2019ல் WWE-லிருந்து ரிடையர் ஆக வாய்ப்புடைய ஐந்து வீரர்கள்

WWE Superstars who could retire in 2019
WWE Superstars who could retire in 2019

‘அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு’ என்று ஒரு பழமொழி உண்டு. இது WWE க்கும் பொருந்தும். ஆம் வரும் ஆண்டில் WWE ரசிகர்கள், தாங்கள் இவ்வளவு காலமாக பார்த்து ரசித்து வந்த பல WWE வீரர்களுக்கு விடை கொடுக்கப்போகின்றனர். உதரணமாக 2011 ல் எட்ஜ்-ம், 2016 ஆம் ஆண்டு ஸ்டிங்-ம், ஏன்? கடந்த வருடம் பேஜ் – ம் WWE விலிருந்து ஓய்வு பெற்றதைக் கூறலாம். WWE வீரர்கள் இரண்டு காரணங்களுக்காக ரிடையர் ஆகலாம். ஒன்று அவர்களுக்கு ஏற்ப்பட்ட காயம் அல்லது நோயின் தன்மை அதிகரிப்பது, மற்றொன்று அவர்களே தங்களுக்குள் இது போதும் என்று தோன்றுவது. இந்தக் கட்டுரையில் அவ்வாறு ரிடையர் ஆக வாய்ப்பிருக்கக் கூடிய ஐந்து வீரர்களைப் பற்றிக் காண்போம்.

#5. ஜேசன் ஜார்டன்:

Jasoon Jordan
Jasoon Jordan

துரதிர்ஷ்டவசமாக இந்த லிஸ்டில் ஜேசன் ஜார்டனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவரின் WWE கேரியர் தற்போதே முடிவுக்கு வந்து விட்டது என்று கூறலாம். இவர் ஆரம்பத்தில் NXT ல் சேட் கேபில் உடன் இணைந்து ஒரு சிறந்த Tag team ஆக வலம் வந்தார். அதன் பிறகு RAW விற்கு செல்லும் முன்புவரை Smackdown ல் tag team சாம்பியன்ஷிப்க்காக போட்டியிட்டு வந்தார்.

ஜார்டன் குர்ட் ஆங்கிளின் மகன் என்று தெரியும் வரை அவர் பிரபலமாகாமல் இருந்தார். அதன்பிறகு இவருக்கு காயம் ஏற்பட்டது. இன்றுவரை அவர் அதிலிருந்து முழுவதும் வெளிவரவில்லை. வரும் செப்டம்பரில் தான் இவர் WWE-க்கு திரும்புவார் என்று தெரிகிறது. அப்படியெனில் மீண்டும் சண்டைகளில் பங்கேற்காமல், அவருக்கு WWE-ல் Backstage Producer என்ற பதவி வழங்கப்படலாம். இருப்பினும் WWE ஒரு சிறந்த அட்தலடிக் வீரரை இழக்கப்போகிறது என்பதே நிதர்சனம்.

#4. கோல்டஸ்ட்:

Goldust
Goldust

கோல்டஸ்ட் தனது WWE வாழ்க்கையை 1995 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் சிலர் இவர் எவ்வாறு WWE நிலைக்கப்போகிறார் என்று எண்ணினர். ஆனால் தன்மீதான அனைத்து கேள்விகளுக்கும் பதில், 23 ஆண்டுகளாகியும் இன்றுவரை WWE-இன் ஒரு போட்டியாளராக இருப்பது தான். இதற்கு காரணம் இவருடைய நேர்மையாக சண்டையிட்டு வெற்றி பெறுவது, மாறாத கேரக்டர் ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் 2018 ல் இவருடைய ரிங் பிரசன்ஸ் குறைவாகவே இருந்தது. இதன்மூலமே இவர் WWE வாழ்க்கையிலிருந்து அனேகமாக 2019-ல் ரிடையர் ஆவார் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் இவருக்கும் WWE Backstage ல் ஒரு பதவி வழங்கப்படலாம். இவர் தனது ஓய்வுக்குப் பின் தன் தந்தை டஸ்டி ரோட்ஸைப் போலவே ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இடம்பெறுவார்.

