பல வருடங்களாகவே WWE-வில் அனல் பறக்கும் போட்டிகளை கண்டுள்ளோம். குறிப்பாக ஒரு சில வீரர்களின் பகையை சார்ந்து வரும் போட்டிகள் விறுவிறுப்புடன் காணப்படும். அவ்வகையில் ஜான் ஸினா மற்றும் ரேண்டி ஆர்டன் இடையேயான போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதன்முறையாக ஒருவருக்கொருவர் எதிராக களம் கண்டனர். இதுதான் இவர்களது பகையின் தொடக்கப்புள்ளி.
பிரபலமான இவ்விரு வீரர்கள் தற்போது WWE-வின் அடையாளமாக உள்ளனர். எதிர்காலத்தில் ஹால் ஒப் பாமெர்ஸ் (Hall Of Famers) பட்டியலில் இடம்பெறுவார்கள். ஜான் ஸினா நேர்வழியில் புகழின் உச்சிக்குச் சென்றவர், மாற்றாக ரேண்டி ஆர்டன் டபிள்யூ டபிள்யூ வரலாற்றில் ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரத்திலேயே தென்பட்டுள்ளார்.
எனவே இவர்களுக்கு இடையே நடைபெற்ற மூன்று பிரசித்தி பெற்ற போட்டிகளைப் பற்றி இத்தொகுப்பில் காண்போம்.
#3 சம்மர்ஸ்லாம் 2007
ஜான் ஸினா மற்றும் ரேண்டி ஆர்டன் 2007ஆம் ஆண்டு சம்மர்ஸ்லாம் தொடரில் பேப்பர் வியூ போட்டியில் களம் கண்டனர். இப்போட்டியே இவர்களின் நெடுநாள் பகைக்கு விதை போட்டது. இப்போட்டிக்கு முன்பாகவே தனிப்பட்ட வகையில் ரேண்டி ஆர்டனுக்கு ஜான் ஸினாவிடம் பிரச்சினை நிலவி வந்தது.
பல போட்டிகளில் ஜான் ஸினா விளையாடிக் கொண்டிருக்கும்போது ரேண்டி ஆர்டன் ஆட்டத்தில் நுழைந்து ஸினாவை தாக்க முற்படுவார். அப்போதைய காலத்தில் இவ்விரு வீரர்களுக்கு இடையேயான போட்டிகளை ரசிகர்கள் காண அதிகம் விரும்பினர். இப்போட்டியிலும் அவ்வாறே நடந்தது, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் ஜான் ஸினா.
ரேண்டி ஆர்டனின் வலிமையையும், நேர்த்தியான உடலமைப்புயும் தாண்டி ஸினாவால் எதையும் செய்ய முடியவில்லை. இப்போட்டியின் இறுதியில் ஆர்டனின் பிடியிலிருந்து தப்பித்த ஜான் ஸினா ஒருவழியாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
#2. ஹெல் இன் எ செல் (Hell In a Cell) 2009.
2009ஆம் ஆண்டு இவ்விரு வீரர்களும் தனிப்பட்ட பரிமாணத்தில் பகையை வெளிப்படுத்தி வந்தனர். காரணம் முந்தைய போட்டிகளில் எதிராளியின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் போட்டியில் இருந்து விலகும் "I QUIT" போட்டியில் சண்டையிட்ட ரேண்டி ஆர்டன், ஜான் ஸினாவின் வெற்றி பாதையை முறியடிக்க முடியவில்லை.
எனவே ஹெல் இன் எ செல் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டார் ரேண்டி ஆர்டன் .
இப்போட்டியில் இருவரும் சமமாக சண்டையிட்டு வந்தனர், ஆபரேஷன் செய்யப்பட்ட ஜான் ஸினா வின் கழுத்து பகுதியில் நாற்காலியால் வைத்து தாக்கியதன் காரணமாக கடும் காயங்களுக்கு உள்ளானார் ஸினா.
ரேண்டி ஆர்டனின் பிரபலமான பினிஷேரான "அர்கேவோ" பயன்படுத்தியும் ஆர்டனால் வெற்றியை சுவைக்க முடியவில்லை, இதில் வளையத்திற்கு முனையில் ஜான் ஸினா வின் கைகளை கட்டிப்போட்டு கன்னத்தில் உதைக்கும் பாணியான “சீன் லாக்”க்கை பயன்படுத்தி ஜான் ஸினாவை சுய நினைவை இழக்கச் செய்தார் ரேண்டி ஆர்டன். நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக வெற்றியை தன்வசப்படுத்தினார் ரேண்டி ஆர்டன்.
#1. அயன் மேன் போட்டி - 2009
2009-ஆம் ஆண்டு பல டைட்டில் மாற்றங்களை நோக்கி பயணித்தது WWE. இவ்விரு வீரர்களின் பாதையை முடிவுக்கு கொண்டுவர உரிமைகள் கையகப்படுத்தும் போட்டியை நடத்தியது WWE. இப்போட்டியில் சமநிலையாக இருவரும் மாறி மாறி தங்களை தாக்கிக் கொண்டனர்.
அப்பட்டமான பொருட்களை வைத்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு சமர்ப்பிப்பதற்கான(Submission) அசைவுகளையும் எதிர்கொண்டனர்.
இப்போட்டியில் ரேண்டி ஆர்டன், ஜான் ஸினா வளையத்திற்கு உள்வரும் முன்னதாகவே தாக்குதலை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் ஸினா தனது பிரபலமான "எஸ் டி எஃப்" லாக்கை பயன்படுத்தி ஆர்டனை டேப் அவுட் செய்ய வைத்தார்.