இது எதைப் பற்றிய தொகுப்பு ?
லியட்டி ஜோசப் அனோவா என்ற பெயரைச் சொன்னால் நாம் அனைவரும் யார் இவர் என்று எண்ணிக் கொள்வோம். இப்பெயருக்கு சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை ரோமன் ரெய்ங்ஸ் தான், ஆம் ரோமன் ரெய்ங்ஸின் உண்மையான பெயர் லியட்டி ஜோசப் அனோவா. செல்லமாக ஜோ என்றும் அழைக்கப்படுகிறார்.
சமீபத்தில் WWE-வின் செய்திகளை உட்கொண்ட Wrestlinginc என்னும் இணையதள பதிப்புக்கு அளித்த பேட்டியில் தனது கதாபாத்திரத்தை மாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார் ரோமன்.
ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
ஐந்து மாதம் நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் WWE அரங்கத்திற்கு திரும்பியுள்ள ரோமன் ரெய்ங்ஸ், பலத்த எதிர்பார்ப்புடன் அடுத்த கட்டமான ரஸ்ஸில்மேனியா 35-க்கு தயாராகி வருகிறார். லுகேமியா என்ற நோயால் அவதிப்பட்டு வந்த ரோமன் ரெய்ங்ஸ், அக்கொடிய நோயுடன் போராடி தற்போது குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கான அடுத்தகட்ட கதைகளத்தை WWE எவ்வாறு அமைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
நடந்து முடிந்த பாஸ்ட்லேன் போட்டியில் பாபிலாஷ்லி, மக் என்டயர் மற்றும் பரோன் கார்பின் இணையை எதிர்த்து போட்டியிட்டு வெற்றியை தன்வசப்படுத்திருந்தனர் “தி ஷியில்டு” அணியை சேர்ந்த ரோமன், செத் ரோல்லின்ஸ் மற்றும் டீன் ஆம்ப்ரோஸ் இணை.
மையக்கருத்து
தனது கதாபாத்திரத்தின் தன்மையை குறித்து ரோமன் தெரிவித்த கருத்துக்களை பற்றி இங்கு காணலாம்
“கடந்த வாரம் நான் WWE போட்டிகளுக்கு திரும்பிய நிலையில், எனக்கு மிகவும் மகிழ்ச்சி கிட்டும் தருணமாக அது அமைந்தது, மேலும் சற்று உணர்ச்சிகரமாக உணர்ந்தேன். ரசிகர்கள், நான் திரும்பி வர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தது நான் நன்கு அறிவேன், எனவே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நோக்கத்தில் தன்னால் முடிந்ததை செய்து உற்சாக படுத்தினேன். அவர்களின் குட்டி வெகேஷனாக இது அமைந்திருக்கும். என்னிடம் செலுத்தப்பட்ட அனைத்து நல்ல விஷயங்களையும் என்னை விரும்புபவர்கள் மத்தியில் நான் செலுத்த முயற்சித்தேன். அவ்வாறே நடந்தது”
எதிர்வரும் காலத்தில் மாறுபட்ட கதை களத்தில் தன்னை பார்க்க வேண்டும் என்று கூறினார் ரோமன்.
தனது நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை பற்றி ரோமன் கூறியதாவது
“நிஜ வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், தனது உறவினர்களான “தி ஊசோஸ்” போன்று தான் நானும், ஒன்றாக பல விஷயங்களை செய்வோம். வயதில் ஒரு கால கட்டத்தை எட்டி இருந்தாலும் இன்னும் சிறுபிள்ளைத்தனமான விஷயங்களை செய்வதுண்டு. எங்களுடைய பட்டாளம் ஒன்று சேர்ந்தால் பல சிறுபிள்ளைத்தனமான விஷயங்கள் அரங்கேறுவது வழக்கம், எதிர்வரும் காலங்களில் வாழ்க்கையில் சிறு நகைச்சுவையோடும் புத்துணர்வோடும் கடந்து செல்ல ஆசைப்படுகிறேன்” என்று கூறி முடித்தார்.
அடுத்தது என்ன?
கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் ரோமன் ரெய்ங்ஸ் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் ட்ரயூ மக்என்டயருடன் களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. WWE கதைகளத்தை ருசிகரமாக மாற்ற நினைத்தால் ஷியில்டு அணியின் டீன் ஆம்ப்ரோஸ் ரோமனுக்கு எதிராக செயல்படும் வண்ணம் கதைக்களம் அமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது
“தி பிக் டாக்” எனப்படும் கதாபாத்திரத்தை ரோமன் மாற்றுவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்