சமீப காலமாக ஸ்மாக்டௌன் போட்டிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறன. WWE சாம்பியன்ஷிப்க்கான கதைக்களம் பல திருப்புமுனைகளுடன் இடம்பெற்றுவருகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் கணிக்கமுடியாத வகையில் போட்டிகளை திட்டமிட்டு வருகிறது WWE கிரியேட்டிவ் குழு.
கடந்த இரு மாதங்களாகவே WWE-வின் நிர்வாக இயக்குனர் வின்ஸ் மக்மஹோன் WWE சாம்பியன்ஷிப்க்கான கதைக்களத்தில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக WWE சாம்பியன்ஷிப்க்கான போட்டிகளில் பங்கேற்று வரும் நியூ டே குழுவின் ஒருவரான ஃகோபி கிங்ஸ்டனை மக்மஹோன் ஓரம்கட்டுகிறார்.
பாஸ்ட்லென் நிகழ்ச்சியில் WWE சாம்பியன்ஷிப்க்கான போட்டியில் ஃகோபி கிங்ஸ்டனுக்கு பதிலாக கெவின் ஓவென்ஸ் சண்டையிட செய்தார் மக்மஹோன். எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் ஃகோபி பங்கேற்கக் கூடாது என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார் மக்மஹோன். அதன் விளைவாகவே இந்த வாரம் ஒன்றன்பின் ஒன்று என தொடர்ச்சியாக போட்டிகளை அமைத்து வேண்டுமென்றே கிங்ஸ்டனின் ரஸ்ஸில்மேனியா கனவை தகர்த்தார் வின்ஸ் மக்மஹோன்.
எனவே, வின்ஸ் மக்மஹோன் ஃகோபி கிங்ஸ்டனை வெறுப்பதற்கான இரண்டு காரணங்கள் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
#3. தான் மிகப்பெரிய சர்வாதிகாரி என்று நிலைநாட்டுதல்
வின்ஸ் மக்மஹோன் தான் ஒரு மிகப் பெரிய சர்வாதிகாரி என்று காட்டம் காட்டுவதில் தவறியதில்லை. மில்லியன் டாலர்களை குவிக்கும் கம்பெனியின் நிர்வாக இயக்குநராக பல வருட காலங்களாக விளங்கி வருவதால் இந்த பாணியை அவர் கடைப்பிடிக்கிறார் என்று கூறப்படுகிறது. WWE கம்பெனியின் டாப் வில்லன் என்ற பட்டத்தை ஆட்டிடியூட் இரா என்று அழைக்கப்படும் அந்த காலகட்டத்தில் இவர் பெற்றிருந்தார். ஸ்டீவ் ஆஸ்டின் மற்றும் தி ராக்குடன் தனது பகையை அக்காலத்தில் இவர் வளர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சமயங்களில், இவரது வில்லத்தனமான திட்டங்களால் WWE-வில் பல மறக்க முடியாத போட்டிகள் உண்டாகி உள்ளன. ஆதலால் இவரது திட்டங்களும் ஒரு சில நேரங்களில் ரசிகர்களால் வரவேற்பை பெறுகின்றன.
இந்த வருடத்தின் முன்பாகவே பல முக்கிய வீரர்களை தங்களுக்கான கதை களத்தில் அவர்களை பயணிக்க வைக்க WWE முடிவு செய்தது. ட்ரிபிள் ஹெச்ம், பாடிஸ்டாக்கு எதிராக கதைக்களத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இதைப் போலவே மிஸ்ஸும் ஷேன் மக்மஹோனுக்கு எதிராக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக இருக்கும் ஃகோபி கிங்ஸ்டனை, வின்ஸ் மக்மஹோன் புறக்கணிப்பது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சர்வாதிகார போக்கை கைவிட்டு கிங்ஸ்டனை வஞ்சிப்பது மக்மஹோன் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.
#2. ஃகோபி கிங்ஸ்டனின் கதாபாத்திரத்தை மெருகேற்றுதல்.
கடந்த சில மாதங்களாக பல்வேறு தடங்கல்களை சந்தித்து வரும் ஃகோபி கிங்ஸ்டன் ரசிகர்களின் விருப்பமிக்க வீரராக விளங்கி வருகிறார்.
கடந்த எலிமினேஷன் சேம்பர் போட்டியில் முஸ்தபா அலிக்கு பதிலாக ஃகோபி கிங்ஸ்டன் பங்கேற்றதன் மூலம் தன்னுடைய WWE கேரியரில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார் கிங்ஸ்டன். இதற்கு முன்னால் டேக் டீம் டைட்டிலை சிலமுறை வென்றிருந்தாலும் இவ்வளவு பெரிய வரவேற்ப்பை அவர் பெற்றதில்லை.
எலிமினேஷன் சேம்பருக்கு முன்பாக நடந்த கவுண்ட்லேட் போட்டியில், டேனியல் பிரையன் மற்றும் சமூ-ஆ ஜோ ஆகியோரை பின் செய்திருந்தார் கிங்ஸ்டன். கடைசியாக எஜெ ஸ்டைல்ஸிடம் சண்டையிட்ட கிங்ஸ்டன் தோல்வியை தழுவினார். இந்தப் போட்டியில் பெற்ற எழுச்சியின் மூலம் எலிமினேஷன் சேம்பர் போட்டியில் நல்ல உத்வேகத்துடன் கிங்ஸ்டன் காணப்பட்டார்.
நல்ல பர்பாமென்ஸை கொடுத்து வந்த கிங்ஸ்டன் டேனியல் பிரையனை எதிர்கொள்ள தகுதியான வீரராக திகழ்ந்து வந்தார். ஆனால் வின்ஸ் மக்மஹோன் என்ன நினைத்தாரோ என்பது தெரியவில்லை, இவருக்கு பதிலாக கெவின் ஓவன்ஸை களத்தில் இறக்கினார்.
மக்மஹோன் கிங்ஸ்டனை ஓரங்கட்டுவது கிங்ஸ்டனின் எழுச்சிக்காகவே எனக் கூறப்படுகிறது.
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு உள்ளதால், ரஸ்ஸில்மேனியாவில் டேனியல் பிரையனுக்கு எதிராக இவர் களம் காணுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.