இது எதைப்பற்றிய தொகுப்பு ?
ரோமன் ரெய்ங்ஸ் leukaemia என்ற நோயால் பாதிக்கப்பட்டு WWE போட்டிகளில் இருந்து விலகியது நம் அனைவரும் அறிந்ததே. இது ரசிகர்களுக்கு இன்றளவும் பேரிடியை தரும் விஷியமாக இருக்கிறது.
ரெய்ங்ஸ் இல்லாமல் WWE போட்டிகளும் கலையிழந்து காணப்படுகின்றன. இந்த நோய் என் ஒரு பொய்யாக இருக்கக்கூடாது என்று பல ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றன. உலகளவில் அவரது ரசிகர்கள் பல விதமான பிரார்த்தனைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
WWE நேரலை போட்டிகளில் மகளிர் WWE சாம்பியனாக இருக்கும் ரோண்டா ரோவ்ஸி ரோமனின் சூப்பர்மேன் பஞ்சை ஒரு போட்டியில் பயன்படுத்தியதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஒருவேளை இதைப்பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்...
ஸ்போர்ட்ஸ் என்டேர்டைன்மென்ட் வரலாற்றில் ரோமன் விடைபெற்ற நாள் கருப்புதினமாக அமைந்தது. ரோமன் தனது யூனிவேர்சல் சாம்பியன்ஷிப் பட்டத்தை துறந்து, நோயால் பதினோரு வருஷமாக அவதிப்பட்டிருந்த நிலையில் WWE போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்திருந்தார்.
ரோண்டா ரோவ்ஸி WWE பெண்களுக்கான பிரிவில் ஒரு அசைக்கமுடியாத வீராங்கனையாக திகழ்கிறார். சொல்லப்போனால் பெண்கள் WWE-வின் அடையாளம்.ரோமனின் இல்லாத இத்தருணத்தில் WWE-யின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார் ரோவ்ஸி. எதிர்வரும் WWE TLC போட்டியில் நியா ஜாக்சிற்கு எதிராக களம் காணவுள்ளார் ரோவ்ஸி.
ரோமன் லாக்கர் ரூம் தலைவராக விளங்கிவந்தார், அவர் இல்லாதாது லாக்கர் ரூமில் இருக்கும் அனைவரையும் பாதித்துள்ளது. அனைவரிடமும் ரோமன் நட்புடன் பழகிவந்தார். ரிங்கிற்குள் பலரை எதிர்த்திருந்தாலும், ரிங்கிற்கு வெளியே நட்புடன் காணப்பட்டார் ரெய்ங்ஸ்.
தொகுப்பின் மையக் கரு
சூப்பர்மேன் பஞ்ச் ரோமனின் அடையாள மூவாக இருந்து வந்தது. அது ஒரு பினிஷெராக கருதப்படாவிட்டாலும் எதிராளியை காயப்படுத்தும் வகையில் இந்த பஞ்ச் அமைத்திருந்தது. ரோமன் ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்த பஞ்ச் மேட்ச்சை நிர்ணயிக்கும் வகையில் இருக்கும்.
சமீபத்தில் ரோண்டா ரோவ்ஸி ரோமனின் சூப்பர்மேன் பஞ்சை ஒரு லைவ் ஈவெண்ட்டில் வெளிப்படுத்தியிருந்தார். இது ரோமனுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இருந்தது. இந்த பஞ்சை ரோவ்ஸி நிரந்தரமாக பயன்படுத்துவாரா என்பது கேள்விக்குறிதான். மரியாதை நிமித்தமாக இவ்வாறு ரோவ்ஸி செய்திருக்கலாம் என்று பலரும் கூறிவருகின்றனர். ரோண்டா எதிர்வரும் RAW போட்டிகளில் இதை பயன்படுத்துவர் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
அடுத்தது என்ன ?
ரோண்டா ரோவ்ஸி WWE- வில் கூடியவிரைவில் உச்சத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ரோண்டா ரோவ்ஸி WWE-வின் செயற்குழு தலைவரான ட்ரிபிள் ஹெச்சை ரிங்கிற்குள் தாக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை WWE போட்டிகளை காண ரசிகர்கள் பெருமளவில் கூடுவதில்லை எனக் காரணத்தினால் WWE -வின் சூப்பர்ஸ்டாராக விளங்கும் ரோண்டா ரோவ்ஸிற்கு பெருமளவில் போட்டிகளில் ஈடுப்படுத்த WWE நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ரோமன் ரெய்ங்ஸ் WWE - விற்கு திரும்புவது கேள்விக்குறிதான், அவ்வாறு திரும்பினால் அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் ராஜ வரவேற்பை பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.