#3. பிக் ஷோ:

Big Show
Big Show

பிக் ஷோ தனது ரெஸ்ட்லிங் வாழ்க்கையை WCW வில் தான் துவங்கினார். இவர் ஒரே ஒரு வீரர் மட்டும்தான் WCW, WWE, ECW ஆகிய அனைத்து ரெஸ்ட்லிங் நிகழ்ச்சிகளிலும் World Heavyweight சாம்பியன்ஷிப்களையும் வென்றவராவார். இது மட்டுமல்லாமல் யுனைடெட் ஸ்டெட், இன்டர்கான்டினென்டல், ஹார்ட்கோர் மற்றும் tag team சாம்பியன்ஷிப்களையும் வென்றுள்ளார்.

இவர் மீண்டும் Smackdown 1000 வது எபிசோடில் திரும்பினார். ஆனால் இதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்னவென்றால் அவர் பழையபடியே ரசிகர்களுக்காக இல்லாமல் கம்பெனிக்காக மட்டுமே சண்டையிடும் வீரராக இருந்தார். அதன்பிறகு பிக் ஷோ தான் 2019 ல் ரிடையர் ஆவதாக அறிவித்தார். அவருக்கும் ரிடையர்மென்டுக்குப்பிறகு நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது. இவ்வளவு காலம் பல்வேறு வகைகளில் தனது 7 அடி அசுர உடலை வருத்தி இருக்கிறார். இவர் ரிடையர் மென்ட் பேச்சிலாவது ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் நடந்துகொண்டால் நன்றாகயிருக்கும்.

#2. தி அன்டர்டேக்கர்:

Undertaker
Undertaker

WWE ன் ஆகச்சிறந்த வீரர்களில் ஒருவர்தான் இந்த அன்டர்டேக்கர். இவர் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வைவர் சீரியஸில் WWE க்கு அறிமுகமானார். ஏழு முறை வேர்ல்ட் சாம்பியன், WWE-ன் Pay per view வில் அதிக வெற்றிகளைக் குவித்தவர் என்பன உள்ளிட்ட wwe ன் அனைத்து உச்சங்களையும் தொட்டவர் அன்டர்டேக்கர்.

கடந்த சில காலமாகவே இவரின் சுறுசுறுப்பும், சண்டையிடும் திறனும் வெகுவாக குறைந்துவிட்டது. ரசிகர்கள் பலருக்கும் இவர் ரிடையர் ஆவதே சிறந்தது என்று எண்ணுகின்றனர். அப்படி அன்டர்டேக்கர் 2019-ல் ரிடையர் ஆகக்கூடிய பட்சத்தில் பத்திரிக்கைகளில் அது தலைப்பு செய்தியாக வரும். அதுமட்டுமல்லாமல் WWE தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஒரு வரலாற்று நாயகனை இழந்திருக்கும்.

#1. ரவுடி ரோன்டா ரூஸி:

Ronda Rousey
Ronda Rousey

ரோன்டா ரூஸி ஒரு வருடம் மட்டுமே WWE-க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏனெனில் இவர் ஒரு UFC வீரர். இவர்தான் தற்போதைய WWE WOMEN’S சாம்பியன். இவர் ஒரு சிறந்த பெண் வீரராக வலம் வருகிறார். WWE வரலாற்றிலேயே இவர் ஒரு சிறந்த போட்டியாளர் ஆவார். இவர் ஒரு வருட ஒப்பந்தத்தில் வர காரணம், தான் ஒரு நிஜ ரெஸ்ட்லராக மட்டுமே எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகவே. WWE-ஐ பயன்படுத்தி தன்னை உலகறியப்பட்டவராக நிலைநிறுத்திக் கொண்டார் என்பதையும் மறுக்க முடியாது. இவர் WWE க்காக ஒப்பந்தம் செய்யப்படும் முன்பே 2018-ல் நடந்த ராயல் ரம்பளில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

எழுத்து : தாமஸ் லோவ்சன்

மொழியாக்கம்: அகன் பாலா

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications