என்ன கதை ?
ரோமன் நோயிலிருந்து மீண்டு வந்த பிறகு இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே களம் கண்டுள்ளார். ஒரு போட்டி தனியாகவும் மற்றொரு போட்டி ஆறு பேர் கொண்ட டேக் போட்டியாகவும் ரோமனுக்கு அமைந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற ரா நிகழ்ச்சியில் ரோமன் பங்கேற்பதாக இருந்தது, ஆனால் ட்ரயூ மக்என்டயரின் தலையிடுதலால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ரோமன் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாகவே இந்த வாரம் நடைபெற்ற ரா நிகழ்ச்சியிலும் ரோமன் பங்கேற்க முடியாமல் போனது.
ஆக, ரோமனை எப்போது அரங்கத்திற்குள் பார்க்கலாம் என்பதை தெரிந்துகொள்ள கீழுள்ள தொகுப்பை படிக்கவும்.
ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்தால்…
ரோமன் லுகேமியா என்ற நோயால் அவதிப்பட்டு வந்தது ரசிகர்களிடையே சோகத்தை உண்டாக்கியிருந்தது. நோயிலிருந்து விடுபட சிகிச்சைகளை உட்கொண்ட ரோமன் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். நோயிலிருந்து விடுபட்டு வருவதாக கூறிய ரோமன் கடந்த பாஸ்ட்லென் போட்டிகளில் மீண்டும் திரும்பினார். பாபி லாஷ்லி, மக்என்டயர், மற்றும் பாரேன் கார்பினுக்கு எதிராக களம் கண்ட ரோமனை உள்ளடக்கிய “தி ஷியில்டு” அணி வெற்றியை சுவைத்திருந்தது.
கடந்த வாரம் கார்பினுக்கு எதிராக களம் காண இருந்த ரோமன், மக்என்டயரின் தாக்குதலுக்கு உள்ளானார். எனவே அப்போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
மையக்கரு.
இந்த வாரம் ரோமன் பங்கேற்பதாக இருந்த ரா போட்டியில் ரோமன் பங்கேற்கவில்லை, காரணம் கடந்த வாரம் மக்என்டயர் ஏவிய தாக்குதல் தான். கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ரோமன், படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ரஸ்ஸில்மேனியாவுக்கு முன்பாக நடைபெற உள்ள ரா போட்டியில் ரோமன் கண்டிப்பாக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரோமன் எதிர்வரும் ரா போட்டியில் பங்கேற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
கடந்த வாரம், மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ரோமன் ரெய்ங்ஸ் மற்றும் டீன் ஆம்ப்ரோஸ் இருவரும் போட்டிகளில் பங்கேற்காமல் போனது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ப்ரோஸ் தனது ஷியில்டு சகோதரரான செத் ரோல்லின்ஸை காப்பாற்ற மட்டும் கடந்த வார நிகழ்ச்சியில் தோன்றினார்.
எதிர்வரும், ரா நிகழ்ச்சிக்கான விளம்பர வேளைகளில் ஈடுபட்டுள்ளது WWE, ப்ரவுன் ஸ்ட்ரோவ்மன் மற்றும் பாரேன் கார்பின் இடையேயான போட்டியை பெரிதளவில் விளம்பரப்படுத்தி வருகிறது WWE. மேலும் பாபி லாஷ்லி, ஃபின் பெலோர் மற்றும் ட்ரயூ மக்என்டயர் இடையேயான ட்ரிபிள் திரேட் போட்டியையும் விளம்பரப்படுத்தி வருகிறது WWE. Wrestlinginc தளத்தின் தகவலின்படி மேற்கூறிய இரு போட்டிகளும் ரா நிகழ்ச்சியில் இடம் பெறாது என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்விரு போட்டிகளும் ரா நிகழ்ச்சியின் முன்பாக அல்லது ரா நிகழ்ச்சிக்குப்பின் நடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரயூ மக்என்டயர் மேடையில் ரோமனுக்கு எதிராக சவால் விடுத்துள்ளதால் ரோமன் எதிர்வரும் ரா நிகழ்ச்சியில் பங்குபெற்று தன்னுடைய கெத்தை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியில், ஷியில்டு அணியின் இணை சகோதரர்களும் ரோமனுக்கு உறுதுணையாக போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டி ட்ரிபிள் திரேட் போட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!