கடந்த மாதம் ஸ்மாக்டௌன் லைவ் நிகழ்ச்சியில் காயத்தால் அவதிப்பட்டு சிறிது காலம் ஓய்வில் இருந்த கெவின் ஓவன்ஸ் WWE அரங்கத்திற்கு திரும்பியிருந்தார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோஃபி கிங்ஸ்டனுக்கு பதிலாக நடந்து முடிந்த பாஸ்ட்லென் நிகழ்ச்சியில் WWE சாம்பியன்ஷிப் டைட்டிலுக்கான போட்டியில் திடீரென்று கெவின் ஓவன்ஸ் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளிவந்தது.
ஆனால் நிகழ்ச்சியில் நடந்ததோ ட்ரிபிள் திரேட் எனப்படும் மும்முனை போட்டி. ஆம் முஸ்தபா அலியும் இப்போட்டியில் இடம் பெற்றார். WWE-வில் முதன்முறையாக “ பெஸ்” எனப்படும் நல்லவர் கதாபாத்திரத்தில் தற்போது தோன்றி வருகிறார் கெவின் ஓவன்ஸ். நல்ல கதாபாத்திரத்தில் உள்ளதால் ரசிகர்களின் ஆதரவை ஓவென்ஸ் நல்கவே WWE விரும்புகிறது.
WWE-வில் ஆக்கப்பூர்வமான வீரர்களில் ஓவென்ஸும் ஒருவர். எனவே அப்படிப்பட்ட வீரரை ஒதுக்காமல் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் அவருக்கான ஏற்ற போட்டியை WWE அமைத்திட வேண்டும்.
அவ்வாறு கெவின் ஓவன்ஸுக்கு எதிராக களம் காண வாய்ப்புள்ள 3 வீரர்களைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
#3. முஸ்தபா அலி
முஸ்தபா அலி எதிர்பாராதவிதமாக காயத்தால் தற்போது அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஸ்மாக்டௌன் லைவ் நிகழ்ச்சியில், டேனியல் பிரையன் மற்றும் ரோவனால் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருந்த ஓவென்ஸை காப்பாற்ற அரங்கத்திற்குள் நுழைந்தார் முஸ்தபா.
சில மாதங்களுக்கு முன்பாக நடந்த WWE எலிமினேஷன் சேம்பர் போட்டியில் இவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் காயம் காரணமாக இப்போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. எனவே இறுதியாக நடந்து முடிந்த பாஸ்ட்லெனில் WWE சேம்பியன்ஷிப் டைட்டிலுக்கான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பாஸ்ட்லென் போட்டிக்கு பிறகு நடந்த ஸ்மாக்டௌன் போட்டியில் ஓவென்ஸுடன் ஜோடி சேர்ந்த முஸ்தபா, ரோவன் மற்றும் பிரயனை எதிர்கொண்டனர். அப்போட்டியில் முஸ்தபா அலியை பின் செய்தார் ரோவன். அலியின் பலவீனத்தால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று நன்கு உணர்ந்துள்ளார் கெவின் ஓவன்ஸ்.
எனவே இந்த சிறிய பகை எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் இவ்விருவருக்கிடையே பெரிய போட்டி இடம்பெற காரணமாக அமையலாம்.
#2. சமோ-ஆ ஜோ
சமோ-ஆ ஜோ தற்போதைய நிலவரத்தின்படி அமெரிக்கா சாம்பியன் டைட்டிலுக்கு சொந்தக்காரர். இந்த சாம்பியன்ஷிப் டைட்டிலை நான்கு முனை போட்டியில் (ரெய் மிஸ்டிரியோ, அண்டராடே, ஆர்-ட்ருத்) ஆகியோரிடம் சண்டையிட்டு வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பாக சமோ-ஆ ஜோ, ஜான் ஸினாவை எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் எதிர் கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த நிலைப்பாட்டை மாற்றியுள்ளது WWE.
சமோ-ஆ ஜோ மற்றும் கெவின் ஓவன்ஸ் NXT காலத்திலிருந்தே ஒருவருக்கொருவர் எதிராக சண்டையிட்டு வந்துள்ளனர். எனவே எதிராளி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் சமோ-ஆ ஜோவுக்கு , பழைய எதிரியான கெவின் ஓவன்ஸுக்கு எதிராக போட்டி அமையப் பெற்றால் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
#1. சமி ஜெய்ன்
நீண்ட நாட்களாகவே தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக WWE-விலிருந்து விலகியிருக்கிறார் சமி. கடந்த ஜனவரி மாதம் சமி ஜெய்னுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப் பட்டதாகவும் விரைவில் போட்டிகளுக்கும் திரும்புவார் என்று பல செய்தி நிறுவனங்கள் கூறி வந்தனர். ஆனால் இதுவரை அவரைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ரஸ்ஸில்மேனியா மோகம் சூடுபிடித்துள்ளதால் சமி ஜெய்னை திரும்பி கொண்டுவர WWE-க்கு இதுவே சரியான தருணம்.
ஓவென்ஸ் மற்றும் சமி ஜெய்னை பொறுத்தவரை ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக இருந்து வந்துள்ளனர். NXT-யிலும் சரி, மெயின் ரோஸ்டரிலும் சரி, பலதரப்பட்ட எதிரிகளை சந்தித்து வந்துள்ளனர் இந்த இரு பலமிக்க சூப்பர் ஸ்டார்கள்.
ஏற்கனவே கூறியதைப் போல தற்போது நல்லவன்(FACE) கதாபாத்திரத்தில் இருக்கும் கெவின் ஓவன்ஸ், தீயவர்(HEEL) கதாபாத்திரத்தில் இருக்கும் சமி ஜெய்னை எதிர்கொண்டால் ரஸ்ஸில்மேனியாவில் மறக்கமுடியாத போட்டி அமைவது நிச்சயம்.