இந்த வாரம் இறுதியில் நடைபெறுகின்ற ராயல் ரம்பில்ஸ் விளையாடும் ஃபின் பெலார் தனது WWE வாழ்க்கையில் மிகப்பெரிய போட்டியான ராயல் ரம்பில்ஸ்-ல் ஃபிராக் லெஸ்னரை எதிர்கொள்ளவிருக்கிறார்.
சனிக்கிழமை அன்று நடைபெறும் ராயல் ரம்பில்ஸ்-ல் WWE யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்காக மல்யுத்த வீரர் ஃபிராக் லெஸ்னரை எதிர்கொள்ள ஃபின் பெலார் தயாராகிவருகிறார். தனது WWE வாழ்க்கையில் மிகப்பெரிய போட்டியான ராயல் ரம்பில்ஸ்-ல் களம் காண இருக்கிறார் .
பெரிய தலைப்பு போட்டிகளில் ஃபின் பெலார் தனது (demon balor) என்ற தோற்றத்தை பயன்படுத்தினார். ஆனால் இந்த வாரம் முடிவில் நடைபெறும் ராயல் ரம்பில்ஸ்-ல் (demon balor) என்ற தோற்றத்தை பயன்படுத்த போவதில்லை என்று ஃபின் பெலார் கூறியுள்ளார்.
இதற்கு முந்தைய போட்டிகளில் ஃபின் பெலார் தனது (demon balor) என்ற தோற்றத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றார்.
ஆனால், அவர் (demon balor) என்ற தோற்றத்தில் சிறந்தவராக இருப்பதை காட்டிலும். அவரது இயல்பான தோற்றத்தில் சிறந்தவராக விளங்கியுள்ளார்.
ஃபின் பெலார் தொழில்துறை மல்யுத்த வீரர் ஆவார். இவர் அயர்லாந்து நாட்டை சார்ந்தவர். இவருடைய இயற்பெயர் ஃபெர்கல் டெவிட். இவர் NXT-ல் சாம்பியன்ஷிப்பை ஒருமுறை வென்றார். சம்மர் ஸ்லாம் 2016-ல் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை 27 நாட்கள் வைத்துள்ளார் மற்றும் NXT சாம்பியன்ஷிப்பை 292 நாட்கள் வைத்துள்ளார்.
ஃபிராக் லெஸ்னர் இவரும் தொழில்துறை மல்யுத்த வீரர் ஆவார் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரராகவும் விளங்கிவருகிறார். இவர் WWE-ல் 2000 ஆம் ஆண்டு மல்யுத்த வாழ்க்கையில் அறிமுகமானார். இவர் மல்யுத்த போட்டியில் 2000-2007, 2012-2019 தற்போது வரையிலும் விளையாடி வருகிறார். ஃபிராக் லெஸ்னர் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ராயல் ரம்பில்ஸ்-ல் போட்டியில் வென்றுள்ளார். இவர் தொழில்துறை மல்யுத்த போட்டியில் இதுவரை ஆறு முறை வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். வெர்ஸ்டல் மேனியா 31 மற்றும் 34 ஆகிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளார். UFC-ல் ஒரு முறை ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார் மற்றும் UFC 100 , UFC 110 ஆகிய போட்டிகளில் விளையாடியும் உள்ளார். ஃபிராக் லெஸ்னர் தனது தொழில்முறை விளையாட்டான மல்யுத்த வாழ்க்கையில், பால் ஹேமன் ஒரு அங்கமாக திகழ்கிறார். ஃபிராக் லெஸ்னர் 80 , 90 -களில் மிகப்பெரிய மல்யுத்த வீரரான “டெட்மேன்” என்று அழைக்கப்படும் அண்டர்டேக்கரை இரண்டு முறை வென்றுள்ளார். ஃபிராக் லெஸ்னர் கோல்ட் ஃபெர்க் உடன் நடைபெற்ற சம்மர் ஸ்லாம் மல்யுத்த போட்டியில் 5 நிமிடங்களுக்கு உள்ளாக ஒருமுறை தோற்றார்.
ஃபிராக் லெஸ்னர் மற்றும் ஃபின் பெலார் இவர்கள் இருவரும் இதற்கு முன்பு எந்தவொரு பெரிய தலைப்பு போட்டிகளில் நேருக்கு நேராக மோதியது இல்லை. இந்த வாரம் முடிவில் நடைபெறும் ராயல் ரம்பில்ஸ்-ல் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவருக்கும் நடைபெறும் இந்த போட்டியானது இதற்கு முன்னர் ஃபிராக் லெஸ்னர் மற்றும் பிரவுன் ஸ்ட்ரோமன் ஆகிய இருவருக்கும் நடைபெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த போட்டியானது நடைபெறாமல் இருந்ததற்க்கு சில அறியப்படாத காரணங்கள் கூறப்படுகின்றன.