சென்ற வாரம் ஏ.ஈ.டபுள்யு ரெஸ்லிங் கம்பெனி , டபுள்யு டபுள்யு ஈ(WWE) சூப்பர்ஸ்டார் ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க மிகப் பெரிய தொகை ஒன்றை தர தயாராக இருப்பதாக வதந்திகள் பரவியது. தற்பொழுது "ஃபைட்புல்" எனும் ரெஸ்லிங் இணையதளத்தை சேர்ந்த சீன் ராஸ் சேப் ( Sean Ross Sapp ) எனும் பத்திரிக்கையாளர், அந்த சூப்பர்ஸ்டார் ரேன்டி ஆர்டன் தான் என்று தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆர்டன் ஏ.ஈ.டபுள்யூ-வை, தன் டபுள்யு டபுள்யு ஈ (WWE) சம்பளத்தை உயர்த்தும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்வதாகவும் தனது கட்டுரையில் கூறி இருக்கிறார்.
ரேன்டி ஆர்டனின் ரெஸ்லிங் வாழ்க்கை
13 முறை சாம்பியனான ரேன்டி ஆர்டன், 38 வயதிலும் "ஸ்மாக் டௌன்" ப்ரமோஷனின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறார். 2001-இல் தன் ரெஸ்லிங் வாழ்க்கையை "ஓ.வீ.டபுள்யூ" எனும் யூத் ரெஸ்லிங் பயிற்சி கம்பெனியில் தொடங்கினார். 2002-இல் டபுள்யு.டபுள்யு.ஈயில் இணைந்த ஆர்டன் , 18 வருடங்களாக பல மறக்க முடியாத போட்டிகளிலும், கதைகளங்களிலும் பங்கேற்றுள்ளார். அவரின் " லெஜன்ட் கில்லர் " கதாபாத்திரம் நிறைய ரெஸ்லிங் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். அவருடைய பினிஷரான "ஆர்.கே.ஓ" உலகப் புகழ் பெற்ற ரெஸ்லிங் மூவ் ஆகும்.
ஏ.ஈ.டபுள்யூ பற்றி...
ஆல் எலைட் ரெஸ்லிங் (AEW) இந்தாண்டு ஆரம்பத்தில் வியாபாரிகள் ஷஹித் கான் மற்றும் டோனி கானால் தொடங்கப்பட்டது. இந்த கம்பெனியின் வைஸ் ப்ரெசிடண்ட் பிரபல ரெஸ்லர் கோடி ரோட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் க்ரிஸ் ஜெரிக்கோ தான் ஏ.ஈ.டபுள்யூ கம்பெனியில் ரெஸ்லிங் செய்வதாக அறிவித்தார். இந்த செய்தி பலரை அதிர்ச்சியூட்ட காரணம் ஏ.ஈ.டபுள்யூவின் பண பலம் தான். நியூ ஜப்பான் ரெஸ்லிங்கின் புகழ் பெற்ற கென்னி ஓமேகாவும் தற்பொழுது ஏ.ஈ.டபுள்யூவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டனின் தற்போதைய நிலை
சீன் ராஸ் சேப் யூடியூப் வீடியோ ஒன்றில் தன்னுடைய தொடர்பாளர் நம்பிக்கையான மற்றும் ஏ.ஈ.டபுள்யூவுக்கு மிகவும் நெருக்கமான நபர் என கூறியுள்ளார். தான் ஏ.ஈ.டபுள்யைவை தொடர்பு கொண்டதாக கூறியுள்ள சீன் ராஸ், ஏ.ஈ.டபுள்யூ வெளிப்படையாக இவ்விஷயத்தைப் பற்றி கூற தயங்குவதாக தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் நிறைய பிரபல ரெஸ்லர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் ஒப்பு கொண்டுள்ளனர். அவர்கள் சில ஏஜென்ட்களை வைத்து ரெஸ்லர்களுடன் ஒப்பந்தம் பேசுவதாக சீன் ராஸ் கூறியுள்ளார். சீன் ராஸ் தாம் முதலில் டேனியல் ப்ரையன், ஏ.ஜே ஸ்டைல்ஸ் மற்றும் நாகமுரா இவர்களில் ஒருவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக பலமாக நம்பியதாக கூறினார். ஆர்டனின் பெயர் அவருக்கு அதிர்ச்சியைத் தந்ததாக சீன் ராஸ் கூறினார்.
அடுத்து என்ன?
ஏ.ஈ.டபுள்யு நடத்தும் பல பத்திரிக்கையாளர் சந்திப்புகள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் நடக்க இருக்கிறது. ஏ.ஈ.டபுள்யூவின் " டபுல் ஆர் நத்திங் " நிகழ்ச்சி மே மாதம் நடக்க இருக்கிறது. ஆதலால், அது வரை பல பிரபல ரெஸ்லர்கள் அந்த கம்பெனியில் இணையலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
எழுத்து - கேரி கேஸிடி
மொழியாக்கம் - அஜய்