WWE நிகழ்ச்சியை பொறுத்தவரையில் ஒரு சில பெண் போட்டியாளர்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடிப்பர். அந்த வகையில் முக்கியமான போட்டியாளர் ஏஜே லீ. இவரை தெரியாத WWE ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவரையும் ஈர்க்கும் வல்லமை பெற்றவர் இவர். இவற்றின் மல்யுத்த திறனைக் காட்டிலும் இவரின் அழகான தேகமே ரசிகர்களை பெருமளவில் கவர முக்கிய காரணமாக விளங்குகிறது. இந்நிலையில் இவரை பற்றி நமக்கு தெரியாத தகவல்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#) இவரின் பின்னங்கழுத்தில் உள்ள டாட்டூ
பொதுவாக WWE போட்டியில் கலந்து கொள்ளும் பெரும்பாலான வீரர்கள் அனைவரும் தங்களது உடம்பின் சில இடங்களில் டாட்டூ குத்திகொள்ளவது வழக்கம். ஆனால் பெரும்பாலான பெண் போட்டியாளர்கள் இந்த டாட்டூவை தங்களது உடம்பில் குத்திகொள்வது இல்லை. இந்தவகையில் ஏஜே லீ-ம் தனது உடம்பில் எந்தவித டாட்டூவும் குத்தி நாம் பார்த்ததில்லை. ஆனால் இவர் தன் பின்னங்கழுத்தில் குத்தியுள்ள டாட்டூ நம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தன் கழுத்தின் பின் பகுதியில் நியூமெர்க்கள் முறையிலான எண்களை டாட்டூவாக பதித்துள்ளார். அதாவது இந்த எண்கள் குறிப்பிடுவது 6, 16 மற்றும் 13. இது இவர் முதல் முறையாக டிவாஸ் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வென்ற நாளான ஜூன் 16 2013-ஐ குறிக்கிறது.
#) இவரின் பயிற்சியாளர் ஜெ லீதால்
WWE நிகழ்ச்சியில் அதிகம் ஆதிக்கம் கொண்ட பெண் போட்டியாளர்களின் ஏஜே லீ-க்கு முக்கிய இடமுண்டு. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக புளோரிடா மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார். அதில் இவரை பயிற்சிவித்தவர் தற்போதைய TNA நிகழ்ச்சியின் சாம்பியனாக விளங்கும் ஜெ லீதால். இவர்கள் இருவரும் இணைத்து சிறந்த டேக் டீம் சாம்பியன் அணியாக திகழ்ந்தனர். அதன் பின் WWE நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஏஜே லீ தனிப்பெரும் வீராங்கனையாக மாறினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் தங்களது நிஜ வாழ்க்கையிலும் உறவில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#) இவர் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக தனது கல்லூரி படிப்பினை பாதியிலேயே விட்டுவிட்டார்
ஏஜே லீ மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் கார்களில் தங்கி வந்துள்ளார். அது போக தனது பள்ளி படிப்பையே இவர் பகுதி நேர வேலை பார்த்து தான் படித்துள்ளார். பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர் தொலைக்காட்சி மற்றும் எழுத்தாளர் தொடர்பான பாடங்களை தேர்வு செய்து படித்து வந்துள்ளார் . அதன் பின் தனது கல்லூரி படிப்பிற்கு தன்னிடம் பணம் இல்லாததன் காரணமாக பாதியிலேயே தனது படிப்பினை நிறுத்தி விட்டார். அதன் பின் தீவீரமாக மல்யுத்த போட்டிகளுக்காக பயிற்சி பெற்று சிறந்த மல்யுத்த வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
#) வீடியோ கேம்களை விளையாடுவது இவருக்கு மிகவும் பிடிக்கும்
தற்போதைய காலகட்டங்களில் அனைவரின் கைகளிலும் எளிதாக ஸ்மார்ட் போன்கள் கிடைத்து விடுகின்றன. எனவே அதில் பெரும்பாலோர் கேம்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். அதேபோல ஏஜே லீ-ம் வீடியோ கேம்கள் விளையாடுவதில் அலாதி பிரியம் கொண்டவர். இதற்காக தனது வீட்டிலேயே தனியாக அறையையே ஒதுக்கியுள்ளார் இவர். இந்த WWE வீடியோ கேமில் கூட இவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
#) இவரின் உயிர் தோழி கேட்லின்
WWE போட்டிகளில் ஏஜே லீ சிறந்த போட்டியாளராக விளங்குவதற்கு இவரின் உயிர் தோழியான கேட்லின் -ம் முக்கிய காரணமாக விளங்குகிறார். திரையில் இவர்கள் இருவரும் எதிரிகள் போல காட்ட பட்டாலும் இவர்கள் மிகவும் நெருங்கிய தோழிகளாகவே இருந்து வருகின்றனர். இவர்களின் நட்பு 2010 ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாக NXT போட்டிகளில் கலந்து கொண்ட போது துவங்கியது. கேட்லின் தனது மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஏஜே லீ WWE போட்டிகளில் பல சாதனைகளை படைக்க வேண்டும் என அவருக்கு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
#) இவரின் உண்மையான பெயர்
WWE போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர் வீராங்கனைகளை தங்களது உண்மையான பெயர்களை மறைத்து புதிய பெயருடன் களமிறங்குகின்றனர். அந்தவகையில் ஏஜே லீ-ம் தனது உண்மையான பெயரை மாற்றியே இதில் களம் கண்டார். இவரின் உண்மையான பெயர் ஏப்ரல் ஜயனேடீ மெண்டெஸ் . இதனை சுருக்கமாக ஏஜே என மாற்றி கொண்டு முதல்தர மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றார். அதன் பின் WWE போட்டிகளில் கலந்து கொண்டதன் பின் ஏஜே லீ என மாற்றி கொண்டார். இந்த பெயரானது இவருக்கு சிறப்பானதாகவும் அமைந்தது.