#2. தி அன்டர்டேக்கர்:
WWE ன் ஆகச்சிறந்த வீரர்களில் ஒருவர்தான் இந்த அன்டர்டேக்கர். இவர் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வைவர் சீரியஸில் WWE க்கு அறிமுகமானார். ஏழு முறை வேர்ல்ட் சாம்பியன், WWE-ன் Pay per view வில் அதிக வெற்றிகளைக் குவித்தவர் என்பன உள்ளிட்ட wwe ன் அனைத்து உச்சங்களையும் தொட்டவர் அன்டர்டேக்கர்.
கடந்த சில காலமாகவே இவரின் சுறுசுறுப்பும், சண்டையிடும் திறனும் வெகுவாக குறைந்துவிட்டது. ரசிகர்கள் பலருக்கும் இவர் ரிடையர் ஆவதே சிறந்தது என்று எண்ணுகின்றனர். அப்படி அன்டர்டேக்கர் 2019-ல் ரிடையர் ஆகக்கூடிய பட்சத்தில் பத்திரிக்கைகளில் அது தலைப்பு செய்தியாக வரும். அதுமட்டுமல்லாமல் WWE தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஒரு வரலாற்று நாயகனை இழந்திருக்கும்.
#1. ரவுடி ரோன்டா ரூஸி:
ரோன்டா ரூஸி ஒரு வருடம் மட்டுமே WWE-க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏனெனில் இவர் ஒரு UFC வீரர். இவர்தான் தற்போதைய WWE WOMEN’S சாம்பியன். இவர் ஒரு சிறந்த பெண் வீரராக வலம் வருகிறார். WWE வரலாற்றிலேயே இவர் ஒரு சிறந்த போட்டியாளர் ஆவார். இவர் ஒரு வருட ஒப்பந்தத்தில் வர காரணம், தான் ஒரு நிஜ ரெஸ்ட்லராக மட்டுமே எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகவே. WWE-ஐ பயன்படுத்தி தன்னை உலகறியப்பட்டவராக நிலைநிறுத்திக் கொண்டார் என்பதையும் மறுக்க முடியாது. இவர் WWE க்காக ஒப்பந்தம் செய்யப்படும் முன்பே 2018-ல் நடந்த ராயல் ரம்பளில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
எழுத்து : தாமஸ் லோவ்சன்
மொழியாக்கம்: அகன் பாலா