கெவின் ஓவன்ஸ் டபுள்யூ டபுள்யூ ஈ-ன் முக்கிய மல்யுத்த வீரர்களில் ஒருவராக உள்ளார். துரதிர்ஷ்டவசமாக, கெவின் ஓவன்ஸ் கடந்த ஆண்டு காயமடைந்தார், அவர் முழங்கால் காயத்தில் இருந்து குணமாகி வருகிறார். எனினும், அவர் டபுள்யூ டபுள்யூ ஈ-ல் மீண்டும் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
டபுள்யூ டபுள்யூ ஈ கடந்த வாரம் கெவின் ஓவன்ஸ் வீடியோவைக் காட்டியதால், அவர் விரைவில் டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாஸ்ட்லேன்-க்கு முன்பாக அவர் திரும்பி வந்தால் அது சுவாரசியமாக இருக்கும். கெவின் ஓவன்ஸ் காயமடைவதற்கு முன்பு சிவப்பு பிராண்டின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் தனது மல்யுத்த வாழ்க்கையில் வெற்றி பெற்றார். கெவின் ஓவன்ஸ் டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு வருவதற்கு முன்னர் குறிப்பிட்ட வட்டாரத்தில் ஒரு பெரிய மல்யுத்த வீரராக இருந்தார். கெவின் ஓவென்ஸ் 2014 இல் டபுள்யூ டபுள்யூ ஈ-க்காக கையெழுத்திட்டார், மேலும் அவர் NXT இல் கணிசமான வெற்றி பெற்றார். கெவின் ஓவன்ஸ் ஒரு முறை NXT பட்டத்தை வென்றுள்ளார். அவர் டபுள்யூ டபுள்யூ ஈ-ல் 2015 ஆம் ஆண்டு ராவ் நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் போட்டியில் ஜான் செனாவை தோற்கடித்து அதிர்ச்சியூட்டும் துவக்கத்தைத் தொடங்கினார். அவர் யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப்-பை ஒரு முறையும் மற்றும் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை ஒரு முறையும் வென்றுள்ளார். கெவின் ஓவன்ஸ் டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெஸ்டில் மேனியா 35 நிகழ்ச்சியானது நடைபெற இன்னும் இரண்டு மாதங்களுக்கு குறைவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியானது ஏப்ரல் 7 ம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள மெட்லைவ் ஸ்டேடியத்தில் நடைபெறும். உண்மையில், ரெஸ்டில் மேனியா 29 அதே இடத்திலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ரெஸ்டில் மேனியா 35-ல் கெவின் ஓவன்ஸுக்கு சிறந்த எதிர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.
ஃபின் பெலார்
ஃபின் பெலார் கெவின் ஓவன்ஸுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய எதிராளி. ஃபின் பெலார் தற்போதைய இன்டர்கான்டினென்டல் சாம்பியனாக இருக்கிறார். ஃபின் பெலோர் எலிமினேஷன் சேம்பர்-ல் 2 ஆன் 1 கேன்டிகேப் போட்டியில் லியோ ரஷ் மற்றும் பாபி லஷ்லி-யை தோற்கடித்து இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அவர் 2014-இல் டபுள்யூ டபுள்யூ ஈ-க்காக கையெழுத்திடுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் மல்யுத்தம் செய்தார். அவர் NXT இல் ஒரு பெரிய மல்யுத்த வீரராக திகழ்ந்தார். மேலும், சில குறிப்பிடத்தக்க போட்டிகளை அவர் தயாரித்தார். NXT சாம்பியன்ஷிப் பட்டத்தை 292 நாட்கள் வரை வைத்திருந்தார். கெவின் ஓவென்ஸ் மற்றும் ஃபின் பெலோர் ஆகியோர் NXT இல் ஒரு மறக்கமுடியாத போட்டியைக் கொண்டிருந்தனர். இதை வைத்து பார்க்கும் போது ரெஸ்டில் மேனியா 35-ல் கெவின் ஓவென்ஸ்-க்கு ஃபின் பெலோர் சிறந்த எதிரியாக இருப்பார்.
பாபி லஷ்லி
பாபி லஷ்லி சிவப்பு பிராண்டின் ஒரு பகுதியாக உள்ளார் மற்றும் கெவின் ஓவன்ஸ் காயமடைவதற்கு முன்னர் அவர்கள் ஒரு சில போட்டியில் சண்டையிட்டனர்.
தற்போது, பாபி லஷ்லி இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக போராடுகிறார். பாபி லஷ்லி கடந்த ஆண்டு டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு திரும்பினார். அவர் டபுள்யூ டபுள்யூ ஈ-ல் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார் மற்றும் அவர் யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஒரு முறையும், ECW வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டு முறையும்,இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஒருமுறையும் வென்றிருக்கிறார். பாபி லஷ்லி பாஸ்ட்லேன்க்குப் பிறகு கெவின் ஓவன்ஸுக்கு எதிராக போட்டியை மீண்டும் தொடங்கலாம்.
டேனியல் பிரையன்
ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் தற்போதைய வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியனாக இருக்கும் டேனியல் பிரையன்-க்கு கெவின் ஓவன்ஸ் ஒரு சிறந்த எதிராளி என்றால் அதை மறுக்க முடியாது. டேனியல் பிரையன் ஃபாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் கோஃபி கிங்ஸ்டனை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் டேனியல் பிரையன் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டேனியல் ப்ரையனுக்கு ரெஸ்டில்மேனியா 35 இல் ஒரு சிறந்த எதிரியாக கெவின் ஓவென்ஸ்-யை கருதலாம்.