இந்த வருடத்தின் ஆகச்சிறந்த போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டது WWE

WWE released best matches of this year
WWE released best matches of this year

இந்தக் கட்டுரையின் ஒரு முன்னோட்டம்:

இது டிசம்பர் மாதம் ஆதலால், NXT போட்டிகளையும் சேர்த்து இந்த வருடத்திற்கான(2018) சிறந்த மேட்ச் என்ற விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட போட்டிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது WWE.

இதற்கு முன் நடந்தவை:

WWE ல் இந்த வருடம் நடந்த போட்டிகளில் பெரும்பாலானவை பெண்களுக்காக முதல் முறையாக அரங்கேறியவையாகும். அதிலும் இந்த வருடம்தான் முதல் முறையாக பெண்களுக்கான “பே பெர் வியூ” நடைபெற்றது. மேலும் NXT ல் டேவ் மெல்ட்ஸரின் போட்டிகள் பல, ரேட்டிங்கில் ஐந்து ஸ்டார்களைப் பெற்றது. கடந்த ஆண்டு(2017) சிறந்த போட்டியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சுவாரசியமாக இருந்தது, இறுதியில் ஜான் ஸீனா மற்றும் ஏஜே ஸ்டைல்ஸ் க்கு இடையேயான போட்டி சிறந்த மேட்ச்சாக தேர்வு செய்யப்பட்டது. அந்த மேட்ச் ல் கடினமாக போராடிய ஸீனா இறுதியில் 16 வது முறையாக வேர்ல்ட் சாம்பியன் பட்டத்தை வென்று, இதற்கு முன் வென்றவர்களின் வரலாற்று சாதனையை சமன் செய்தார்.

இந்தக் கட்டுரையின் மையக்கரு:

Match of the Year
Match of the Year

‘சிறந்த மேட்ச் ‘ விருதுக்காக இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட போட்டிகளின் பட்டியல் பின்வருமாறு.

NXT டேக்ஓவர் : பிலடெல்பியாவில் NXT சாம்பியன்ஷிப்க்காக, அலைஸ்டர் ப்ளாக் vs ஆடம் கோல் மற்றும் ஜானி கார்கேனோ vs ஆன்ட்ரேடு “சியன்” ஆல்மாஸ் ஆகியோருக்கிடையே நடந்த போட்டி.

RAW 09/02/2018 : ‘தி கன்லெட் மேட்ச் ‘ எலிமினேஸன் சாம்பரின் முன்னோட்டமாக நடைபெற்ற இந்த மேட்ச் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதில் இறுதி வரை சேத் ராலின்ஸ் இருந்தார்.

எலிமினேஸன் சாம்பர்: WWE வரலாற்றில் முதல் முறையாக நடந்த பெண்களுக்கான எலிமினேஸன் சாம்பர் மேட்ச்.

பாஸ்ட்லேன் 2018 ல் நடந்த ஸின்ஷீகே நாக்கமோரா மற்றும் ரூஸவ் ஆகியோருக்கிடையேயான மேட்ச்.

205 லைவ் 30/03- Cruiserweight tournament ல் நடந்த , முஸ்தபா அலி மற்றும் ட்ரு குலாக் ஆகியோருக்கிடையேயான மேட்ச்.

NXT டேக்ஓவர் : (நியூ ஆர்லியன்ஸ்) நார்த் அமெரிக்கன் சாம்பியனுக்காக நடைபெற்ற, சிக்ஸ் மேன் லாடர் மேட்ச். மற்றும் இதில் நடந்த அலைஸ்டர் ப்ளாக் மற்றும் ஆன்ட்ரேடு “சியன் “ ஆல்மாஸ் ஆகியோருக்கிடையேயான NXT சாம்பியன்ஷிப் மேட்ச் மற்றும் தாமேஷோ கியாம்ப்பா vs ஜானி கார்கேனோவிற்கிடையேயான மேட்ச்.

ரெஸ்சல்ட்மேனியா 34 ல் நடந்த போட்டிகளான, ஷெத் ராலின்ஸ் vs தி மிஸ் vs பின் பேலர் ஆகியோருக்கிடையேயான இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் மேட்ச், ஆசுகா vs சார்லட் ஆகியோருக்கிடையேயான ஸ்மாக்டவுன் வுமன்ஸ் சாம்பியன்ஷிப்(இந்தப் போட்டியில் ஆசுகா வெற்றி பெற்று சார்லட்டின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்), ரான்டா ரூஸி மற்றும் குர்ட் ஆங்கிள் vs ஸ்டெப்பினி மெக்மான் மற்றும் டிரிபிள் எச் ஆகியோருக்கிடையேயான மேட்ச்.

RAW 30/4- பின் பேலர் vs ஷெத் ராலின்ஸ் ஆகியோருக்கிடையே நடந்த இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் மேட்ச்.

NXT 02/05 : பெட்டி டுனே VS ரோட்ரிக் ஸ்ட்ராங் ஆகியோருக்கிடையேயான மேட்ச்.

பேக்லாஷ் 2018 ல் ஷெத் ராலின்ஸ் மற்றும் தி மிஸ் ஆகியோருக்கிடையேயான இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் மேட்ச்.

