2018 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் உள்ள நிலையில் பல WWE தருணங்களை கடந்து வந்துள்ளோம். காலம் சற்று வேகமாக தான் போகிறது. எனவே WWE போட்டிகளில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்கள் பல்வேறு விதமாக நடந்தன.
பலரும் எதிர்பார்த்திராத வகையில் WWE போட்டிகள் பல வியப்பூட்டும் நிகழ்வுகளை கொண்டிருந்தது.
எனவே, பல வியப்பூட்டும் தருணங்கள் போட்டிகளில் அமைந்திருந்தாலும், இந்தத் தொகுப்பில் இல்லாத சில தருணங்களை இங்கு குறிப்பிட்டு அங்கீகரிப்பது அவசியம்.
அவை,
1.ரே மிஸ்டீரியோ இந்த ஆண்டின் WWE ராயல் ரம்பிள் போட்டிகளில் திரும்பியது
2. சார்லோட் அசுகாவை ரெஸில்மேனியாவில் வீழ்த்தி அசுகாவின் தோல்வியற்ற பயணத்தை முடிவு பெறச் செய்தது.
3. அக்டோபர் 22ம் தேதி நடந்த RAW எடிஷனில், RAW டேக் டீம் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு டீன் ஆம்புரோஸ் சேத் ரோல்லின்ஸிற்கு எதிராக செயல்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, ரசிகர்களுக்கு வியப்பூட்டும் வகையில் அமைந்த மூன்று தருணங்களை பின்வருமாறு காண்போம்.
#3. WWE வரலாற்றில் முதன்முறையாக நடந்த பெண்களுக்கான 2018 ராயல் ரம்பிள் தொடக்க போட்டியில் ரோண்டா ரோஸ்சி ஆச்சரிய தோற்றமளித்த தருணம்.
பெண்களுக்கான ராயல் ரம்பிள் போட்டிகள் நடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே பல வதந்திகள் கிளம்பி இருந்தன. அதாவது UFC நட்சத்திரமான ரோண்டா ரோஸ்சி WWE ராயல் ரம்பிள் போட்டிகளில் அறிமுகமாவார் என்ற செய்தி.
“தி பேட்டஸ்ட் ஊமன் ஒன் தி பிளானட்” என்று அழைக்கப்படும் ரோண்டா ரோஸ்சி அறிவிக்கப்படாத தருணத்தில் அறிமுகமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. WWE பெண்களுக்கான ராயல் ரம்பிள் சாம்பியன்ஷிப்பை அசுகா வென்ற சில நொடிகளில் ரோண்டா ரிங்கிற்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். சாம்பியன்ஷிப்பை வென்ற அசுக்காவின் புகழை கெடுக்கும் வகையில் ரோண்டா நடந்துகொண்டதாக ஒரு தரப்பு ரசிகர்கள் ரோண்டாவை சாடியும் இருந்தனர்.
இதன் பிறகு ரோண்டா WWE ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஸ்டீபனி மக்மஹோனை கலப்பு டேக் போட்டியில் எதிர்கொண்டு துவம்சம் செய்திருந்தார் ரோண்டா.
தற்போது ரோண்டா WWE பெண்கள் பிரிவில் அசைக்கமுடியாத சூப்பர் ஸ்டாராக விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
#2. டேனியல் பிரையன் சுர்விவோர் சீரிஸிற்கு முன்பாக நடந்த “தி கோ ஹோம் ஷோ” -வில், ஏஜே ஸ்டேய்ல்ஸை எதிர்கொண்டு லோ பலோவ் எனப்படும் கவட்டைக் கீழ் அடிக்கும் முறையை பயன்படுத்தி WWE சாம்பியன்ஷிப்பை வென்ற தருணம். ( ஸ்மாக்டௌன் லைவ், நவம்பர் 13)
ஏஜே ஸ்டேய்ல்ஸ் பல லோ பலோக்களை ஷின்சுகே நாகமூராவிடம் அடிக்கடி பெறுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் டேனியல் பிரையன் இவ்வாறு செய்வார் என்பது யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு. ஸ்டேய்ல்ஸ் சுமார் ஒரு வருடமாக WWE சாம்பியனாக இருந்தவர். அவரிடம் சாம்பியன்ஷிப்பை வெல்வது கடினம் என்று உணர்ந்த பிரையன் இவ்வாறு செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் இன்றளவும் பேசிக்கொள்கின்றனர். பெரும்பாலான ரசிகர்கள் பிரையன் ஸ்டேய்ல்ஸை வீழ்த்துவார் என்றுதான் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் லோ பலோவ் மூலம் வெற்றி பெறுவார் என்பது எதிர்பாராத நிகழ்வாக இருந்தது.
பிரையனுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்று அனைவரும் அறிந்ததே. ஸ்டேய்ல்ஸை விட பிரையனுக்கு தான் ஆதரவு அதிகம். பெரும்பாலும் பிரையன் WWE சட்டத்திற்கு உட்பட்டு பல வீரர்களின் அநீதிக்காக குரல் கொடுப்பவர். WWE யூனிவெர்சின் ஹீரோவாக கருதப்படும் பிரையன் இவ்வாறு செய்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதன்பின்பு சுர்விவோர் சீரிஸில் யூனிவேர்சல் சாம்பியனான பிராக் லெஸ்னருக்கு எதிராக ஸ்டேய்ல்ஸ் களம் காண இருந்தார். கடைசி நேரத்தில் ஸ்டேய்ல்ஸுக்கு பதிலாக பிரையன் களமிறக்கப்பட்டார்.
#1. ரோமன் ரெய்ங்ஸ் தனது நோயை பற்றி வெளிப்படுத்திய தருணம்
அக்டோபர் 12ம் தேதி நடந்த மண்டே நைட் RAW-வில் சாதாரண உடையில் வந்த ரோமனை கண்டு ரசிகர்கள் குழம்பிப் போயினர். ரேய்ங்ஸ் இந்தப் போட்டிக்கு முந்தைய வாரங்களில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. எனவே ரேய்ங்ஸ் முழு வீச்சுடன் போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அதாவது ரோமன் லுகேமியா என்ற நோயால் 10 ஆண்டுகளாக அவதிப்படுவதாக அவரிடமிருந்தே வெளிவந்த செய்தி. இதைக் கேட்ட ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு தள்ளப்பட்டனர். பின்பு ரசிகர்கள் “ நன்றி ரோமன்” என்று முழக்கமிட்டவாறு அவரை உற்சாகப்படுத்தினர். அங்கிருந்த ரசிகர்கள் பலர் கண்ணீர் மல்க அழுதனர். WWE வரலாற்றில் இவ்வளவு கண்ணீர் பார்த்ததே இல்லை என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.
ரெய்ங்ஸ் தனது ஷீயீல்டு சகோதரர்களான டீன் அம்ப்ரோஸ் மற்றும் சேத் ரோல்லிஸினால் கண்ணீர் மல்க வழி அனுப்பப்பட்டார்.
WWE-லுள்ள மற்ற சூப்பர் ஸ்டார்களும் ரோமனுக்கு பிரியாவிடை அளித்தனர்
எழுத்து : ஷிராஸ் அஸ்லம்
மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்