#7. ரோமன் ரெயின்ஸ்.
ஓர் உதாரணத்திற்கு உலகின் சிறந்த பத்து ரெஸ்ட்லிங் வீரர்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் ரோமன் ரெயின்ஸின் பெயர் இருக்கும். ரோமன் ரெயின்ஸ் 2018-ஆம் ஆண்டை யூனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்காக அர்ப்பணித்தார் என்பதே உண்மை. இந்த வருடத்தை திமிஸ்ஸிடம் தோல்வியுடன் தொடங்கினார் ரெயின்ஸ். அதன் பிறகு ராயல் ரம்பள் மேட்ச்சின் இறுதியில் வெளியேற்றப்பட்டார். பிறகு ப்ராக் லெஸ்னருடன் Wrestlemania 34-ல் யூனிவர்சல் சாம்பியன்ஷிப் மேட்ச்சுகான வாய்ப்பு அமைந்தது. அதில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ரோமன் ரெயின்ஸை வென்றார் லெஸ்னர். பின் அவர்களுக்கிடையே ரீமேட்ச் ராயல் ரம்பல்ஸ் ஸ்டீல் கேஜ் மேட்ச்சாக நடைபெற்றது. இதிலும் போராடிய ரெயின்ஸ் தோல்வியடைந்தார். பிறகு இவர்களுக்கிடையே இறுதியுத்தம் சம்மர்ஸ்லாமில் நடைபெற்றது இம்முறை லெஸ்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ரெயின்ஸ். பிறகு பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய ஓய்வு வரை பெல்ட்டை தன் வசமே வைத்திருந்தார்.
#6. ப்ரௌன் ஸ்ட்ரோமன்.
ப்ரௌன்ஸ்ட்ரோமன் மிகவும் வேகமாக WWE-ல் வளர்ந்து விட்டார் என்பது நிதர்சனம். ஆம், அவர்தான் தற்போது RAW-வின் பலம். அவர் பேசுவது குறைவாகவும் சண்டையிடுவது அதிகமாகவும் இருப்பதால் ரசிகர்களுக்கும் இவரைப் பிடித்திருக்கிறது. இவர் ட்ரக்கை சாய்த்ததன் மூலமும், பல எடை அதிகமான பொருட்களை தூக்கி துவம்சம் செய்ததும் ரசிகர்களை இவரின் பால் ஈர்த்தது. மேலும், இவர் ராயல் ரம்பளில் 13 பேரை எலிமினேட் செய்து ரோமன் ரெயின்ஸின் சாதனையை முறியடித்தார். அதுமட்டுமல்லாமல் Money in the bank-யையும் வென்றார். அதனை இவர், ‘ஹெல் இன் த ஷெல்லில்’ ரெயின்ஸ்க்கு எதிராக காஷ் செய்து லெஸ்னரின் இடையூறால் தோல்வியடைந்தார். பிறகு லெஸ்னருடன், க்ரவுன் ஜூவலில் யூனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட்டு தோற்றார்.
#5. ஷெத்ராலின்ஸ்.
கடந்த சில வருடங்களாகவே ஷெத்ராலின்ஸ் WWE-ல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2018-ம் இதற்கு விதி விலக்கல்ல. இதில் சிறப்பு என்னவென்றால் RAW-வில் நடைபெற்ற Gauntlet மேட்ச்சில் போட்டியிட்ட ராலின்ஸ், அந்த மேட்ச்சில் ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் சண்டையிட்டார். இதன்மூலம் RAW-வில் அதிக நேரம் சண்டையிட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் எலியஸால் எலிமினேட் செய்யப்படும் முன் ஜான்ஸீனா மற்றும் ரோமன் ரெயின்ஸை எலிமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wrestlemania34-ல் இன்டர் கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதன் மூலம், WWE – ன், 29 வதுTriple crown champion மற்றும் 18-வது Grandslam champion ஆனார்.
#4. ப்ராக்லெஸ்னர்.
இந்தப் பட்டியலில் லெஸ்னர் இடம்பெற்றது பலருக்கு சற்று வியப்பாக இருக்கலாம். ஏனென்றால், இவர் வருடத்திற்கு குறிப்பிட்ட ஒருசில முறை மட்டுமே WWE-க்குள் பிரவேசிப்பார். மேலும் ஏ.ஜே. ஸ்டைல்ஸ்-உடன் ஒப்பிடுகையில் இவருக்கெதிரான போட்டியாளர்களும் குறைவாகும். ஆனால், இவர் தன்னுடைய WWE யூனிவர்சல் சாம்பியன்ஷிப் பெல்ட்டை 505 நாட்கள் வைத்திருந்து வெற்றிகரமாக வலம் வந்ததன் காரணமாக இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.