205 லைவ் 29/05 - ஸெட்ரிக் அலெக்சாண்டர் மற்றும் பட்டி மர்பி ஆகியோருக்கிடையேயான க்ரூசியர்வெயிட் சாம்பியன்ஷிப் மேட்ச்.

NXT டேக்ஓவர் : (சிகாகோ) ஓனி லோர்கான் மற்றும் டேனி பர்ச் vs ரோட்ரிக் ஸ்ட்ராங் மற்றும் கைல் ஓ’ரியலி ஆகியோருக்கிடையேயான NXT டாக் டீம் சாம்பியன்ஷிப் மேட்ச், தாமஸோ கியாம்ப்பா VS ஜானி கார்கேனோ ஆகியோருக்கிடையேயான சிகாகோ ஸ்ட்ரீட் பைட் என்ற மற்றுமொரு போட்டி.

மனி இன் த பாங்க் – அலெக்ஸா பிலிஸ் தன்னுடைய மனி இன் த பாங்க் ஐ, நியா ஜாக்ஸ் மற்றும் ரான்டா ரூஸி ஆகியோருக்கிடையேயான மேட்ச்சில் காஷ் செய்தார். இந்த மேட்ச்சும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் கிங்டம் சாம்பியன்ஷிப் தொடரில் நடைபெற்ற தி அன்டெஸபியூடட் எரா மற்றும் பிரிட்டிஷ் ஸ்ட்ராங் ஸ்டைல் ஆகியவற்றுக்கிடையேயான மேட்ச்.

ஸ்மாக்டவுன் 19/06- ல் நடந்த கன்லெட் மேட்ச். இதில் ரூஸவ் வெற்றி பெற்றார்.

RAW 25/06 ல் ஷெத் ராலின்ஸ் மற்றும் டால்ஃப் ஜிங்லர் ஆகியோருக்கிடையேயான இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் மேட்ச்.

NXT டேக்ஓவர் :(ப்ரூக்லின்) ஷையனா பாஸ்லர் மற்றும் கெய்ரீ ஸேன் ஆகியோருக்கிடையேயான NXT வுமன்ஸ் சாம்பியன்ஷிப் மேட்ச், நார்த் அமெரிக்கன் சாம்பியனுக்காக நடைபெற்ற ஆடம் கோல் VS ரிக்கோசெட் மேட்ச், மஸ்டாகே மவுன்ட்டன் vs தி அன்டெஸபியூடட் எரா இடையேயான NXT டாக் டீம் சாம்பியன்ஷிப் மேட்ச்.

சம்மர் ஸ்லாம் 2018 ல் நடந்த தி மிஸ் மற்றும் டேனியல் பிரையன் இடையேயான மேட்ச்.

RAW 27/08 ல் நடந்த கெவின் ஓவென்ஸ் மற்றும் ஷெத் ராலின்ஸூக்கு இடையேயான இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் மேட்ச்.

மே யங் கிளாஸிக் 2018-ல் நடந்த கில்லர் கெல்லி vs மியிக்கோ சாட்டோமூரா ஆகியோருக்கிடையேயான முதல் கட்ட மேட்ச், மற்றும் அதன் அடுத்த கட்டமாக நடந்த மெர்சிடிஸ் மார்டின்ஸ் vs மியிக்கோ சாட்டோமூரா மேட்ச்.

ஹெல் இன் அ ஸெல்-ல் நடந்த பெக்கி லின்ட்ச் மற்றும் சார்லட் ப்ளேயர் இடையேயான ஸ்மாக்டவுன் வுமன்ஸ் சாம்பியன்ஷிப் மேட்ச், டீன் ஆம்ப்ரோஸ் மற்றும் ஷெத் ராலின்ஸ் vs தி டாக்ஸ் ஆஃப் வார் ஆகியோருக்கிடையேயான ரா டாக் டீம் சாம்பியன்ஷிப் மேட்ச்.

NXT 19/09 - ல் நடந்த பெட்டி டுனே மற்றும் ரிக்கோசெட் ஆகியோருக்கிடையேயான மேட்ச்.

சூப்பர் ஷோ – டவுன்: ல் நடந்த ஸெட்ரிக் அலெக்சாண்டர் மற்றும் பட்டி மர்பி ஆகியோருக்கிடையேயான க்ரூசியர்வெயிட் சாம்பியன்ஷிப் மேட்ச்.

205 லைவ் 24/10 : முஸ்தபா அலி மற்றும் ஹியிடியோ இட்டாமி ஆகியோருக்கிடையேயான பால்ஸ் கவுன்ட் எனிவேர் மேட்ச்.

எவல்யூஷன் - பெண்களுக்காக முதல் முறை நடைபெற்ற இந்த பே பெர் வியூ ல் நடந்த பெக்கி லின்ட்ச் மற்றும் சார்லட் ப்ளேயர் இடையேயான லாஸ்ட் வுமன் ஸ்டான்டிங் மேட்ச்.

அடுத்தது என்ன?

“மேட்ச் ஆஃப் தி இயர்” ன் வெற்றியாளர் வரும் வாரங்களில் WWE-ன் மூலம் அறிவிக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள போட்டிகள் அனைத்தையும் WWE நெட் வொர்க்கில் மேட்ச் ஆஃப் தி இயர் என்ற வகையின் கீழ் கண்டு கழிக்கலாம்.

App download animated image Get the free App now