என்ன கதை ?
கடந்த ஜனவரி மாதம், டீன் ஆம்ப்ரோஸ் ஒப்பந்தம் முடிவடைந்து ஏப்ரல் மாதத்தில் WWE-விட்டு வெளியேறுவார் என்ற தகவல் மளமளவென பரவி ரசிகர்களிடையே தாக்கத்தை உண்டாக்கியது. ரசிகர்கள் இந்த தகவல் பொய்யாக இருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் இத்தகவலை WWE உறுதிப்படுத்தியது.
ஆம்ப்ரோஸுக்கு இறுதி போட்டியாக ஷியில்டு அணியுடன் கூட்டு சேரும் வகையில் போட்டியை அமைக்க WWE திட்டமிட்டது. ஆனால் ஆம்ப்ரோஸின் ஒப்பந்தம் விரைவில் முடிவடையவே WWE இப்போட்டியே கைவிடும் தருவாயில் உள்ளது. எதிர்வரும் பிரமாண்ட ரஸ்ஸில்மேனியாவில் கூட ஆம்ப்ரோஸுக்கு போட்டி அமைக்கப்படவில்லை. ஆம்ப்ரோஸ் விலகுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதால் WWE-யை விட்டு விலகாதே என்று தனது ஷியில்டு சகோதரரான ரோமன் ரெய்ங்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒருவேளை இதைப்பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
கடந்த சில மாதங்களாவே டீன் ஆம்ப்ரோஸ் பெரும்பாலும் WWE நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. கடந்த ராயல் ரம்பல் போட்டியில் கூட மிக விரைவில் ஆம்ப்ரோஸ் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் தனது ஷியில்டு சங்கோதரரான செத் ரோல்லின்ஸுடன் பகை கொண்டுள்ளார் ஆம்ப்ரோஸ். ராயல் ரம்பிள் போட்டியை செத் ரோல்லின்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.
ராயல் ரம்பல் போட்டியில் வென்ற பிறகு ரசிகர்கள் மத்தியில் உரையாட அடுத்தநாள் மண்டே நைட் ரா நிகழ்ச்சியில் ரோல்லின்ஸ் பங்கேற்றார். ரோல்லின்ஸின் வெற்றியை தாங்க முடியாத அம்ப்ரோஸ் ரோல்லின்ஸின் வெற்றி கொண்டாட்டத்தை சிதைத்தார். இவ்வாறு நடந்த பிறகு ஆம்ப்ரோஸ் ட்ரிபிள் ஹெச்சை வலியுறுத்தவே இவ்விரு வீரர்களுக்கிடையே ஒரு போட்டி அமைக்கப்பெற்றது. இப்போட்டியிலும் ரோல்லின்சே வெற்றி பெற்றார். இப்போட்டி நடந்த பிறகு வளையத்தில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்ட ஆம்ப்ரோஸ் நேரத்தை கடக்க முயன்றார். இவ்வாறு அவர் செய்தது WWE விட்டு வெளியேறுவதாக கூறுவதற்கு என்று ரசிகர்கள் நினைத்தனர், ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.
இருந்தபோதிலும், பாஸ்ட்லேன் போட்டியில் தி ஷியில்டு அணி ஒன்று கூடியிருந்தாலும், ஆம்ப்ரோஸ் முழுமனதாக இப்போட்டியில் களம் காணவில்லை.
மையக்கரு
கொரில்லா பொசிஷன் என்ற செய்தி நிறுவனம் தனது கடைசி போட்டியில் குர்ட் ஆங்கிள், ஜான் ஸினாவுக்கு எதிராக களம் காணுவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு முன்பாகவே உலகிற்கு தெரியப்படுத்தியது, அதே நிறுவனம் தான் தற்போது ரோமன் ரெய்ங்க்ஸை பேட்டி எடுத்துள்ளது.
ஆம்ப்ரோஸ் விலகுவதைப்பற்றி ரோமனிடம் கேள்வி கேட்கப்பட்டது, ஆம்ப்ரோஸ் இன்னும் நெடுநாள் விளையாடவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. மேலும் அம்ப்ரோஸின் புகழ்பாடிய ரோமன் ஆம்ப்ரோஸின் உண்மையான பெயரான “ஜான்” என்ற பெயரை பயன்படுத்தினார். ஆம்ப்ரோஸுக்கு எது நல்லது, எது அவருக்கு மகிழ்ச்சி தரும் என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்று கூறி முடித்தார் ரோமன்.
அடுத்தது என்ன ?
ஆம்ப்ரோஸ் WWE-வில் நீடிப்பாரா இல்லையா, ரஸ்ஸில்மேனியா என்னும் பிரமாண்ட அரங்கில் பங்கேற்பாரா இல்லையா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும். எனினும் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள AEW என்னும் WWE போன்ற ஒரு நிகழ்ச்சியில் டீன் ஆம்ப்ரோஸ் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.