மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியானது மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது. இந்த மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் பெண்களுக்கான பிரிவில் (நிக்கி கிராஸ், நவோமி, நட்டாலியா, டானா, பேய்லே, மேன்டி ரோஸ், எம்பர், கார்மெல்லா) ஆகியோருக்கு இடையே லேடர் போட்டியானது நடைபெறவிருக்கிறது. இந்த மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் இந்த எட்டு பேரில் நிக்கி கிராஸ் மற்றும் மேன்டி ரோஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது இந்த மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் லேடர் போட்டியில் எதற்காக இவர்கள் இருவரில் ஒருவரை வெற்றி பெற வைக்க நினைக்கிறது என்பதற்கான காரணத்தை பற்றி இங்கு காண்போம்.
நிக்கி கிராஸ்
நிக்கி கிராஸ் இந்த வாரம் நடைபெற்ற ராவ் எபிசோடில் ரீஎன்ட்ரி கொடுத்தார். மே 19 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ள மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் லேடர் போட்டியில் நிக்கி கிராஸ் கலந்து கொள்வதற்கு முன்பாக அலெக்சா பிளீஸ் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்சா பிளீஸ் விளையாடாமல் போனதற்கு காரணம் அவர் மருத்துவ ரீதியாக தயாராகவில்லை என டபுள்யூ டபுள்யூ ஈ-ல் கூறப்படுகிறது. ஆகையால் இவருக்குப் பதிலாக நிக்கி கிராஸ்-யை விளையாட டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது ஒப்பந்தம் செய்தது. இந்த மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் நடைபெற உள்ள லேடர் போட்டியில் டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது நிக்கி கிராஸ்-யை வெற்றி பெற வைத்தால், இந்த மணி இன் தி பேங்க்-யை வைத்து தற்போது பெண்கள் பிரிவில் ராவ் மற்றும் ஸ்மேக் டவுன் சாம்பியனாக உள்ள பெக்கி லின்ச்-க்கு எதிராக நிக்கி கிராஸ்-யை ராவ் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட வைக்கலாம். பெக்கி லின்ச் தற்போது 2 சாம்பியன்ஷிப்பை வைத்துள்ளார். பெக்கி லின்ச் இந்த மணி இன் தி பேங்க் நிகழ்ச்சியில் ஸ்மேக் டவுன் சாம்பியன்ஷிப்பிற்காக சார்லட் ப்ளேயர்-யுடனும் மற்றும் ராவ் சாம்பியன்ஷிப்பிற்காக லேசி ஈவன்ஸ்-யுடனும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேன்டி ரோஸ்
டபுள்யூ டபுள்யூ ஈ நிகழ்ச்சியில் மேன்டி ரோஸ் தற்போது ஸ்மேக் டவுன் எபிசோடில் டேரியா ப்ரினாடோ உடன் இணைந்து விளையாடி வருகிறார். மேன்டி ரோஸ் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மணி இன் தி பேங்க்-ல் லேடர் போட்டியில் விளையாட உள்ளார். டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது ஒருவேளை மணி இன் தி பேங்க் லேடர் போட்டியில் மேன்டி ரோஸ்-யை வெற்றி பெற வைத்தால், இந்த நிகழ்ச்சியில் ஸ்மேக் டவுன் சாம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வைக்கலாம். ஸ்மேக் டவுன் சாம்பியன்ஷிப் போட்டியானது பெக்கி லின்ச் மற்றும் சார்லட் ப்ளேயர் இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெக்கி லின்ச் தற்போது ராவ் மற்றும் ஸ்மேக் டவுன் எபிசோடில் சாம்பியனாக இருக்கிறார்.