கெயின் ( க்ளென் ஜாக்கோப்ஸ் ) மற்றும் அண்டர்டேகர் ( மார்க் களாவே ) இருவரும் சகோதரர் என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொணடிருக்கிறோம். மல்யுத்த போட்டிகளில் இருவரும் அண்ணன் தம்பி போல் பாவிக்கப்பட்டாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான். WWE போட்டிகளில் இவர்கள் இருவரைப் பற்றி நமக்கு தெரியும் ஆனால் இவர்களுடன் நிஜ வாழ்க்கையில் மிக நெருக்கமாக உள்ள மல்யுத்த வீரர்களைப் பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை இந்த தொகுப்பில் காணலாம்.
#1) டேனியல் ப்ரேயன்
2012 ஆம் ஆண்டு முதல் டேனியல் ப்ரேயன் மற்றும் கெயின் இருவரும் சிறந்த டேக் டீம் வீரர்களாக விளங்கினர். இப்படி ஒன்றாக இருந்த இருவரும் ஏஜே லீ-யால் ஹக் இட் அவுட் போட்டியின் மூலம் பிரிந்தனர். இருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து டேக் டீம் சாம்பியன்ஸ் பட்டத்தை கிட்டத்தட்ட 245 நாட்கள் வைத்திருந்தனர். இது WWE நிகழ்ச்சியில் நாம் கண்டது. ஆனால் இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் மிக நெருக்கமான நண்பர்கள் தானாம். இதனை டேனியல் ப்ரேயன் தான் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேனியல் ப்ரேயன் பேட்டி ஒன்றினை அளித்தார் அதில் "கெயினை பார்ப்பதற்கு பலருக்கும் ஆக்ரோஷமான நபராக தெரியும். ஆனால் உண்மையிலேயே அவர் சிறந்த மனிதர்" எனக் கூறினார். இதிலிருந்தே இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என நமக்கு தெரியவருகிறது.
#2) எட்ஜ்
எட்ஜ் தனது கடைசி மல்யுத்த போட்டியை வெரஸல் மேனியா 27-ல் ஆல்பட் ரெல் ரியோ-வை வீழ்த்தி தனது வேர்ல்டு ஹெவிவெய்ட் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார். அதன் பின்னர் 2011 ஏப்ரல் மாதத்திலே கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வினை அறிவித்தார். கடைசியாக இவர் WWE நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது கெயினை கட்டித்தழுவி விட்டு சென்றார். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பர்கள் தான். இதனை எட்ஜ் ஒரு முறை நிகழ்ச்சியில், "எனது அறைக்குள் கெயின் தான் எனது மிக நெருங்கிய நண்பன்' என கூறியுள்ளார்.
#3) க்ரிஹோரி ஷேன் ஹெல்ம்ஸ் ( ஹுரிகேன் )
அண்டர்டேகர் தான் ஹுரிகேனை WWE சூப்பர் ஸ்டாராக வளர்த்து விட்டார் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து பழைய பேட்டிகளில் அவர் "அண்டர்டேகர் தான் எனக்கு அறையில் நெருக்கமான நண்பர். அதுமட்டுமின்றி ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு அடிப்படை விஷயங்களை கற்று கொடுத்ததே அவர் தான்" எனவும் கூறியுள்ளார். ஹெல்ம்ஸ் WWE பேட்டிகளில் நீண்ட நாள் WWE குரூசியர் வெயிட் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்திருந்தார். அதற்கு காரணமே அண்டர்டேகர் கற்று கொடுத்த பயிற்சி தான் எனவும் அவர் கூறியுள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு WWE நிகழ்ச்சிகளிலிருந்து ஓய்வினை அறிவித்து இம்பேக்ட் நிகழ்ச்சியில் சேர்ந்தார். ஆனால் அங்கிருந்தும் விரைவில் விலகி விட்டார்.