ரூஸவின் தொடர் வெற்றிகளுக்கு 2015 ஆம் ஆண்டு ஜான் ஸீனா முற்றுப்புள்ளி வைத்தார்.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த ரூஸவ் தன்னுடைய பிறந்தநாளை இந்த வாரம் நடந்து முடிந்த Smackdown ல் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மூன்றாவது முறையாக யுனைடெட் ஸ்டெட் சாம்பியன்ஷிப்பை, முன்னாள் சாம்பியனான ஸின்ஷீகே நாக்கமோரா விடம் இருந்து வென்றார். இதன்மூலம் 2019 ஆம் ஆண்டில் சாம்பியனாக அடியெடுத்து வைக்கும் அறிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார் ரூஸவ். இவர் இந்த சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் பல புதிய வழிகளில் Smackdown செல்ல வாய்ப்புள்ளது. Smackdown-ன் முன்னணி வீரர்களான டேனியல் பிரையன் மற்றும் ஏஜே ஸ்டைல்ஸ் WWE சாம்பியன்ஷிப்க்காக தங்களுக்குள் மோதி வருகின்ற நிலையில் மற்ற இடைநிலை வீரர்களுக்கு ரூஸவின் யூ எஸ் சாம்பியன்ஷிப்பை வெல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்னும் சில நாட்களில் ரூஸவே தனக்கான புது எதிராளியை தேர்ந்தெடுப்பார். இந்த சூழ்நிலையில் இதற்காக தற்போது முன்னணியில் உள்ள ஐந்து வீரர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
#5. ஷெல்டன் பென்ஜமின்:
தி கோல்ட் ஸ்டான்டர்ட் என்ற புனை பெயரில் அழைக்கப்படும் ஷெல்டன் பென்ஜமின் முன்னாள் யூஎஸ் சாம்பியன் ஆவார். துரதிர்ஷ்டவசமாக பென்ஜமின் சில வருடங்களாக Smackdown – ல் பங்குகொள்ள முடியாத நிலையில் இருந்தார். இப்போது மீண்டும் WWE க்கு திரும்பினாலும் அவர் பழையபடி வெற்றிகளை ருசிக்க முடியவில்லை. 2000 ஆம் ஆண்டு வரையில் பென்ஜமின் மிகவும் திறமையான வீரராக திகழ்ந்தார். WWE வரலாற்றில் மறக்க முடியாத பல சிறந்த மேட்ச்களை தந்துள்ளார். ஆனால் இந்த இடைவெளியின் மூலம் இவருக்கு வயது ஆகிவிட்டது என்பதை மறந்து விடக்கூடாது. இருப்பினும் இவரால் இன்றும் சிறந்த மேட்ச்களை தர முடியும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மக்மஹோன் குடும்பம் ஒருவேளை பென்ஜமினை ரூஸவிற்கு எதிராக களம் இறக்கினால் அது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதேசமயம் சண்டை ரீதியாகவும் நிச்சயம் புதுமையாக இருக்கும்.
#4. தி மிஸ்:
WWE-ல் இரண்டாம் நிலை வீரர்களில் முன்னணி வீரராக வலம் வரும்பவர் தி மிஸ். இந்த வருடம் முழுவதும் மிஸ் இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப்க்காக மட்டுமே சண்டையிட்டு வந்தார். ஆனால் இது தற்போது RAW வின் வசம் உள்ள காரணத்தினால் Wrestlemania வரை மிஸ்-ஆல் அதற்கு போட்டியிட முடியாது. WWE தலைமை அடுத்தடுத்து சிறந்த மேட்ச்களை தருவதாக கூறியுள்ள நிலையில் ரூஸைவிற்கு எதிராக மிஸ்ஸை சண்டையிட வைக்கும் பட்சத்தில் அது Smackdown ல் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
#3. சமோயா ஜோ:
Smackdown – ன் வில்லன்களில் சிறந்த ஒருவரான சமோயா ஜோ கடந்த இரண்டு வருடங்களாக மெயின் ஈவன்ட்களில் எந்த ஒரு சாம்பியன்ஷிப்பையும் வெல்லவில்லை. ஆனால் இவர் ஜெஃப் ஹார்டியுடன் மோதிய அனைத்து மேட்ச்களும் சிறப்பானவை. தனது இரண்டு வருட சாம்பியன்ஷிப்க்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜோ காத்துக் கொண்டிருக்கிறார். இவர் WWE ல் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் நிச்சயமாக ரூஸைவுடன் மோதி, அதில் சிறப்பாக சண்டையிட்டு தனது முதல் சாம்பியன்ஷிப் பெல்ட்டை பெற வேண்டும் என்பதை மறுக்க முடியாது.
#2. ஆன்ட்ராடே சியன் ஆல்மாஸ்:
ஆன்ட்ரேடு ஆல்மாஸ் NXT சூப்பர் ஸ்டார் ஆவார். இவர் Smackdown – ற்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இவர் NXT இருந்த உச்சத்தின் அளவிற்கு இன்றுவரை Smackdown – ல் ஜொலிக்க முடியவில்லை. பல மேட்ச்களில் பங்கு பெற்றாலும் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. ஆம் இவர் ஆரம்பத்திலேயே ஏஜே ஸ்டைல்ஸ், ரெய் மஸ்டீரியோ உச்ச நட்சத்திரங்களோடு மோதினார். இதனால் ஒரு சிறந்த வீரராக இருந்தும் வெற்றி பெறமுடியவில்லை. இவர் ஒரு ஆகச்சிறந்த wwe வீரர் ஆவார். எனவே இவருக்கு ரூஸைவுடன் சண்டையிட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்வார்.
#1. ஈத்தன் கார்டர் III:
EC3 is the top one percent
ஈத்தன் கார்டர் NXT ல் முக்கியமான வீரர்களில் ஒருவர். இவர் தற்போதுதான் Smackdown ற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரசிகர்கள், இவர் எந்த வகையில் செயல்படுவார் என்று இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை ரூஸவ் தனது சாம்பியன்ஷிப்புக்கு ஓபன் சாலஞ்சர் வைக்கும் பட்சத்தில் அதில் ஈத்தன் கார்டர் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு தனது திறமையை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப்பை வெல்வார். ஈத்தன் கார்டர் TNA வில் சிறந்த வீரராக விளங்கியதன் மூலம் அவர் மீது நம்பிக்கை வைத்து WWE தனது நிறுவனத்திற்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
எழுத்து : மோஹித் குஷ்வாஹா
மொழியாக்கம்: அகன் பாலா