யூ டபுள்யூ ஈ வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியனாக உள்ள கோபி கிங்ஸ்டனுடன் போட்டியிடுவார். இந்த மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பிற்காக கோபி கிங்ஸ்டன் மற்றும் கெவின் ஓவன் ஆகிய இருவருக்கும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அண்ட்ரடே மணி இன் தி பேங்க்-யை வென்றால் அதை வைத்து கோபி கிங்ஸ்டன் மற்றும் கெவின் ஓவன் ஆகிய இருவருக்கும் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பிற்காக நடக்கும்போது இடையில் வந்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.