PWI என்பது Pro Wrestling Illustrated என்பதன் சுருக்கமாகும். இந்த அமைப்பு இந்த வருடத்திற்கான சிறந்த 500 ரெஸ்ட்லிங் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வரும் வீரர்களின் இடமானது அவர்களின் வெற்றி, தோல்வி, சண்டையிடும் தரம், எத்தனை சாம்பியன்ஷிப்களை இந்த ஆண்டு வென்றனர் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டு முதல் பத்து இடங்களைப் பிடித்த ரெஸ்ட்லிங் வீரர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
#10. தி மிஸ்.
தி மிஸ் சமீபகாலமாக சிறப்பாக தனது பங்கை செலுத்தி வருகிறார். அது சண்டையாக இருந்தாலும் சரி, மிஸ் ஷோவில் பேசுவதாக இருந்தாலும் சரி, அவர் ஒரு நல்ல எண்டர்டெயினராக வலம்வருகிறார். இதன் மூலம் மிட்கார்ட் ரெஸ்ட்லர்களில் முன்னேற்றம் அடைந்து இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பெல்ட்டையும் வென்றார். இந்த சாம்பியன்ஷிப்பை எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். இந்த வருடத்தை சிறப்பாக ஆரம்பித்த மிஸ், ரோமன் ரெயின்ஸை வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வென்றார். பின் சில மாதங்களுக்குப் பிறகு Wrestlemania34-ல் ஷெத் ராலின்ஸிடம் தனது பெல்ட்டை பறிகொடுத்தார். பின் மீண்டும் டேனியல் பிரையனிடமிருந்து இந்த பெல்ட்டை வென்றது ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதன்பிறகு WWE world cup tournament-க்கு தகுதிபெற்று காயம் காரணமாக வெளியேறினார். இந்த சிறப்பான செயல்பாடுகள் மூலம் இந்தப்பட்டியலில் பத்தாவது இடம்பிடித்துள்ளார் மிஸ். வரும் காலங்களில் ரோமன் ரெயின்ஸ் இல்லாததால் இவர் கடுமையாக உழைக்கும் பட்சத்தில் இன்னும் சிறப்பான நிலைக்கு செல்வது நிச்சயம்.
#9. டெட்சுயா நய்டோ.
டெட்சுயா நய்டோ 2018-ஆம் ஆண்டு Wrestle kingdom 12–ல் கஷுசிகா ஒக்காடா-வை சாம்பியன்ஷிப் மேட்ச்சுகாக அழைத்து பிரபலமானார். துரதிர்ஷ்டவசமாக அந்த மேட்ச்சில் அவரால் வெல்ல முடியவில்லை. ஆனால் இந்த மேட்ச்சிற்கு ரேட்டிங்கில் ஐந்துக்கு 4.5 கிடைத்தது. பிறகு சில மாதங்கள் கழித்து IWGP இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்தை மைனர் சிஷூகியை இரண்டாவது முறையாக வீழ்த்தி பெற்றார். 41 நாட்கள் இந்த பெல்ட்டை வைத்திருந்த இவர், க்ரிஸ் ஜெரிக்கோவிடம் இழந்தார். இருப்பினும் அவர் சண்டையிட்ட விதம் பலரால் பாராட்டப்பட்டது. இது மட்டுமின்றி நய்டோ, G1 climax-லும் பங்குபெற்றார். மேலும் கோட்டாஐ புஷி, ஜூயிஸ் ராபின்சன், ஜாக்சாப்ரி.Jr மற்றும் சேனாடா ஆகிய வீரர்களுடன் அற்புதமான மேட்ச்களில் ஈடுபட்டார். இதன் மூலம் இவர் இந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடம்பிடித்துள்ளார்.
#8. கோடீ.
