90-களில் குழந்தைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தொலைக்காட்சி தொடர் டபள்யூ டபள்யூ ஈ என் அழைக்கப்படும் குத்துசண்டை நிகழ்ச்சி, நடக்கும் அனைத்து சண்டைகளும் முன்னரே திட்டமிடப்பட்டு வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நாம் அனைவரும் அதை பற்றி அறியாமல் அம்மாவிடம் சண்டையிட்டு ரிமோட்டை வாங்கி டென் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அடிமையாக கிடந்தது ஒரு காலம், ப்ராக் லேன்சர் அண்டர்டேக்கர் போன்றொர் 90 களின் குழந்தைகளுக்கு ஹீரோ எனலாம், அது போல 20 களின் குழந்தைகளுக்கு ஹீரோவாக வந்தவர் ரோமன் ரெய்ன்ஸ், குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல தரப்பட்ட ரசிகர்களை கொண்ட இவர் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியோடு போட்டிகளில் இருந்து தற்காலிக ஓய்வை அறிவித்தார். அது பற்றி காண்போம்.
டபள்யூ டபள்யூ ஈயில் நட்சத்திர வீரரான ரோமன் ரெய்ன்ஸை நாம் அனைவரும் அறிந்ததே! சில நாட்களுக்கு முன் அவர் அறிவித்த ஒரு செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, அச்செய்தி 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருக்கு லூக்கிமியா எனும் நோய் தாக்கியுள்ளதாகவும், எனவே தற்காலிகமாக போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்தி சிகிச்சைக்கு செல்வதாகவும் நோய் குணமான பின் மீண்டு வருவேன் என குறிப்பிட்டிருந்தார்.
ரோமன் ரெய்ன்ஸ் கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், தான் சிறுவயதில் பல நாட்களாக கஷ்டபட்ட லூக்கிமியா எனும் வியாதி மீண்டும் வந்துள்ளதால் அதற்காக தற்காலிகமாக WWE ல் இருந்து ஓய்வு பெற்று சிகிச்சைக்கு செல்வதாகவும் அறிவித்திருந்தார். சமீபத்தில் பிட்ஸ்பெர்க் எனும் இடத்தில் வேர்ல்ட் ஆஃப் வீல்ஸ் எனும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ரசிகர்கள் பலர் திரண்டிருந்த அந்த நிகழ்ச்சியில் ரோம்ன் ரெய்ன்ஸ் பங்கு பெற்றார், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்ட அவர் தன் ரசிகர் ஒருவருக்கு மேடையில் இருந்ந்து இறங்கி வந்து அவர் வைத்திருந்த புகைப்படத்தில் கையொப்பமிட்டார்.
உங்களுக்கு இதைப்பற்றி தெரியாமலிருந்தால்
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தில் நடிக்கவிருந்ததாக அனைவரும் கேள்வி பட்டோம், ஆனால் ரோமன் ரெய்ன்ஸின் உடல்நிலை காரணமாக அதுவும் முடியாமல் போனது அது மட்டுமில்லாமல் நிக்கலோடியன் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட பங்குபெற்றிருந்தார்.
மனம் உருக்கிய நிகழ்வு
ரோமன் ரெய்ன்ஸ் எப்போதும் தன் ரசிகர்களுடன் கனிவாகவும் மரியாதையாகவும் நடக்க கூடியவர், அன்று நடந்த அந்த நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் ரோமன் ரெய்ன்ஸிடம் கையொப்பம் வாங்க முயற்சி செய்தார், ஆனால் அவர் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதை கவனித்த ரோமன் ரெய்ன்ஸ் தானாக வந்து அப்பெண்ணுக்கு அவர் வைத்திருந்த புகைபடத்தில் கையொப்பமிட்டார்.
அடுத்து என்ன?
ரோமன் ரெய்ன்ஸ் அந்த நிகழ்ச்சியில் தன் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர் மீண்டும் WWE உலகுக்கு திரும்புவேன் என உரக்க சொன்னார். இருப்பினும் லூக்கிமியா என்பது சாதாரண நோய் அல்ல, இருந்தாலும் ரோமன் ரெய்ன்ஸ் அந்நோயை வென்று மீண்டும் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.