WWE-ல் பெரிய மல்யுத்த போட்டியான ராயல் ரம்பில்ஸ் போட்டியில் 30 மேன் ராயல் ரம்பில்ஸ் (அதாவது 30 மல்யுத்த வீரர்கள் நபர்கள் அடிப்படையில் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு பிறகு ஒவ்வொரு வீரராக ring-ல் களம் இறங்கி விளையாடுவார்கள், கடைசியாக ring-ல்இருக்கும் வீரர் வெற்றி பெறுவார்.) போட்டியானது மிகவும் பிரபலமானது. ராயல் ரம்பில்ஸ் போட்டியில் பெண்கள் பதிப்பு (30 women’sராயல் ரம்பில்ஸ் ) கூட சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. WWE-ல் ராயல் ரம்பில்ஸ் போட்டியானது 1988 ஆம் ஆண்டில் முதன் முதலாக தொடங்கியது, அதற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் இது நடைபெற்றது. அது WWE இன் வரலாற்றில் சில மிகச் சிறந்த தருணங்களை நமக்குக் கொடுத்துள்ளது, மேலும் சில crowd-popping, superstars இன் புகழ் பெற்ற வருகைகளும் கூட காணப்படுகின்றன. ஆனால், இவர்களை WWE ரசிகர்கள் மறந்து விட்டனர். அவர்களை பற்றி தான் இங்கு காண உள்ளோம்.
#ரிக்கார்டோ ரோட்ரிக்ஸ்
இவர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 மேன் ராயல் ரம்பில்ஸ் போட்டியில் 8-வது வீரராக ring-ல் களம் இறங்கி 2 நிமிடங்கள் மற்றும் 19 விநாடிகள் வரை நீடித்தது 9-வது வீரராக களம் இறங்கிய சான்டினோ மால்லல்லா ring-ல் இருந்து வெளியேற்றினார். இவர் அல்பர்டோ டெல்ரியோவின் P.A-வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
# எல் டொரிடோ
மெக்சிகன் சூப்பர் ஸ்டார் 2013 ஆம் ஆண்டில் லாஸ் மெடடோர்ஸின் ஒரு பகுதியாக WWE இல்அறிமுகமானார், 2016 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தார். அவரது அறிமுக மாதங்களுக்கு பிறகு WWE அவருக்கு 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ராயல் ரம்பில்ஸ்-ல் அவருக்கு ரோமன் ரெய்ங்க்ஸ் இடமான 20- வது இடத்தை கொடுத்தது. அவர் 20-வது இடத்தில் களம் கண்டு 1 நிமிடம் மற்றும் 49 விநாடிகள் வரை நீடித்தார். ஆனால், தனக்கு முன்னால் வந்த வீரரை அகற்ற முயன்றார்.
# ஜேமி நோபல்
இவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 மேன் ராயல் ரம்பில்ஸ்-ல் 11- வது வீரராக களம் கண்டு 28 விநாடிகள் வரை நீடித்தார். ஜேமி நோப் சேத் ரோலின்ஸின் J & J பாதுகாப்பின் ஒரு பகுதியாக இருப்பதற்கு முன், அவர் நிறைய கதையை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
# ஜொனாதன் கோச்மேன்
ஜொனாதன் கோச்மேன் இரண்டு ஒளிபரப்பாளர்கள் இடையே தகுதி போட்டியில் ஜெர்ரி 'கிங்' லாலெர் அடித்து 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ராயல்ரம்பில்ஸ்-க்கு தகுதிபெற்றார். இவர் இந்த போட்டியில் 30 விநாடிகள் வரை களத்தில் இருந்தார்.
# ட்ரூ கேரே
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனித்தன்மை கொண்ட இவர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 மேன் ராயல் ரம்பில்ஸ் போட்டியில் 5- வது வீரராக ring-ல் களம் கண்டு சில நேரங்கள் வரை விளையாடினார்.