கோடீ WWE-ஐ விட்டு விலகி மீண்டும் தன்னுடைய சொந்த முயற்சியினால் திரும்பியுள்ளார். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இவரின் ரெஸ்ட்லிங் சம்பந்தப்பட்ட அனைத்து திறமைகளும் வளர்ந்த வண்ணம் உள்ளதை மறுக்க முடியாது. கோடீ இந்த ஆண்டு பல சிறந்த மேட்ச்களில் ஈடுபட்டுள்ளார். அதிலும் குறிப்பாக, கென்னி ஒமாகாவோடு போட்டியிட்ட IWGP ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப் மேட்ச், நிக் ஆல்டிஸ் உடனான NWA World ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப் மேட்ச் ஆகியவை ரசிகர்களால் பாராட்டப்பட்டவையாகும். மேலும், இவர் தான் இருந்த புல்லட் கிளப்-ல் இருந்தும் அக்டோபர் மாதம் விலகினார். இவர் தனியாக இருப்பதால் வரும் வருடம் இவரின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
#7. ரோமன் ரெயின்ஸ்.
ஓர் உதாரணத்திற்கு உலகின் சிறந்த பத்து ரெஸ்ட்லிங் வீரர்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் ரோமன் ரெயின்ஸின் பெயர் இருக்கும். ரோமன் ரெயின்ஸ் 2018-ஆம் ஆண்டை யூனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்காக அர்ப்பணித்தார் என்பதே உண்மை. இந்த வருடத்தை திமிஸ்ஸிடம் தோல்வியுடன் தொடங்கினார் ரெயின்ஸ். அதன் பிறகு ராயல் ரம்பள் மேட்ச்சின் இறுதியில் வெளியேற்றப்பட்டார். பிறகு ப்ராக் லெஸ்னருடன் Wrestlemania 34-ல் யூனிவர்சல் சாம்பியன்ஷிப் மேட்ச்சுகான வாய்ப்பு அமைந்தது. அதில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ரோமன் ரெயின்ஸை வென்றார் லெஸ்னர். பின் அவர்களுக்கிடையே ரீமேட்ச் ராயல் ரம்பல்ஸ் ஸ்டீல் கேஜ் மேட்ச்சாக நடைபெற்றது. இதிலும் போராடிய ரெயின்ஸ் தோல்வியடைந்தார். பிறகு இவர்களுக்கிடையே இறுதியுத்தம் சம்மர்ஸ்லாமில் நடைபெற்றது இம்முறை லெஸ்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ரெயின்ஸ். பிறகு பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய ஓய்வு வரை பெல்ட்டை தன் வசமே வைத்திருந்தார்.
#6. ப்ரௌன் ஸ்ட்ரோமன்.
ப்ரௌன்ஸ்ட்ரோமன் மிகவும் வேகமாக WWE-ல் வளர்ந்து விட்டார் என்பது நிதர்சனம். ஆம், அவர்தான் தற்போது RAW-வின் பலம். அவர் பேசுவது குறைவாகவும் சண்டையிடுவது அதிகமாகவும் இருப்பதால் ரசிகர்களுக்கும் இவரைப் பிடித்திருக்கிறது. இவர் ட்ரக்கை சாய்த்ததன் மூலமும், பல எடை அதிகமான பொருட்களை தூக்கி துவம்சம் செய்ததும் ரசிகர்களை இவரின் பால் ஈர்த்தது. மேலும், இவர் ராயல் ரம்பளில் 13 பேரை எலிமினேட் செய்து ரோமன் ரெயின்ஸின் சாதனையை முறியடித்தார். அதுமட்டுமல்லாமல் Money in the bank-யையும் வென்றார். அதனை இவர், ‘ஹெல் இன் த ஷெல்லில்’ ரெயின்ஸ்க்கு எதிராக காஷ் செய்து லெஸ்னரின் இடையூறால் தோல்வியடைந்தார். பிறகு லெஸ்னருடன், க்ரவுன் ஜூவலில் யூனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட்டு தோற்றார்.
#5. ஷெத்ராலின்ஸ்.
கடந்த சில வருடங்களாகவே ஷெத்ராலின்ஸ் WWE-ல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2018-ம் இதற்கு விதி விலக்கல்ல. இதில் சிறப்பு என்னவென்றால் RAW-வில் நடைபெற்ற Gauntlet மேட்ச்சில் போட்டியிட்ட ராலின்ஸ், அந்த மேட்ச்சில் ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் சண்டையிட்டார். இதன்மூலம் RAW-வில் அதிக நேரம் சண்டையிட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் எலியஸால் எலிமினேட் செய்யப்படும் முன் ஜான்ஸீனா மற்றும் ரோமன் ரெயின்ஸை எலிமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wrestlemania34-ல் இன்டர் கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதன் மூலம், WWE – ன், 29 வதுTriple crown champion மற்றும் 18-வது Grandslam champion ஆனார்.
