WWE போட்டிகளில் கடந்த சில வருடங்களாக ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட வீரர் ரோமன் ரெய்ங்ஸ். காரணம் இவரின் புறத்தோற்றமும் எதிரியை தாக்கும் தன்மையும். இவர் தற்போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதால் கண்ணீர் மல்க WWE அரங்கத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்பு ஷீயீல்டு என்ற அணி பெயரில் ரோமன் ரெய்ங்ஸ், செத் ரோல்லின்ஸ் மற்றும் டீன் அம்ப்ரோஸ் ஆகியோர் WWE போட்டிகளில் அறிமுகமானனர். இவர்கள் மூவரும் சேர்ந்து எப்படிப்பட்ட வீரர்களையும் சாய்க்கும் தன்மை பெற்றிருந்தனர். சிறிது காலத்திற்கு பிறகு இவர்கள் மூவருக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரட்சணையால் தனித்தனியே பிரிந்தனர்.
இதில் ரோமன் ரெய்ங்ஸ் மட்டுமே அதிக பிரபலம் ஆனார். இவரின் அசாத்திய திறனால் மிகப் பெரிய வீரர்களான ஜான் சீனா, ரேன்டி ஓர்டன், பிக் ஷோ போன்ற பல வீரர்களை வீழ்த்தினார். WWE சேம்பியன்ஷிப் , வேல்டு ஹெவி வெய்ட் சேம்பியன்ஷிப் போன்ற பல பெல்டுகளை தன்வசமாக்கினார்.
கேன்சர் நோய் தாக்கிய சோகம்
இப்படி அசைக்கமுடியாத வீரராக இருந்த இவருக்கு கடந்த வருடம் தான் அந்த சோகம் நிகழ்ந்தது. இரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி இதனால் உயிர் பிழைப்பது கடினம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் WWE போட்டிகளில் இருந்து தான் விலகுவதாக கண்ணீர் மல்க மேடையில் உரையாற்றி வெளியேறினார்.
தற்போதைய நிலை!!!

ரோமன் ரெய்ங்ஸ் மற்றும் ஸ்ட்ரோமேன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். தற்போது அவர் தான் ரோமன் ரெய்ங்ஸ் -யை கவனித்து வருகிறார். அவர் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் “ ரோமன் நலமாக உள்ளார். அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்கிறார். எல்லாம் சரியாக சென்றுக் கொண்டிருக்கிறது. “ எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல் அவர் தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதால் விரைவில் குணமடைவார் எனவும் கூறினார்.

இவ்வாறு சிகிச்சை பெற்றுவரும் ரோமன் ரெய்ங்ஸ்எப்போது WWE போட்டிகளில் மீண்டு வருவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து வருகின்றனர். லிகேமியா நோயால் பாதிக்கப்பட்ட அவர் தினமும் ஒரு முறை மட்டுமே பேசுவதாகவும் கூறினார். மேலும் கிரிஷ் ஜெரிகோ இது குறித்து கூறுகையில் ரோமன் விரைவில் குணமடைவார். அவர் தங்களிடம் நன்றாக பேசி வருவதாகவும் கூறினார்.

என்ன தான் போட்டிகளில் எதிரிகளாக இருந்தாலும் அவரது நிலை கண்டு சக வீரர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். ரோமன் விடைபெற்றுச் செல்லும் போது ஷீயீல்டு அணி வீரர்களான டீன் அம்ப்ரோஸ் மற்றும் செத் ரோல்லின்ஸ் ஆகியோரை கட்டித் தழுவி கண்ணீர் மல்க வெளியேறியதைக் கண்டு அனைத்து ரசிகர்களும் கண்கலங்கிய தருணம் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களின் விருப்பம் ரோமன்ரெய்ங்ஸ் குணமடைய வேண்டும் என்பதே. அவர் சென்ற பிறகு அவரது இடத்தை நிரப்ப வேறு எந்த வீரராலும் முடியவில்லை என WWE நிர்வாகம் கூறியுள்ளது. ரோமன் ரெய்ங்ஸ் விரைவில் குணமடைய வேண்டும் என எங்களது குழுவின் சார்பில் பிராத்தனைகள்.