WWE மல்யுத்த போட்டியானது பல ஆண்டுகளாக நடந்து வந்தாலும் அவற்றில் ஒரு சில வீரர்கள் மட்டுமே அதிக முறை போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். வாரத்திற்கு இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதில் மிக பிரபலமான வீரர்கள் மட்டுமே பெரும்பாலும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் WWE மல்யுத்த போட்டிகளில் அதிக போட்டிகளில் கலந்துள்ள வீரர்களின் டாப்-10 பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.
#10) ரேன்டி ஆர்டன் -1349
இந்த வரிசையில் பத்தாம் இடம் வகிப்பவர் ரேன்டி ஆர்டன். தற்போதைய தலைமுறையில் சிறந்த வீரர்களுள் ஒருவராக பார்க்கப்படும் இவர் ஜான் சீனா மற்றும் ப்ராக் லெசனர் ஆகியோர் அறிமுகமாகும் காலகட்டங்களிலேயே அறிமுகமானாலும் கடந்த சில ஆண்டுகளாக தான் மிகப்பெரிய வீரராக உருவெடுத்துள்ளார். இவர் பாடிஸ்டா, அண்டர்டேகர், ஜான் சீனா, சேன் மைக்கிள் என பல முன்னணி வீரர்களுடனும் போட்டியிட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலாக மல்யுத்த போட்டிகளில் கலந்து கெள்ளும் இவர் இதுவரை 1300 பேட்டிகளையும் கடந்துள்ளார்.
#9) ஜான் சீனா - 1369
WWE வரலாற்றிலேயே பிரபலமான வீரர்களுள் ஜான் சீனாவுக்கு முக்கிய இடமுண்டு. இவருக்கு ரசிகர்கள் ஆதரவும் மிக அதிகமே. திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இதர விளையாட்டு வீரர்களின் அளவுக்கு இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரும் 1300 போட்டிகளைக் கடந்தும் இன்றளவும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதுவரை இவர் 13 முறை வேர்ல்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். WWF நிகழ்ச்சியானது WWE ஆக மாற்றப்பட்ட பிறகு பெரும்பான்மையான போட்டிகள் கலந்து கொண்டுள்ளார் இவர்.
#8) டால்ப் ஜிக்லர் - 1468
இந்த வரிசையில் இவரது பெயர் இருப்பது பலருக்கு ஆச்சர்யமளிக்கலாம். 2004 ஆம் ஆண்டு முதல் ராவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரும் இவர் வரிசையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதன் மூலம் இந்த பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார். 2010 முதல் இவர் பல பட்டங்களை வென்றுள்ளார். மனி இன் தி பேங்க் போட்டியிலும் ஒரு முறை வென்றுள்ளார் இவர். 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்மேக் டவுன் நிகழ்ச்சிக்காக ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#7) பூபா ரே டுட்லே - 1508
பூபா ரே டுட்லே தனது டேக் டீம் கூட்டாளியான டி-வான் டுட்லே உடன் இணைந்து கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்களை கடந்து மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் தனது மல்யுத்த போட்டிகளில் ECW நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். அதன்பின் WWE போட்டிகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வந்தார். இவர் தனது சகோதரருடன் இணைந்து சிறந்த டாக் டீம் அணியாக பல ஆண்டுகள் விளங்கி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி தனி நபராகவும் இவர் சிறந்த வீரராக விளங்கியுள்ளார்
#6) ஷின்சுகி நாகுமுரா - 1518
மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் பலரை கவர்ந்த வீரர்களுள் இவரும் ஒருவர். ஜப்பான் ப்ரோ ரெஸ்லின் போட்டிகளில் பங்கேற்று வந்த இவர் அதன் பின்னர் 2016-ல் NXT போட்டிகளிலும் அறிமுகமானார்.
தனது கேரியரில் இதுவரை 1500 போட்டிகளையும் தாண்டி பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார் இவர். NXT சாம்பியன்ஸ் பட்டத்தை இரண்டு முறை கைப்பற்றியுள்ளார் நாகுமுரா. 2017-ல் ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் அறிமுகமான இவர் தனது முதல் போட்டியிலேயே டால்ப் ஜிக்லரை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2018-ல் ராயல் ரம்பில் போட்டியில் ஏஜே ஸ்டைல்ஸ்யையும் எதிர்கொண்டுள்ளார் இவர்.
#5) ஹிடியோ ஹிட்டாமி - 1519
நாகுமுராவைப் போன்றே இவரும் ஜப்பான் ப்ரோ ரெஸ்லின் போட்டிகளிலிருந்து பின்னர் WWE நிகழ்ச்சியில் சேர்ந்தார். இந்த பட்டியலில் உள்ள வீரர்களிலேயே இவருக்கு தான் வயது குறைவு. அதுமட்டுமின்றி குறைந்த வயதிலேயே 1500 மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரரும் இவரே. 2000 ஆம் ஆண்டிற்கு பின்னரே இவர் மல்யுத்த போட்டிகளில் அறிமுகமானார். NXT போட்டிகளில் சிறப்பாக சண்டையிட்ட இவரால் WWE போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. 2017 ஆம் ஆண்டு பாபி ராடை வீழ்த்தி இவர் NXT சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இவர் WWE மற்றும் NXT போட்டிகளுக்கு வருவதற்கு முன்னரே அமெரிக்க மல்யுத்த ப்ரோமோஷன் மூலம் "ரிங் ஆப் ஆனர்" என்ற பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.