#4. ப்ராக்லெஸ்னர்.
இந்தப் பட்டியலில் லெஸ்னர் இடம்பெற்றது பலருக்கு சற்று வியப்பாக இருக்கலாம். ஏனென்றால், இவர் வருடத்திற்கு குறிப்பிட்ட ஒருசில முறை மட்டுமே WWE-க்குள் பிரவேசிப்பார். மேலும் ஏ.ஜே. ஸ்டைல்ஸ்-உடன் ஒப்பிடுகையில் இவருக்கெதிரான போட்டியாளர்களும் குறைவாகும். ஆனால், இவர் தன்னுடைய WWE யூனிவர்சல் சாம்பியன்ஷிப் பெல்ட்டை 505 நாட்கள் வைத்திருந்து வெற்றிகரமாக வலம் வந்ததன் காரணமாக இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
#3. காஷூசிகா ஒக்காடா.
Wrestle kingdom 12-ன் மூலம் இந்த வருடத்தை சிறப்பாக ஆரம்பித்தார் ஒக்காடா. இதில், இவர் டெட்சுயா நய்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் இவர் ஹிரோஷிடனா ஹாஷியின் அதிக நாட்கள் சாம்பியன் என்ற சாதனையை முறியடித்தார். பிறகு, இவர் ஹிரோஷிடனா ஹாஷியையும் வீழ்த்தினார். இதன்மூலம் தொடர்ந்து பன்னிரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். இந்த மேட்ச் Wrestling Observer Newsletter-ல் 5.5 ரேட்டிங் பெற்றது. அதன் பிறகு இவருக்கெதிரான போட்டியாளராக கென்னி ஒமாகா தேர்வானார். இவர்களுக்கிடையேயான போட்டி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று நீண்டு கொண்டே சென்றது. பிறகு இறுதியில் ஒமாகா வெற்றி பெற்றார். இந்தப் போட்டியானது WWE-ன் வரலாற்றில் முக்கியமான போட்டியாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இந்தப்போட்டிக்கு 7 ஸ்டார் ரேட்டிங்கும் தரப்பட்டது.
#2. ஏ.ஜே.ஸ்டைல்ஸ்.
லெஸ்னரைப் போன்றே ஏ.ஜே.ஸ்டைல்ஸூம் இந்த வருடத்தை சாம்பியன்ஷிப் பெல்ட்டோடு ஆரம்பித்தார். ஆனால் RAW-வைப் போன்று அல்லாமல் இவர் பலமுறை தன்னுடைய சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்து சண்டையிட்டு அதில் வெற்றியும் கண்டார். வருடா வருடம் இவரின் சண்டையிடும் திறனும், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் திறனும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், இவர் WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை கிட்டத்தட்ட 371 நாட்கள் வைத்திருந்தார். அதன் பிறகுதான் டேனியல் பிரையனிடம் அதை இழந்தார். இதன்மூலம், இவர் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
#1. கென்னி ஒமாகா.
கென்னி ஒமாகா கடந்த சில காலமாகவே Professional ரெஸ்ட்லிங்-கில் தன்னை ஒரு சிறந்த வீரராக நிலைநிறுத்தி வருகிறார்.
ஒமாகா இந்த தலைசிறந்த மேட்ச்களில் மூன்றில் பங்குபெற்றுள்ளார். அதிலும், ஒருபோட்டி ரேட்டிங்கில் 7 ஸ்டார்களைப் பெற்றது. இந்த மேட்ச்சில் இவர் வென்றதன் மூலமாக 720 நாட்கள் சாம்பியனாக வலம் வந்த ஒக்காடாவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன்மூலம் வென்ற சாம்பியன்ஷிப்பை பல்வேறு பெரிய வீரர்களோடு சண்டையிட்டு தக்கவைத்துக் கொண்டார்.