டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது மல்யுத்த உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. டபுள்யூ டபுள்யூ ஈ-யில் பல விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் ரெஸ்டில் மேனியா நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அப்படிப்பட்ட இந்த ரெஸ்டில் மேனியா நிகழ்ச்சியில் ஒரு சில கனவு போட்டிகள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு நடைபெறாமல் போனது. ஒரு மல்யுத்த ரசிகராக இருப்பதில் சிறந்த விஷயங்களில் ஒன்று அவர்களுக்கு நடக்கும் போட்டியானது நடப்பதற்கு முன்பு அந்த போட்டிகளுக்கு தோற்றமளிப்பதும், அந்த போட்டியில் என்ன நடக்கும் என்பதையும் நினைத்துப் பார்ப்பதுதான். இந்த கனவு போட்டிகள் நடைபெறாமல் இருந்த காரணங்களை பற்றி இங்கு காண்போம்.
ஸ்டீவ் ஆஸ்டின் vs ஹல்க் ஹோகன் (ரெஸ்டில் மேனியா 18 )
80-களின் பிற்பகுதியிலும் 90-களிலும் தொழில்முறை மல்யுத்தத்தில் ஹல்க் ஹோகன் மிகப்பெரிய மல்யுத்த வீரராக இருந்தார். ரெஸ்டில்மேனியாவின் தி ஷோகேஸ் ஆஃப் இம்மார்ட்டல்ஸ் என்ற தலைப்பில், தொடர்ச்சியாக ஐந்து முறை தலைசிறந்த வீரராக இருந்தார். ஒரு சில வருடங்களுக்கு பிறகு ஸ்டீவ் ஆஸ்டின் மிகப்பெரிய மல்யுத்த வீரராக உருவெடுத்தார். அவரது புகழ்பெற்ற 'ஆஸ்டின் 3:16' டி-ஷர்ட் அப்போது பிரபலமாக இருந்தது. அதுமட்டுமின்றி ப்ரெட் ஹார்ட், தி ராக், வின்ஸ் மக்மஹோன் ஆகியோருடன் அவரது அதிருப்தி முற்றிலும் வியப்பாக இருந்தது. ரெஸ்டில் மேனியா 18-ல் ஸ்டீவ் ஆஸ்டின் மற்றும் ஹல்க் ஹோகன் இவர்களின் வருகைக்கு பிறகு, இவர்கள் இருவருக்கும் போட்டி நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது ஹல்க் ஹோகனுக்கு எதிராக தி ராக்-க்கும் மற்றும் ஸ்டீவ் ஆஸ்டின்-க்கு எதிராக ஸ்காட் ஹால்-க்கும் ரெஸ்டில் மேனியா 18-ல் போட்டியை முடிவு செய்தது.
பிராக் லெஸ்னர் vs ஸ்டீவ் ஆஸ்டின் ( ரெஸ்டில் மேனியா 19 )
பிராக் லெஸ்னர் 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தோல்வியின் விளிம்பில் இருந்தார், இருந்தபோதிலும் அவர் ஹல்க் ஹோகன், அண்டர் டேக்கர், தி ராக் ஆகியோரை தாக்கினார். பிராக் லெஸ்னர்-யை எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்று தெரியவில்லை என நாம் நினைக்கும் போதெல்லாம், ஸ்டீவ் ஆஸ்டின் பெயர் நிச்சயமாக நம் மனதில் தோன்றும். பிராக் லெஸ்னர் மற்றும் ஸ்டீவ் ஆஸ்டின் ஆகிய இருவருக்கும் ரெஸ்டில் மேனியா 19-ல் ஒரு போட்டி வைத்திருந்தால் கிளாசியாக இருந்திருக்க முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது தி ராக்-க்கு எதிராக ஸ்டீவ் ஆஸ்டின்-க்கும், கர்ட் ஆங்கிள்-க்கு எதிராக பிராக் லெஸ்னர்-க்கும் முடிவு செய்தது.
தி அண்டர் டேக்கர் vs ஸ்டிங் ( ரெஸ்டில் மேனியா 31 )
90-களில் டபுள்யூ சி டபுள்யூ -யில் மிகப்பெரிய மல்யுத்த வீரராக ஸ்டிங் மற்றும் டெட் மேன் என்று அழைக்கப்படும் தி அண்டர் டேக்கர் ரெஸ்டில் மேனியாவில் மிகப்பெரிய வீரராக இருந்தனர். இவர்கள் இருவரும் அசாதாரணமான மல்யுத்த வீரர்களாக இருந்த போதிலும், அவர்களது பாத்திரங்களில் சில ஒற்றுமைகள் இருந்தன. சூப்பர்ஸ்டார்ஸ் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களைப் பற்றி மர்மமான உணர்வைக் கொண்டிருந்தனர் மற்றும் போட்டியில் வளையத்திற்குள் தோன்றுவதற்கு முன் எதிரிகளின் மனதில் பயத்தை ஏற்படுத்தி விளையாடுவதை பார்க்கும்போது மிக நன்றாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக டிரிபிள் ஹெச்-க்கு எதிராக ஸ்டிங்-க்கும் மற்றும் ப்ரே வைட்-க்கு எதிராக தி அண்டர் டேக்கர்-க்கும் ரெஸ்டில் மேனியா 31-ல் போட்டி பதிவு செய்யப்பட்டது.