என்ன நடந்தது ?
fightful தளத்தின் படி, கிரவுன் ஜவல் தொடங்குவதற்கு முன்பாகவே ரோமன் ரெய்ங்ஸ் சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த கிரவுன் ஜவல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று வின்ஸ் மக்மஹோன் மற்றும் இதர WWE நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தார். மிகப்பெரிய பெ பர் வியூ போட்டியில் பங்கேற்றே ஆகவேண்டும் என்ற வின்ஸ் மக்மஹோனின் கோரிக்கையையும் நிராகரித்தார் ரோமன். மேலும் கடந்த வருடம் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை திருப்பித் தந்த ரோமன் சிறிது காலம் ஓய்வை அறிவித்தார். லுகேமியா என்னும் நோயின் பிடியிலிருந்து மீளவே ரோமன் தற்காலிக ஓய்வினை அறிவித்தார்.
கடந்த வருடம் நவம்பரில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற கிரவுன் ஜவல் நிகழ்வில் ரோமன் பங்கேற்க விருப்பம் இல்லாத காரணத்தையே இது காட்டுகிறது.
ஜான் ஸினா மற்றும் டேனியல் பிரையன் ஆகியோரும் இந்நிகழ்வை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
பலமுறை WWE சாம்பியன் பட்டத்திற்கு சொந்தக்காரரான ரோமன் ரெய்ங்ஸ் தனது முதல் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை சம்மர்ஸ்லாம் 2018-ல் வென்றார். இப்போட்டியில் தனது நெடுநாள் எதிரியான ப்ராக் லெஸ்னரை வீழ்த்தியிருந்தார் . எதிர்பாராத விதமாக தனது யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை ரோமன் விட்டுக் கொடுக்க நேர்ந்தது, கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெற்ற ரா நிகழ்ச்சியில் லுகேமியா நோயை எதிர்கொள்வதற்காக தற்காலிக ஓய்வினை அறிவித்திருந்தார் ரோமன். பதினோரு வருடங்கள் கழித்து ரோமனுக்கு லுகேமியா நோய் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் ஐந்து மாதங்களாக WWE-லிருந்து விலகி இருந்த ரோமன், இந்த வார நிகழ்ச்சியில் தென்பட்டது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களுக்கு தனது உடல்நிலையை பற்றி நற்செய்தியை தெரிவித்த ரோமன், படிப்படியாக நோயிலிருந்து தேறி வருவதாகவும் விரைவில் களத்தில் காணலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
மையக்கருத்து
சவுதி அரேபியாவில் விளங்கும் அசாதாரண அரசியல் சூழல் காரணமாக ரோமன் அங்கு நடைபெறவிருந்த போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்தார்.
ரோமன் தனது யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை ப்ராக் லெஸ்னர் மற்றும் பிரவுன் ஸ்ட்ரோமனிடம் பணையம் வைத்து ட்ரிபிள் திரேட் போட்டியாக சவுதி அரேபியாவில் நடந்த கிரவுன் ஜவலில் களம் காணுவார் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ரோமன் சவுதிக்கு வர மறுத்ததால், இப்போட்டி கைவிடப்பட்டு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தள்ளிவைக்கப்பட்டது.
அடுத்தது என்ன ?
ரஸில்மேனியா நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ரோமனுக்கான போட்டி கதை களத்தை ஏற்படுத்தி வருகிறது WWE. இன்று நடந்த ரா நிகழ்ச்சியின் அடிப்படையில் ரோமன் ஒரு புது பரிமாணத்திற்கு தயாராகி வருகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
பெரும் மும்முனை தாக்குதலுக்கு ஆளாகி கொண்டிருந்த டீன் ஆம்புரோஸை காப்பாற்ற ரசிகர்களின் ஆரவாரத்தோடு அரங்கத்திற்குள் நுழைந்தார் ரோமன் ரெய்ங்ஸ். தனக்கே உண்டான அசைவுகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ரோமன்.
இப்போட்டியில் டிரிவ் மக்ஏன்டயறை தனது பாணியில் துவம்சம் செய்தார் ரோமன். “சூப்பர் மேன் பஞ்” மற்றும் “ஸ்பியர்” ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தார் ரோமன் ரெய்ங்ஸ். ஆகவே ரஸில்மேனியா 35-ல் டிரிவ் மக்ஏன்டயறுடன் ரோமன் களம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோமன் ரெய்ங்ஸ், சவுதி அரேபியா பயணத்தை ரத்து செய்தது சரியா? இதைப் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்னவென்று கீழே கமெண்ட் செய்யவும்.