#6) ஷின்சுகி நாகுமுரா - 1518
மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் பலரை கவர்ந்த வீரர்களுள் இவரும் ஒருவர். ஜப்பான் ப்ரோ ரெஸ்லின் போட்டிகளில் பங்கேற்று வந்த இவர் அதன் பின்னர் 2016-ல் NXT போட்டிகளிலும் அறிமுகமானார்.
தனது கேரியரில் இதுவரை 1500 போட்டிகளையும் தாண்டி பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார் இவர். NXT சாம்பியன்ஸ் பட்டத்தை இரண்டு முறை கைப்பற்றியுள்ளார் நாகுமுரா. 2017-ல் ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் அறிமுகமான இவர் தனது முதல் போட்டியிலேயே டால்ப் ஜிக்லரை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2018-ல் ராயல் ரம்பில் போட்டியில் ஏஜே ஸ்டைல்ஸ்யையும் எதிர்கொண்டுள்ளார் இவர்.
#5) ஹிடியோ ஹிட்டாமி - 1519
நாகுமுராவைப் போன்றே இவரும் ஜப்பான் ப்ரோ ரெஸ்லின் போட்டிகளிலிருந்து பின்னர் WWE நிகழ்ச்சியில் சேர்ந்தார். இந்த பட்டியலில் உள்ள வீரர்களிலேயே இவருக்கு தான் வயது குறைவு. அதுமட்டுமின்றி குறைந்த வயதிலேயே 1500 மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரரும் இவரே. 2000 ஆம் ஆண்டிற்கு பின்னரே இவர் மல்யுத்த போட்டிகளில் அறிமுகமானார். NXT போட்டிகளில் சிறப்பாக சண்டையிட்ட இவரால் WWE போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. 2017 ஆம் ஆண்டு பாபி ராடை வீழ்த்தி இவர் NXT சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இவர் WWE மற்றும் NXT போட்டிகளுக்கு வருவதற்கு முன்னரே அமெரிக்க மல்யுத்த ப்ரோமோஷன் மூலம் "ரிங் ஆப் ஆனர்" என்ற பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.